கள்ளக்காதலியின் அண்ணனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு வேலாண்டிபாளையத்தில் இருக்கும் திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் ராஜகோபாலனை கண்டித்துள்ளனர். ஆனாலும் ராஜகோபால் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு ராஜகோபால் சென்றுள்ளார்.அப்போது அந்த பெண்ணின் அண்ணனான ஜான்மகேந்திரன் என்பவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து […]
Tag: attempt to murder
மாமனார், மாமியாரை அரிவாள்மனையால் தாக்கி மருமகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாசார்பட்டி பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சுப்புலட்சுமி மதுரை மாவட்டம் மேல வெளி வீதியில் உள்ள தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் கூறி உள்ளார். இதனால் சுப்புலட்சுமியின் பெற்றோரான பாண்டியும், பஞ்சவர்ணமும் […]
லோடு ஆட்டோ ஏற்றி பஞ்சாயத்து துணை தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் நாராயணன் என்ற பால் வியாபாரி வசித்து வருகிறார். இவர் செம்மரிகுலம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு அதே ஊரில் வசிக்கும் லிங்கதுரை என்ற உறவினருடன் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியபுரத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நாராயணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பின்னால் லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த லிங்க […]