இயல்பாகவே நமக்கு நற்குணங்கள் ஏராளம் இருந்தாலும், அதனை மற்றவர்களிடம் காண்பிப்பது நமது வெளிப்புறத் தோற்றம் தான். வெளிப்புற தோற்றத்தின் அடிப்படையில் தான் முதலில் மக்கள் நம்மை கணிக்கிறார்கள். அதை தாண்டி பழகும் போது மட்டுமே நம்முடைய குணம் அவர்கள் கண்ணுக்கு தெரியும். பொதுவாக வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சிரிப்பு தான். நமது சிரிப்பு அழகாக இருக்கும் பட்சத்தில், எளிதாக மற்றவர்களை கவர்ந்து அவர்களிடம் நல்ல நட்புறவுடன் பழகிக் கொள்ள முடியும். […]
Tag: banana
கோவையில் வாழைபயிரிட்ட விவசாயிகள் நஷ்டஈடு வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு ஊடுபயிராக வாழை மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யப்படும். விதைக்கப்ட்ட வாழை கன்று ஓராண்டுக்குள் நல்ல விலை கொடுத்து விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஈட்டி தரும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு வாழை நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. ஆனால் […]
குழந்தைகளின் எடையை அதிகரிக்க கூடிய பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழ சப்பாத்தி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். வாழைப்பழத்தை துண்டுதுண்டாக நறுக்கி அதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதேனும் ஒரு இனிப்பு பொருளைச் சேர்த்து நன்றாக பிசைந்த பின் மிக்ஸியில் அடித்து வாழைப்பழ கூழாக மாற்ற வேண்டும். அதன்பின் அந்தக் கூழை கோதுமை மாவில் விட்டு சிறிது நீர் சேர்த்து உருண்டையாக திரட்டி பின் சிறு சிறு உருண்டையாக பிடித்தவைகளை சப்பாத்தி கட்டையால் […]
பொதுவாக, மக்கள் மிகவும் விரும்பும் பழம் வாழைப்பழமாகும், இது பல மருத்துவ குணங்கள் நிறைந்தது மற்றும் நமது பட்ஜெட்டில் கிடைக்கும். இரும்பு, டிரிப்டோபான், வைட்டமின்-பி 6, வைட்டமின்-பி போன்ற பண்புகள் இருப்பதால் மக்கள் ஒவ்வொரு நாளும் வாழைப்பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் கவனமாக இருங்கள், ஏனெனில் இந்த சத்தான வாழைப்பழமும் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ஆம், ஒரு நாளில் அதிக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக வாழைப்பழங்களை சாப்பிடுவது உங்களை எவ்வாறு […]
வாழைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா..? வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் கலந்து, வதக்கி கை கால் வலி இருக்கும் இடத்தில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் சரியாகும். நாம் உண்ணும் உணவில் வாழைப்பூவையை சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழைப்பூவை சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கி அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் நம் உடலில் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவைப்படும் […]
ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது. வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. […]
அல்சர் குணமாக…. மணத்தக்காளி கீரை மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் . தேங்காய் பால் தேங்காய் பால் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் . மாம்பழ விதைகள் இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரலாம் . பச்சை வாழைப்பழம் இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் […]
சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள் ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
சரவணப் பாயசம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – 250 கிராம் வெல்லம் – 500 கிராம் தேங்காய் – 1/4 மூடி வாழைப்பழம் – 3 ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் இளநீர் – 1 பச்சைக் கற்பூரம் – 1 நெய் – 250 மில்லி தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசியை வேக விட்டு , வெந்ததும் வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பச்சைக் கற்பூரம் போட்டுக் கிளறவும். பாயசப் பதம் வந்ததும் […]
அசைவ உணவுகள் செரிமானம் அடைய செய்ய வேண்டியவை.. அசைவம் சாப்பிடும் போது , மிதமான வெந்நீரை பருகினால் உணவு செரிப்பது எளிமையாகிறது. குளிர்ந்த நீர் குடித்தால் உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்து செரிமான பிரச்சனையை உருவாக்கும் . அசைவ உணவு செரிக்காமல், அவதிப்படும் போது, சீரக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். வாழைப்பழத்தில் அதிகளவு இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுத்து நெஞ்செரிச்சலையும், செரிமான […]
மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 1 வாழைப்பழம்- 1 சப்போட்டா- 1 கொய்யா- 1 சர்க்கரை – 1 கப் சிட்ரிக் ஆசிட் – 1/2 டீஸ்பூன் டோனோவின் எசன்ஸ் – 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஆப்பிள் , வாழைப்பழம் , சப்போட்டா , கொய்யா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு […]
இனிப்பு வாழைப்பழ அப்பம் தேவையான பொருட்கள் : மைதா மாவு – 2 கப் சர்க்கரை – 1/2 கப் வாழைப்பழம் – 4 ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன் சோடா மாவு – 1 சிட்டிகை முந்திரி – தேவையன அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சர்க்கரை, வாழைப்பழம் , முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவு போல் கரைத்துக் […]
முகம் பளபளவென்று மின்ன முற்றிலும் இயறக்கையான முறையில் வாழைப்பழ மசாஜ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. காலநிலை மாற்றங்கள் முக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக சரும வறட்சி, சரும உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு முக அழகு குறையும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரும்பாலானோர் கிரீம் வகைகளைபயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் மட்டும் பயன்படுத்தி முக அழகை தக்க வைத்து கொள்ளலாம். இந்த இரண்டு பொருள்களும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை […]
சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி … தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 4 சீனி – தேவையான அளவு பால் – 2 கப் ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப் செய்முறை : முதலில் வாழைப்பழங்களை துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் பால், ஐஸ்கிரீம், சீனி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி தயார் !!!
கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும். தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]