திருமணத்தில் மணப்பெண்ணைத் தங்கத்தினால் அலங்காரம் செய்யாமல் தக்காளியால் அலங்கரித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் சமீப நாட்களாகத் தக்காளி உற்பத்தி குறைந்து காணப்படுவதால், தக்காளியின் விற்பனை விலை அதிகளவில் ஏறியுள்ளது. இதனால், மக்கள் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு இந்திய மதிப்பில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது. தனது நாட்டின் தற்போதைய நிலைமையை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், இளம்பெண் […]
Tag: #bizarre
வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார். பின்னர், […]
உயிரோடு இருந்த 13 கிளிகளை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நபர் ஷூ பெட்டிக்குள் கிளியை வைத்து கடத்த முயற்சி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கிளியைப் பறிமுதல் செய்து, அந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் கிளியைக் கடத்த முயன்ற நபரையும், 13 கிளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த நபர் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் […]
உலகின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் போது, ஒரு புதியவகை ஜெல்லிமீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல், பூச்சாடி போன்று தோற்றத்தை கொண்டிருந்தது. அந்த ஜெல்லி மீன் தோற்றம் கூம்பு […]