நாடு முழுவதும் 71 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது இந்த விழாவில் பிரதமர் மோடி, பிரேசில் நாட்டு அதிபர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் வீரதீர செயல்களை செய்து கடமை தவறாமல் பணியாற்றிவரும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் டெல்லியில் பா சிதம்பரத்தை கைது செய்ய சுவர் ஏறிக் குதித்த சிபிஐ ராமசாமிக்கு நம் குடியரசு தலைவர் சிறந்த காவலர் எனும் விருதை வழங்கியுள்ளார். […]
Tag: # Award
குடியரசு தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல நடந்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. கோவை நகர காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையம் எனும் பதக்கத்தை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாகை மாவட்டதீயணைப்பு வாகன ஓட்டுநர் ராஜாவிற்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்டதை பாராட்டி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதே போன்று பெண்ணை கடத்திய ஆட்டோவை துரத்தி பிடித்த இறந்த […]
மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் கிறிஸ்டில் 55 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்டு 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பில் சென்று பத்து பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியாவிற்கு தனியார் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் அறிமுகமானவர் லாஸ்லியா .இவர் பிக்பாஸில் இருந்தபோது இவர் மீது காதல் கொள்ளாத இளைஞர்களே கிடையாது .சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இவர்தான் வலம் வந்து கொண்டிருந்தார் .இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . இவருக்காக ரசிகர்கள் மன்றத்தையும் ஏற்படுத்தினர் . இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் […]
யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கனடாவின் பியான்கா ஆண்ட்ரியாசு, அந்நாட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். கனடா நாட்டில் ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில் ஆச்சரியமூட்டும் விதத்தில், யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியனும் கனடா […]
நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது ரஜினி ரசிகரான எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை நெடுஞ்சாலை அருகில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பகுதிவாரியாக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் […]
சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்தின் 2-வது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. இதில், தூய்மை பராமரிப்பு சின்னத்தின் இரண்டாவது இடமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், சுழற்சி முறையில் சுகாதாரப் […]
உலகிலேயே அழகில் சிறந்த ஆணாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகில் சிறந்த ஆண் யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்த வாக்குகளின் அடிப்படையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் பிரபல ஹொலிவுட் நடிகர்களான கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் பேட்டின்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். உலக புகழ்பெற்ற பிரபலங்கள் அனைவரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை […]
உயிரியல் பூங்காவில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதில் கில்லாடியாக செயல்பட்டு வரும் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது அசாமில் உள்ள காசிரங்கா உயிரியல் பூங்காவில் வேட்டைக்காரர்கள் அத்துமீறி நுழைந்து புலிகள் காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளை சுட்டுக் கொல்கின்றனர், இவற்றை தடுப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு குழுவில், குவாமி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் இடம் பெற்றுள்ளது. இந்த குவாமி நாய் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளது. விஸ்வநாத் என்ற பகுதி […]
கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார். இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த ஊரில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளார்கள். இந்த கிரிக்கெட் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்ற அணியை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் சென்னைக்கு அழைத்து வந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் […]