ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் லியாண்டர் பயஸ் இணை தோல்வியடைந்தது. 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – லாட்வியாவின் ஜெலனா இணை இன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆடியது. இந்த இணையை இங்கிலாந்தின் ஜாமி முர்ரே – அமெரிக்காவின் பெதானி இணை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜாமி முர்ரே இணை முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றின. […]
Tag: Australian Open Series
ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் முன்னேறினார். ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஃபீவர் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்சை எதிர்த்து கனடா வீரர் மிலோஸ் ரவுனிக் ஆடினார். இந்தப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஜோகோவிச்சின் கைகள் உயர்ந்தேயிருந்தன. முதல் செட் ஆட்டத்தை 6-4 எனக் கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். ஜோகோவிச்சிற்கு ரவுனிக் சிரமம் […]
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தோல்வியடைந்தார். 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டியில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபை எதிர்த்து அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின் ஆடினார். முன்னதாக நடந்த மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகாவை, கோகோ வீழ்த்தியிருந்ததால், […]
ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இந்தத் தொடரில் 99 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆறுமுறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பிய வீரர் ஃபிலிப் கிரஜினோவிக்குடன் ( Filip Krajinovic) பலப்பரீட்சை நடத்தினார். […]
ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றைய பிரிவின் இரண்டாவது சுற்றின்போது கோபமடைந்த நவோமி ஒசாகா, தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கியெறிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒசாகா பங்கேற்கும் போட்டிகளில் ரசிகர்கள் முழுவதும் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர். இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது […]
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றால் அதில் வெல்லும் பரிசுத் தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன் என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் […]