கல்வியாளர்கள் டிக்டாக் மூலம் பாடம் நடத்த பயன்படுத்துகின்றனர் – டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிக்டாக் உள்ளிட்ட 59 அலைபேசி செயலிகளை இந்திய அரசு நேற்று தடை விதித்தது. இதையடுத்து கூகுள் மற்றும் ஆப்பில் பிளே ஸ்டோர்களில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வந்த அதன் பயனாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் […]
Tag: #bantiktok
ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டியதால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சிவசங்கர் சாகித் என்பவர் தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்பொழுது டிக் டாக்கில் வீடியோ எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அச்சமயம் எதிர்பாராத நேரத்தில் அவர்களது வாகனத்தின் மீது டிரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவசங்கர் சிகிச்சை பலனின்றி […]
தமிழகத்தில் TIKTOK செயலியானது உறுதியாக தடை செய்யப்படுமென அமைச்சர் மணிகண்டன் பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததை அடுத்து கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன்,சமீபகாலமாக TIKTOK செயலி மூலம் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், கலாச்சார சீர்கேடு நிகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய வீடியோக்களை கண்காணிக்க சிறப்பு […]
அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இணையதள சேவையில் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொழுது போக்கு செயலி டிக் டாக் இதில் விளையாட்டாக வீடியோவை பதிவு செய்வது சில நேரங்களில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முதுகுளத்தூரில் […]