கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மேலும் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் சந்தையில் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி பெருமளவில் […]
Tag: Bhubaneswar
புவனேஸ்வர்: தப்தபானி காட் அருகே பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்ததில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தப்தபானி காட் அருகே இன்று (ஜன 29) சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர், உள்ளூர் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று […]
“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி”, ஆகயால் மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார். ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக்,“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான் செயல்படுகிறது. இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் ஊதியம் கொடுக்கிறார்கள். எனவே மக்களே உண்மையான […]
புவனேஷ்வரில் சாலையிலிருந்த 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஓலா ஓட்டுநரை ஒடிசா மாநில காவல் துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் […]
புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதித்து காவல்துறையினர் இலவச ஹெல்மெட் வழங்குகின்றனர். இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த செப்டெம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரால் இலவச […]
ஆந்திராவில் 25 பெட்டிகளை கழற்றிய நிலையில் இரயில் என்ஜின் மட்டும் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகின்றது.நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின் நார்சிபட்டினம் பகுதி வந்த போது எதிர்பாராத வகையில் ரெயிலின் என்ஜின் பெட்டிகளை விட்டு தனியாக பிரிந்தது. என்ஜின் இழுத்துச் சென்ற 25 பெட்டிகளும் எந்த அசைவும் இல்லாமல் நடுவழியிலே தனியாக நின்றது. பின்னர் இரயிலில் இருந்த இரயில்வே துறை […]