சமூக வலைதளங்கள் வாயிலாக மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட 77 பேரை காவலர்கள் கைது செய்தனர். அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மக்களின் உணர்வு ரீதியான விவகாரம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
Tag: #AyodhyaJudgment
அயோத்தி தீர்ப்பு குறித்து, ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “அயோத்தி விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிப்பதன் […]
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக்கொள்ள […]
அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் […]
அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் […]