Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைதியான தமிழகம்…. டெல்லி போல மாற்ற முயற்சி…. ஸ்டாலினை சாடிய EPS ..!!

தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி…… ”ஓருத்தன் கூட இருக்க மாட்டான்”….. பாஜக MP பர்வேஷ் வர்மா சூளுரை ..!!

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்த நாளே ஷாஹீன் பாக்கில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சூளுரைத்துள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜகவை ஆதரித்து டெல்லி விகாஸ்பூரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “ஷாஹீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

2019 – 2020ஆம் ஆண்டிற்கு கூடுதல் நிதியாக 6,580 கோடி ஒதுக்கீடு – நிதி அமைச்சர்..!!

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசுக்கு விருது மழை! – முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்.!!

கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]

Categories
மாநில செய்திகள்

பெண்ணை காப்பாற்றும் போது உயிரிழந்த இளைஞர்…. குடும்பத்திற்கு ரூ 10,00,000 – முதல்வர் அறிவிப்பு.!!

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ… சீ…. என்ன ? இது….. ஆளுநர் உரையை கிண்டல் செய்த ஸ்டாலின் ….!!

ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்!!

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியருக்கு பாதிப்பா? வாய்ப்பே இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

என்.ஆர்.சி சட்டத்தினால் தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக அதிமுகதான் முதல் குரல் கொடுக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறும் அதிமுக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெல்லை கண்ணன் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்!

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். ஆளுநர் உரையின் மீது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி: கோலம் போடுபவர்கள் அவரவர் வீட்டு வாசலில் போட்டால் பிரச்னை இல்லை. அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டு அந்த வீட்டு உரிமையாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாடி வைத்துக் கொண்டு ….. பைத்தியக்காரன்….. கோமாளி …. அமைச்சரையே வசைபாடிய MLA …!!

அமைச்சர் உதயகுமாரை கடுமையான  வார்த்தைகளால் திமுக MLA ஜெ.அன்பழகன் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்த போது ,  இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை தரப்படும் என்று ஏன் இந்த கபட நாடக ஆடுறீங்க. இதே மசோதா மேலவையில் வரும்போது இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக அதிமுக 11 பேர் , பாமக அன்புமணி என அனைவரும் எதிர்த்து ஓட்டு போட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஏதில் ? முதலிடம் …. ஆதங்கத்தில் அடுக்கிய MLA ….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக MLA ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக சட்டசபை மரபுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பேரவை வளாகத்தில் பேசிய அவர் , சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதல் இடம் என்று முதல்வர் சொல்லியிருகிறார்கள். ஏதில் ? முதலிடம் கொடுத்தார்கள். சட்ட ஒழுங்கு சரியில்லை என்றால் முதலிடம் கொடுத்துள்ளார்கள் என்கிறார். நெல்லை கண்ணனை கைது பண்ணீங்க சரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா இருக்கீங்க……. ”உடனே கோவம் வருது”….. MLA அன்பழகன் காட்டம் …!!

சட்ட ஒழுங்கில் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் உரையில் கூறி இருந்ததற்கு திமுக MLA அன்பழகன் கடும் விமர்சனம் செய்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சட்டப்பேரவை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக MLA ஜெயக்குமார் அமைச்சர் மற்றும் அதிமுக அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில் , நான் பேசுவதை அவர்களால் தாங்க முடியவில்லை. குடியுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 BREAKING:  கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ அன்பழகனுக்கு தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கியது.இதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆளுநர் உரையில் பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சரை ஒருமையில் பேசியதாகவும் , அவரை கைநீட்டி பேசுவதாகவும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவை முனைவரும் , துணை முதலமைச்சருமான  ஓ பன்னீர்செல்வம் அவரை உடனடியாக பேரவையில் நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : NRC-யை முதல் ஆளாக அதிமுக எதிர்க்கும் ….!!

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்குமென்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2_ஆவது நாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.இதில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்த பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றுதான் திமுக இன்று காலை வெளிநடப்பு செய்தது. அதற்குப் பின்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்க்கு அமைச்சர் ஆர் பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி பண்ணுறது தான் இவரோட வேலை – முதல்வர் ஆதங்கம்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியது அமளியை ஏற்படுத்தியுள்ளது. 2_ஆம் நாளான இன்று நடைபெற்று  வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போதெல்லாம்  நடந்தாலும் திமுக உறுப்பினர் ஜெ அன்பழகன் பேரவையில் பிரச்சினையை ஏற்படுத்துவது போன்ற பேச்சுக்கள் தான் பேசுகிறார் என்று குறிப்பிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க பேசினது தப்பு தான்…. நீங்களும் அப்படியே பேசுறீங்க…. முக.ஸ்டாலின் சமரசம் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேட்சால் சட்டசபையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரை ஒருமையில் பேசிய திமுக MLA ….. பேரவையில் அமளி …..!!

சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் பேரவையில் அதற்கான விளக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சட்டம் ஒழுங்கு சரியில்லை” பேரவையில் முதல்வர் பதில் …!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற திமுக MLA கேள்விக்கு முதல்வர் பேரவையில் பதிலளித்தார். 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேரவையில் பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசின் மீது சில கருத்துக்களை அவர் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி , நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும் ,  அதற்கான விருதினை மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் தளபதி இப்படி பண்ணுறீங்க….. 2 நாளுமே வெளிநடப்பு தானா ? ஸ்டாலின் விளக்கம் …!!

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரை புறக்கணித்து திமுகவினர் 2ஆவது நாளாக வெளிநடப்பு செய்தனர். 2_ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியான திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , கடந்த 2_ஆம் ஆம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு , இந்திய குடியுரிமை திரும்ப சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினேன். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : திமுக_வினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு …!!

குடியுரிமை திருத்த சட்டமசோதாவை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : 15 நிமிடத்திற்கு சட்டப்பேரவை ஒத்திவைப்பு ….!!

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடர் இரங்கல் தீர்மானத்தை அடுத்து 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மறைமுக தேர்தல் சட்ட மசோதா” இன்று தாக்கலாக வாய்ப்பு …!!

சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இன்றைய கூட்டத்தொடரில் மேயர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : சட்டப்பேரவை 2_ஆம் நாள் நிகழ்வு தொடங்கியது ….!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவின் 2_ஆம் நாள் நிகழ்வு தற்போது தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநர் உரையல்ல… ஆளும்கட்சியின் உரை… கிண்டல் ட்விட் செய்த ஸ்டாலின்..!!

இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என்று மு.க ஸ்டாலின் கிண்டலாக ட்விட் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் – ஆய்வில் உள்ளதாக தனபால் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்குப்பின், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்று முடிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேரவைத் தலைவர் தனபால். அப்போது அவர், ”நாளை காலை மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையை புறக்கணித்த டிடிவி, தமிமுன்.!

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்ட பேரவையில் வெளிநடப்பு… திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து!

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாரம்சங்கள்!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய சாரம்சங்களை கூறினார். உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலை 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9 ஆம் தேதி வரை நடைபெறும்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக 15ஆவது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உரையின் இடையே குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று என்று வலியுறுத்தி திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு” பேரவையில் ஆளுநர் உரை …!!

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அம்சங்களை பேசி வருகின்றார். தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் .நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ.க்கு மணி மண்டபம் கட்டப்படும்” பேரவையில் ஆளுநர் உரை …!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தி வருகின்றார். தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை அறிவியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இத பத்தி பேசுங்க கவர்னர்…. ”கொத்தாக கிளம்பிய உபிக்கள்”… முதல் நாளே இப்படியா ?

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதை ஏற்கமறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதே போல டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”தொடங்கியது சட்டப்பேரவை” திமுக வெளிநடப்பு …!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால்‌ புரோகித்‌ உரையுடன் தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதான எதிர்கட்சியான திமுக கேள்வி எழுப்பவுள்ளதால், பேரவை சூடுபிடிக்கும் என […]

Categories
அரசியல்

சட்டப்பேரவை கூட்டம்: விவாத பொருளாக மாறிய அணுக்கழிவு மையம் ..!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளன. கடந்த 28ஆம் தேதியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டத்தை மறுநாளன்று  ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம்: அதன்படி கல்வித் துறை ரீதியான கேள்விகளை ஓ.பன்னீர்செல்வம் எழுப்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தப்பியது அதிமுக, குறைந்தது திமுக” நிம்மதியில் EPS ,OPS …!!

விக்கிரவாண்டி MLA  ராதாமணி மரணத்தையடுத்து சட்டசபையில் திமுக பலம் மீண்டும் குறைந்துள்ளது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக கூட்டணி 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் 97_ஆக இருந்த தன்னுடைய பலத்தை 110_ஆக அதிகரித்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திமுக கூட்டணியின்  பலம் தமிழக சட்டசபையில் திமுக 102 + காங்கிரஸ் 7 என 109_ஆக குறைந்து. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றம் தேர்தல் 604….. சட்டமன்றம் இடைத்தேர்தல் 230…… இன்றோடு நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

அமமுக நாடாளுமன்ற , சட்டமன்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.         இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற […]

Categories
அரசியல்

அதிமுக நாடாளுமன்ற , சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக […]

Categories

Tech |