இன்று மாலை 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்லக்கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தமிழகத்திலும் அதிகரிக்க விடாமல் தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், சினிமா, தியேட்டர்கள், மார்க்கெட் என மக்கள் […]
Tag: #Beach
பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர் . டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி தூய்மை இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது . இந்நிகழ்ச்சின் முக்கிய நோக்கமானது எவ்விடத்திலும் தூய்மை காணபட வேண்டும் என்பதே ஆகும் . இதைத்தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள கடற்கரையை சி.ஐ.எஸ்.எப். என்னும் மத்திய தொழில் பாதுகாப்பு படை […]
சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர். சென்னை திருவெற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கேவி குப்பம், ஒண்டிகுப்பம், கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பதற்கு முன்பு செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகம் நடைபெற்ற இடங்களில் அதனை தடுக்கும் […]
சீர்காழி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய கொடியம்பாளையம் கடற்கரை தீவை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பிச்சாவரம் அருகே தீவு போன்று காட்சியளிக்கும் கொடியம்பாளையம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் சீர்காழி தொகுதி MLA கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளையம் கடற்கரை தீவானது, […]
கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் மருத்துவர் ராட்சஅலையில் சிக்கி உயிரிழந்தார். ஆந்திராவில் ஜக்கையா பேட்டையை சேர்ந்தவரான இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா, கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலை பின்புலமாகக் கொண்டு தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே இதனை கண்ட மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க போராடினர். போலீசாரும் அவர்களுடன் […]