Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

அலறிய ஆஸி… ”புஜாரா,பண்ட்” அசத்தல் பேட்டிங்… சிட்னி டெஸ்ட் ”டிராவில்” முடிந்தது …!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்திருக்கிறது. இந்திய அணி 200 ரன்களைக் கூட தொடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தில் சேவாக்  பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அழுத்தமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் 5 விக்கெட்டுக்கு மேல் இழக்காமல் இந்த போட்டியை டிரா செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்து இருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாந்தமாக இருந்துக்கொண்டே ஆக்ரோஷ ஆட்டம் –  ஆட்ட நாயகன் கேப்டன் ரஹானே ….!!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பாக்சிங்டே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ரஹானே. அடிலெய்டில் தோல்வி, கேப்டன் கோலி இல்லை, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஷமி இல்லை என்பது மாதிரியான நெருக்கடியான நிலையில், “இந்தியா இந்தத் தொடரில் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சொல்லி வந்தபோதும் அசராமல் அணியை திறம்பட வழிநடத்தியதோடு, தனிப்பட்ட முறையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் ரஹானே. நல்ல வேளையாக ஆஸ்திரேலியா டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறித்தனம் காட்டிய ஷஃபாலி, ஸ்மிருதி மந்தனா… ஆஸி.யை வீழ்த்திய இந்தியா….

முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி மெல்போர்னில் இன்று நடந்தது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததால், இன்றையப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸி. அணிக்கு முதல் ஓவரே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

10 பந்து…. 5 விக்கெட் …. 91_இல் ஆல் அவுட் …. இந்தியாவை பந்தாடியது …!!

ஆஸ்திரேலியா இந்தியா மோதிய மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சளர்கள் 10 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தி  அசத்தினர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. நேற்று நடந்த இதன் மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சுருண்ட இந்திய மகளிர் அணி!

முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதன் மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரேச்சல் ஹேனஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா […]

Categories

Tech |