கர்நாடகா அரசியலில் குமாரசாமி அரசு கவிழ்ப்பதற்கு நடைபெற்ற அனைத்தும் அமித்ஷா_வுக்கு தெரிந்தே நடந்ததாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறிய ஆடியோ ஓன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக அந்த கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக […]
Tag: audio
திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார். […]
அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க […]
என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடத்துவது வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் தங்க தமிழ் செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டரிடம் பேசும் ஆடியோ பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 40 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியும் , அதிமுக தலைமையில் ஒரு அணியும் , […]