மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நெஞ்சுப்பகுதியில் காளை முட்டியதில் காயமடைந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மேலும் 60 பேர் சிறிய காயங்களுடன் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tag: Avaniyapuram
அவனியாபுரம் அருகே அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரின் தலையைத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே இருக்கும் தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்துவரும் அவா(எ)முத்துச்செல்வம் என்பவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், முத்துச்செல்வம் வீட்டில் இருந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த […]
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டை காண பாலமேட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டிலும் காணும் பொங்கலான நாளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 936 வீரர்களும் முன்பதிவு செய்து தயார் நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கி […]
உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். தற்போது உறுதிமொழி எடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அவனியாபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் மந்தை முன்பாக அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் தற்போது காளைகள் உள்ளே வருவதற்கு ஏற்றவாறு தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் […]
பொங்கல் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நெரிசல் இன்றி நிற்பதற்கு போதுமான ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் காளைகள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை செய்துள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காளைகள் நெரிசல் இன்றி செல்வதற்கும் காளைகள் கூடுவதற்கும் அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் […]
மதுரை அவனியாபுரத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுரையின் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் போலீசார் சோதனை தீவிரப்படுத்தியுள்ளனர்