Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS vs PAK 2019: முதல் நாளிலேயே மூட்டையைக் கட்டிய பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா…..!!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பாபர் ஆசம்(6), ரிஷ்வான்(0), இமான் உக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேவாக்கின் அப்பர் கட் ஷாட்டை முயற்சித்த ஸ்மித் ….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முன்னாள் இந்திய வீரர் சேவாக் போன்று அப்பர் கட் ஷாட் அடிக்க முயன்ற காணொலி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஸ்டீவ் ஸ்மித் நேற்றையப் போட்டியில் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா; தொடரில் முன்னிலை….!!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கான்பராவில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழை ஆடிய ஆட்டத்தால் கைவிடப்பட்ட பாகிஸ்தான் – ஆஸி. ஆட்டம்…!!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் – ஃபக்கர் சமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி வீசப்பட்ட இரண்டாவது பந்திலேயே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AUSvPAK டி20 தொடர்…. காயம் காரணமாக விலகிய நட்சத்திர வீரர்.!!

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் இந்தாண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது முதுகில் காயமடைந்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் பாகிஸ்தான் அணி பங்கேற்ற எந்தவொரு தொடரிலும் இடம்பெறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் […]

Categories

Tech |