Categories
மாநில செய்திகள்

பெண்ணை காப்பாற்றும் போது உயிரிழந்த இளைஞர்…. குடும்பத்திற்கு ரூ 10,00,000 – முதல்வர் அறிவிப்பு.!!

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ… சீ…. என்ன ? இது….. ஆளுநர் உரையை கிண்டல் செய்த ஸ்டாலின் ….!!

ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்!!

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் – ஆய்வில் உள்ளதாக தனபால் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்குப்பின், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்று முடிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேரவைத் தலைவர் தனபால். அப்போது அவர், ”நாளை காலை மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாரம்சங்கள்!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய சாரம்சங்களை கூறினார். உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலை 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9 ஆம் தேதி வரை நடைபெறும்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக 15ஆவது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உரையின் இடையே குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று என்று வலியுறுத்தி திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு” பேரவையில் ஆளுநர் உரை …!!

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அம்சங்களை பேசி வருகின்றார். தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் .நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ.க்கு மணி மண்டபம் கட்டப்படும்” பேரவையில் ஆளுநர் உரை …!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தி வருகின்றார். தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை அறிவியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இத பத்தி பேசுங்க கவர்னர்…. ”கொத்தாக கிளம்பிய உபிக்கள்”… முதல் நாளே இப்படியா ?

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதை ஏற்கமறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதே போல டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”தொடங்கியது சட்டப்பேரவை” திமுக வெளிநடப்பு …!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Categories
அரசியல்

#BREAKING : ”7 பேரை விடுவிக்க முடியாது” முதல்வரிடம் ஆளுநர் விளக்கம் …!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் […]

Categories
மாநில செய்திகள்

“ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும்” ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!!

ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் […]

Categories
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி….!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள் ஆகும். தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்ற அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பிறந்த நாளைக்கூட கொண்டாடாமல் எளிமை காட்டிக்கொண்டு வழக்கம் போல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை […]

Categories

Tech |