Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படியோ தப்பிச்சாச்சு… காற்றின் வேகத்தால் கவிழ்ந்த படகு… கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்கள்…!!

படகு கவிழ்ந்த விபத்தில் 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் வசித்து வரும் குணசேகரன், தமிழன், வீரத்தமிழன் போன்றோரும் சிங்கார குப்பம் பகுதியில் வசித்து வரும் அப்பு என்பவரும் குணசேகரனுக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் இவர்களது படகு வந்து கொண்டிருக்கும் போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்துவிட்டது. இதில் படகில் பயணித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… படகில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்!

கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், […]

Categories
மாநில செய்திகள்

தூதரகம் மூலம் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி..!

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் “டைமண்ட் பிரின்சஸ்” என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். அதில் 162 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பு அரசியல் கட்சிகள், பொது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

துப்பாக்கி முனையில் மீனவர்கள் விரட்டியடிப்பு…!!

ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 570 படகுகளில் 1500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 6 விரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டி உள்ளனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தடையை மீறி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி பெண் பலி…!!!

பழவேற்காட்டில் தடையை மீறி சென்ற படகு மற்றொரு படகுடன் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் எட்டு ஆண்டுகளுக்கு முன் பல விபத்துகள் ஏற்பட்ட காரணத்தால்  படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 16 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுவிட்டு கரை திரும்பிய சுற்றுலா பயணிகளின்  படகு எதிர்பாராமல் எதிரே வந்த மற்றொரு படகு மீது மோதியதில் அனைவரும் கடலுக்குள்ளெ விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து படகோட்டி  அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பயணிகளை கண்ட […]

Categories

Tech |