கரடிகள் இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலைத் தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெகதளா கிராமத்தில் கரடியின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த கரடி இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே […]
Tag: Bear
கரடிகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சின்ன உபதலை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் நுழைந்துவிட்டது. இந்த கரடிகள் அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து தின்பதற்கு உணவுப்பொருட்கள் இருக்கிறதா என தேடி […]
மரத்தில் சிக்கி காயமடைந்த கரடியை சிகிச்சைக்கு பிறகு வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது. இந்நிலையில் கரடி அங்குள்ள மரத்தின் மீது வேகமாக ஏறி தேன் குடித்து கொண்டிருந்தபோது திடீரென அதன் கை மரப்பொந்தில் சிக்கிவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயக்க ஊசி செலுத்தி மரத்தில் சிக்கி கொண்ட […]
கரிமொராஹட்டி குடியிருப்புப் பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்துள்ளதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கு கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடிவருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.. அதன்படி, நேற்று குன்னூர் நகராட்சிக்குள்பட்ட கரிமொராஹட்டி கிராமத்திலுள்ள டெய்லி தோட்டத்தில் கரடி ஒன்று புகுந்தது. அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் கரடியை கல்லால் அடித்து விரட்டுவதற்கு முயன்றனர். அதனால் […]
”குப்பைத் தொட்டியை திருடிய கரடி”
மெரிக்கா நாட்டில் குப்பைத் தொட்டியை திருடிய கரடியின் சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை கவர்ந்தது. மெரிக்கா நாட்டில் உள்ள கொலராடோவில் நள்ளிரவில் உணவுக்காக சுற்றித் திரிந்த கரடி ஒன்று லயன்ஸ்டோணில் இருந்த குப்பைத் தொட்டி ஒன்றை திறக்க முயற்சி செய்தது. மூடி திறக்காததால் அதை அப்படியே வனப்பகுதிக்குள் கரடி இழுத்து சென்றது. இதன் சிசிடிவி காட்சியானது தற்போது வலைதளைங்களில் வெளியிடப்பட்டது. இந்த காட்சியானது காண்போரை சிரிக்க வைக்கிறது.