இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 22 கிரிகோரியன் ஆண்டு : 234_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 235_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 131 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது. 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார். 1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள். 1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை “துரோகிகள்” என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர்ஆரம்பமானது. 1654 – பிரேசிலில் இருந்து […]
Categories