Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆண்டில் 2 முறை….. “நாங்க இல்லாம உலக கோப்பையை யார் பார்ப்பார்கள்?…. பாகிஸ்தானில் ஆடலன்னா…. இந்தியாவுக்கு ரமீஸ் ராஜா எச்சரிக்கை..!!

எங்கள் நாட்டுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்றும், பாகிஸ்தான் ஆடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023 இல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார், மாறாக மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்று பரிந்துரைத்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலி..! சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வு குழு நீக்கம்…. அதிரடி காட்டிய பிசிசிஐ..!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை நீக்கி உத்தரவிட்டது பிசிசிஐ.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் வெள்ளிக்கிழமை மாலை (நவம்பர் 18) நீக்கியுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2022ல் இந்தியா படுதோல்வியடைந்து வெளியேறியதே பிசிசிஐ எடுத்த இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். சூப்பர் 12 குழு-நிலை ஆட்டங்களில் சிறப்பாக ஆடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : குளிர்ச்சியா இருக்கு….. “உணவு சரியில்லை”…. அதிருப்தியில் இந்திய வீரர்கள்…!!

இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நன்றாக இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி கோலியின் அதிரடியால் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே இரவில் சச்சின், மோடி ஆக முடியுமா?….. எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது…. மெளனம் கலைத்த கங்குலி..!!

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி, தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று பேசியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா  தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி பிசிசிஐ அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிசிசிஐ தலைவர் பதவி….. இனி முடியாது….. “ஒரே இரவில் மோடியாக முடியுமா?”….. மனம் திறந்து கங்குலி பேசியது என்ன?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி,ஒரேநாளில் யாரும் மோடியாக முடியாது என்றும், தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று கூறினார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா  தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும்…. இந்தியா vs பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்?….. நடத்த தயாரான இங்கிலாந்து….. பிசிசிஐ அளித்த விளக்கம்..!!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முறைசாரா திட்டத்தை பிசிசிஐ நிராகரித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடருக்கான நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக,இரு அணிகளுக்குமிடையே ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) முன்வந்துள்ளது. ஆனால் வணிக நோக்கத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பை வழங்கினாலும் எதிர்காலத்தில் இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களுக்கான வாய்ப்புகள் “பூஜ்ஜியத்திற்கும் குறைவாக உள்ளன என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL-ல் ரசிகர்களுக்கு அனுமதி?”…. BCCI திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

அண்மையில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கூறியிருந்தார். மேலும் போட்டிகள் அனைத்தும் வான்கடே மைதானம், டி. ஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல் திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நியூசிக்கு எதிரான டி20… கோலிக்கு ஒய்வு…. கேப்டனாக களமிறங்கும் ரோகித்… இந்திய அணியில் யார் யார்?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல் ராகுல் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் உள்ளனர். விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்… “புதிய 2 அணிகள் அறிவிப்பு”… ஏலத்தில் எடுத்தவர்கள் இவர்கள் தான்!!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 2 புதிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு தொடராகும். இந்த தொடரில் இதுவரை சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் இடம் பெற்று விளையாடிக் கொண்டிருந்தன.. தற்போது இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.. தற்போது அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாகக் கொண்ட இரண்டு அணிகள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கொரோனா பரவல்” வீரர்களை பாதுகாக்க….. “மின்னணு பேட்ஜ்” பிசிசிஐ தகவல்….!!

கொரோனாவிடமிருந்து ஐபிஎல் வீரர்களை பாதுகாக்க பிசிசிஐ முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.  கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி இந்தியாவில் நடத்த சாத்தியமில்லை என்பது தெரிய வரவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து போட்டியை நடத்த திட்டமிட்டது. இதன்படி, வீரர்கள் போட்டியில் பங்கேற்க தங்களை தீவிரமாக ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இதன்படி, ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் தோனி….. BCCI புகழாரம்….!!

தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.  கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல வைத்தவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL-13 TABLE” நம்பாதீங்க…. அது போலி…. BCCI விளக்கம்….!!

சமுக வலைதளங்களில் வலம் வரும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு முதல் ஊரடங்கு உத்தரவானது தற்போதுவரை ஆறாவது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு ஆண்டின் ஐபிஎல் 13 வது சீசன் தொடர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த நாட்டில் தான் நடைபெறும் – வெளியான அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்… அனுமதி கேட்டுள்ளோம்… பிசிசிஐ கோரிக்கை..!!..!!

ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: பிசிசிஐ தலைவர் கங்குலி..!!

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் இல்லமால் காலி மைதானத்திலாவது ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த தொடக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச்25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் முடிவடைந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ… தல தோனி எங்கே?…குழப்பத்தில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர். மேலும், #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க நாட்டுல நடத்துங்க… தலையசைக்குமா? இந்தியா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Indian Premier League 2020 season has now been postponed indefinitely: BCCI Official pic.twitter.com/5kWlfHCh54 — ANI (@ANI) April 15, 2020 சீனா தொடங்கி உலக […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி : மே 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பின்னர் நடத்தலாமா? எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது: பிசிசிஐ அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15க்கு பிறகும் ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை – பிசிசிஐ அறிவிப்பு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் வரும் ஏப்., 14ம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கொரோனா நிவாரணம் : BCCI ரூ 51,00,00,000 வழங்குவதாக அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 51 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 900க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ “என்றென்றும் காத்திருக்க முடியாது”, அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடங்க வேண்டும் -மிதாலி ராஜ்

அடுத்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். படிப்படியாக அபிவிருத்தி செய்வதற்கு முன்னர் சிறிய அளவில் திட்டமிடுமாறு பி.சி.சி.ஐ யிடம் மிதாலி ராஜ் கேட்டுக்கொண்டார். மகளிர் ஐபிஎல் தொடங்க பிசிசிஐ “என்றென்றும் காத்திருக்கக் கூடாது” என்று இந்திய மகளிர் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறினார், படிப்படியாக அதை வளர்ப்பதற்கு முன்பு அடுத்த ஆண்டு இதை சிறிய அளவில் செய்யும்படி வாரியத்தை வலியுறுத்தினார். “அடுத்த ஆண்டுக்குள் அவர்கள் ஒரு மகளிர் ஐபிஎல் தொடங்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் நாளை பிசிசிஐ கூட்டம்… ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு – முக்கிய தகவல் வெளியாக வாய்ப்பு!

மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே […]

Categories
விளையாட்டு

ஐபிஎல் 2020 பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு… அதிருப்தியில் வீரர்கள்!

ஐபிஎல் 2020 தொடரை வெள்ளும் சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்படுகிறது என செய்தி வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் ஒருசில நாட்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட […]

Categories
கிரிக்கெட் சேலம் மாவட்ட செய்திகள் விளையாட்டு

சேலம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் தோனி…

சேலம் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோனி பங்குபெறுவார். சேலத்தில் 8 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் காலை ஒன்பது மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார் புதிய மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் கூறியிருப்பதாவது “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதுமட்டுமின்றி நடக்கும்  போட்டிகள் அனைத்திலும் தோனி நிச்சயம் பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திட்டமிட்டபடி ஐபிஎல் மார்ச் 29-ல் தொடங்கும்!!

ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி மார்ச் 29-ஆம் தேதி தொடங்குமென பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் 2020 ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஐ.பி.எ.ல் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, திட்டமிட்டப்படி வருகின்ற மே 24-ஆம் தேதி ஐ.பி.எல் இறுதி போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அது கோலியின் முடிவு… கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் அவதாரம் குறித்து கங்குலி!

ரிஷப் பந்திற்கு பதில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது கேப்டன் கோலியின் முடிவு என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ரீப்ளேஸ்மெண்ட்டாக கருத்தப்படும் ரிஷப் பந்த், சமீப காலங்களாக விக்கெட் கீப்பிங் + பேட்டிங் இரண்டிலும் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்துவந்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல். […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வேலைவாய்ப்பு

உங்களுக்கு தகுதி இருக்கா ? ”பிசிசிஐ_யில் வேலை” கெத்தான வாழ்க்கை …!!

இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தேர்வுக்குழு உறுப்பி9னர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை சில நாள்களுக்கு முன்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படுத்தினார். இதனால் இந்திய அணியைத் தேர்வுசெய்யும் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”மகளிருக்கான அனைத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அனைத்து உறுப்பினர்களும் புதிதாக தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ புதிய ஒப்பந்தத்தில் தோனி இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தப் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறாமல் போனது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 அக்டோபர் மாதத்திலிருந்து 2020 செப்டம்பர் மாதம் வரையிலான இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 27 வீரர்களின் ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் முதன்மையாக ஏ+ கிரேடில் (ரூ.7 கோடி) இந்திய அணி கேப்டன் விரட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் 87 வயது ரசிகை காலமானார் – பிசிசிஐ இரங்கல்

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து பிரபலமடைந்த 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை, உடல்நலக்குறைவால் காலமானார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு பெரும் ஆதரவை அளித்தனர். அப்போது எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியைக் காண 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியின் உருவப்படத்தை பழைய மொபைல் போன்களால் செதுக்கிய ரசிகர்!

பழைய மொபைல் போன்கள், கம்பிகளை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது தீவிர ரசிகர் செதுக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கவுகாத்தி நகரைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ராகுல் பாரெக் என்பவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இன்னொரு தோனி கிடைப்பது கடினம் ‘ – கங்குலி..!!

தோனியைப் போன்ற திறமையான வீரர் மிக விரைவில் கிடைப்பது மிகவும் கடினம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், தோனி இனி விளையாடுவாரா இல்லை… ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இதனிடையே தோனியின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4 ஆண்டுகளில் பெண்களுக்கான ஐ.பி.எல்….-கங்குலி

அடுத்து வரும் 4 ஆண்டுகளில்  திறமையான வீராங்கனைகளை கொண்ட  7 அணிகள் கொண்டு  ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.   மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறன்து. கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னராக பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட  20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்ற நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிசிசிஐக்கு சிறந்த தேர்வாளர்கள் தேவை”… அதிரடி காட்டிய யுவராஜ்..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்ய வேறு நல்ல தேர்வாளர்கள் தேவை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவருகிறார். இந்த சூழலில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பகல் – இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் – விராட்!

இந்திய அணி பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளை பார்க்க நேரம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐசிசி டெஸ்ட் போட்டிகளை ஒருநாள் போட்டிகள் போல் பகல் – இரவு போட்டிகளாக நடத்த முடிவு செய்து சில போட்டிகளை நடத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கங்குலியைப் புகழ்ந்துதள்ளிய ரவி சாஸ்திரி….!!

பிசிசிஐயின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி கங்குலி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்தச் சூழலில் கங்குலியின் நியமனம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பிரபல ஆங்கில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் இந்திய அணியை வழிநடத்தியது போல் ஊழலின்றி வழிநடத்துவேன் – கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போன்று பிசிசிஐ-யும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனிடையே சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இன்று பதவியேற்றார். இதன்மூலம் 65 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஒருவர் பிசிசிஐயின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார் …..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விண்ணப்பித்து இருந்தார். கடந்த 33 மாதங்களாக தலைவர் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று BCC_யின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டு  பொறுப்பை ஏற்றிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39ஆவது தலைவராக சவுரவ் கங்குலி பதவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மம்தா பானர்ஜி எனக்கு அக்கா” தாதா கங்குலி அதிரடி …!!

பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு எதைக் குறிக்கிறது? முதன்முறையாக நான் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமானது. எதிர்காலத்தில் பிசிசிஐ-ல் இருந்து அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா? (ஒரு சின்ன புன்னகையுடன்) அரசியல் எங்கு தான் இல்லை? இந்தியாவில் மிகவும் முக்கியம் அது! நம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 ஆண்டுக்கு முன்….. ”மொஹாலியில் தீபாவளி”….. சச்சினை நினைவு கூறும் BCCI ..!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாராவின் சாதனையை இந்திய ஜாம்பவான் சச்சின் முறியடித்து நேற்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2008ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.   இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”TNPL கிரிக்கெட்டுக்கு சிக்கல்” சூதாட்டத்தில் சிக்கிய வீரர்கள்…. BCCI விசாரணை…!!

தமிழ்நாடு TNPL கிரிக்கெட்டில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களிடம் BCCI விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முக்கிய வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் சில வீரர்களிடம் புகார் குறித்து தற்போது பிபிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனை குழுவின் தலைவர் அஜித் சிங் உறுதி செய்துள்ளார். நடந்து முடிந்த டிஎன்பிஎல்_லில் தமிழக வீரர்களான […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

3 கோப்பை வென்ற போதிலும்… அங்கீகாரம் இல்லை…. பிசிசிஐ மீது பயிற்சியாளர் பகீர் குற்றசாட்டு…!!

பார்வையற்ற வீரர்களுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிப்பதில்லை என பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமாருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழிச்சியில் பேசிய  ராஜ்குமார் இரண்டு மூன்று உலகக் கோப்பைகளை வென்ற மற்ற வீரர்களை போல தங்கள் வீரர்களை பிசிசிஐ அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார். பேட்ரி ராஜ்குமார் கடந்த 2012ல் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.  இதையடுத்து பார்வையற்ற இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாரை கேட்டு விளையாடச் சென்றாய் … பிசிசிஐ-யில் சிக்கிய தினேஷ் கார்த்திக் ..!!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு அனுமதியும் இல்லாமல் விளையாட சென்றதால் பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்  தினேஷ் கார்த்திக். இவர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின்  துவக்க விழாவில் கலந்து கொண்டார். மேலும்  நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கேகேஆர் அணியின் சீருடை அணிந்ததும் அணி வீரர்களின் ஓய்வறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக சில புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகிறது. இதனால் இந்த விவகாரம் தினேஷ் கார்த்திக்கு  எதிராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு மிரட்டல் மெயில் “காப்பாற்றிய பாக்” பாதுகாப்புகள் அதிகரிப்பு..!!

இந்திய அணி வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும்  ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது.இதனை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கே அங்கே தங்கி இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த  இருப்பதாக த்திற்கு ஒரு மிரட்டல் மெயில் வந்துள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 வது டி – 20 போட்டியில் இந்தியா அணி வெற்றி … வாஷுவுட் ஆன வெஸ்டிண்டிஸ் ..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது t20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மேற்கிந்திய அணியின்  தொடக்க வீரர்களாக லீவிஸ், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்களிலும் லீவிஸ் 10 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தேர்வில் விராட் கோலி கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” கபில் தேவ்..!!

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக  இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்த பதவிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி… குவிந்தது 2,000 விண்ணப்பங்கள்..!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி,  பேட்டிங் பயிற்சியாளராக  சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்திய […]

Categories

Tech |