ஆஸ்திரேலியாவுக்காக டி20யில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை மார்கஸ் ஸ்டோனிஸ் முறியடித்துள்ளார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக ஸ்டோய்னிஸ் இணைந்துள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை 19வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்க்கஸ் […]
Tag: #AUSvSL
டி20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ஆஸ்திரேலியா. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 5 ரன்னில் […]
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது. இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதலிரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இதனிடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் […]
ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முழங்காலில் காயமடைந்தார்.இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த அவர் இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்தும் […]