மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் […]
Tag: ArvindKejriwal
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக இருக்கக் கூடிய நிலையில், உயிரிழப்பு 239 ஆகியிருக்கிறது. கொரோனாவால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிர மாநிலத்தில் 1,574 பேருக்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர் . இதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநில அரசு […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் பணி முடிந்து வீடு செல்லும்போது மற்றும் வெளியே கடைக்கு செல்லும்போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். கொரோனா அச்சத்தால் தவறான புரிதலால் அவர்கள் தாக்கப்படுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். […]
இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார். இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது நீட்டிக்கப்படுகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இன்றைய தினம் 4 மணி நேரத்திற்கும் மேலாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அது சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும் […]
கொரோனா பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் […]
மூன்றாவது முறையாக முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில், வரும் 16ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அம்மாநில முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாகப் பதவியேற்கவுள்ள நிலையில், வரும் 16-ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. வரும் ஞாயிறு காலை 10 மணியளவில் டெல்லி ராம்லீலா […]
மத, இன, மொழி, சாதி ஆகிய அடையாளங்களை முன்வைத்தே சுதந்திர இந்தியாவின் அரசியல் மையம் கொண்டிருந்த நிலையை மாற்றி, நல்லாட்சி என்ற புள்ளியை அடிப்படையாகக் கொண்டு உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல், டெல்லியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. நாடு இன்று கெஜ்ரிவால்களைத் தேடும் நிலைமையில் உள்ளது. முன்பெல்லாம் நல்லவன் யாராவது கிடைத்தால், “என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்” என்று கூறிய காலம் போய், ’முதலமைச்சர் நாற்காலி காலியாக இருக்கு, நாடு ஆள வா எனக் கெஞ்சும் நிலைக்கு […]
திட்டங்களை செயல்படுத்தியது மட்டுமில்லாமல் பல அரசியல் நகர்வுகளை சாதூர்யமாக நகர்த்தி மோடிக்கு எதிராக சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி அலுவலகத்தின் வெளியே அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் ஒரு பதாகையை ஏந்தி நின்று கொண்டிருந்தார். அதில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையே என எழுதப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு 4 […]
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லி தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள். டெல்லி […]
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போல், உடையணிந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை வகித்து, ஆட்சியை தக்க வைத்துள்ளது. அடுத்த இடத்தில் எட்டு […]
சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]
வீட்டிலிலுள்ள ஆண்களை அழைத்துச் சென்று பெண்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று […]
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடத்தை வீதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் மீறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ, சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாக இருக்கிறதெனக் […]
அரவிந்த் கெஜ்ரிவால் கம்யூனிசத்தின் உண்மையான நகல் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறினார். டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறியதாவது:- உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு மக்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கிறது. எனக்கு யார் மீதும் […]
சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டுள்ளது இன்னும் 2 நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக ஏற்கெனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போது அளித்து வரும் 200 யூனிட் இலவச […]
நாளை மதியம் 1 மணிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம் என பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், நாளை மதியம் 1 மணிக்குள் டெல்லி பாஜக வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், […]
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி, இன்று வெளியிடவுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கடும் முனைப்பில் உள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இன்று தேர்தல் […]
நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட் செய்ததையடுத்து, தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது […]
டெல்லி சட்ட சபை தேர்தலில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், […]
பாஜகவினர் என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகள் தினமும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், அரசானது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரையில், டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து […]
2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரி 08-ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பாஜக பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, ” 2015ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றார். அதையடுத்து என்ன நடந்தது? வாரணாசியில், பஞ்சாப்பில், ஹரியானாவில் என்ன நடந்தது? அவர்கள் […]
பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி நடத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முதல் பரிசு பெறுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகின்றது. அதேசமயம் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என காங்கிரஸ், […]
டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென்று முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் […]
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி சிந்து மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று டெல்லி முதல்வர் பாராட்டியுள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]
டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வென்றது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அதிர்ச்சியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி டெல்லி மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தமுறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு செயல்படுத்த வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி […]
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் […]