திஷா பதானி தன்னை பெண்ணாக உணரவைக்கும் நபரைக் காதலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கிரங்கடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் திஷா பதானி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் காதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்தும் அன்பிற்காக அல்லது அன்பின் காரணமாக […]
Tag: Bollywoodcinema
’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியில் முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த ரன்வீர் சிங், நடிகர் ஜீவாவுடன் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் வெளிப்படுத்தினார். உலகநாயகன் கமலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது ஃபேவரிட் நடன அசைவுகளை நடிகர் ஜீவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து ஆடியுள்ளனர். ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்திருந்தனர். 1983ஆம் […]
ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இறுதியில் […]
கிரிக்கெட் வீரர் விராத் கோலி போல் ஆக்ரோஷ தன்மைக்காக பல்வேறு விமர்சனங்களை தான் சந்தித்திருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கும் தனக்கும் இடையே பொதுவான தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “எனக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவரும் நானும் வெவ்வேறு பின்புலத்தில் உள்ளோம். தனது தனித்துவத்தால் அவர் பெயர் […]
தனது இல்லீகல் வெப்பன் 2.0 (Illegal Weapon 2.0) பாடலின் வெற்றியை முன்னிட்டு அப்பாடலின் காட்சி ஒன்றை நடிகை ஸ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதகளம் செய்தது. இதற்கு முன்பாக ஸ்ரத்தா கபூர் நடித்த ‘ஏபிசிடி- 2’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமான ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ படத்திற்கும் […]
முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார். முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சிறந்து வேகப்பந்துவீச்சாளருமான ஜுலன் கோஸ்வாமி 2008-2011 காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தியுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளையும் ஜுலன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை […]
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நட்பு பாராட்டினார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தனாஜி தி அன்சங் வாரியர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார். இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, ‘கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் […]
25 ஆண்டுகள் கடந்த பிறகு தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை ஷாருக் தீவிரமாகக் காதலித்ததாக மிகவும் சுவாரஸ்யமாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சல்மான்கான். எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணின் பெயரை, தனது ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த கதையை நினைவுபடுத்தினார் நடிகர் சல்மான்கான். பாலிவுட் டாப் நடிகரான சல்மான்கான், இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு […]
நண்பரின் திருமண நிகழ்வுக்கு சென்ற கத்ரீனா கைஃப், அவருடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். நண்பரும் முக அழகியல் (மேக்கப்) கலைஞருமான டேனியல் பவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், திடீரென நடனமாடி அங்கு வந்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். 2015இல் கத்ரீனா நடிப்பில் வெளியான ‘பேன்தோம்’ படத்தில் இடம்பெறும் ‘ஆஃப்கான் ஜிலேபி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ஆடியிருந்த கத்ரீனாவின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து […]
தீபிகா படுகோன் நடிப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் என்னும் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சப்பக் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய லஷ்மிக்கு தீபிகா ஆறுதல் கூறிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்த பெண்ணான லஷ்மி அகர்வாலின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் சப்பக். லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லஷ்மி அகர்வால் […]
தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்துள்ளதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரும் விராட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘எனக்கு என்ன உண்ணப் பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு என்னை சிரிக்கவைக்கும் என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ என்று பதிவு […]
‘சப்பாக்’ திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மனம் திறந்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சப்பாக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீபிகா ஆசிட் வீச்சில் பாதிப்படைந்ததுபோல் தனது முகத்தை […]
#WeWantAnnouncementSRK: ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் […]
திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]
கேங்ஸ்டர்கள் வரிசையில் மாஃபியா ராணியாக வலம் வந்த கங்குபாயாக மேக்கப்போட்டு நடிக்க தொடங்கியுள்ளார் ஆலியா பட். ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படத்தின் ஷுட்டிங்கை தொடங்கியுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மும்பையைக் கலக்கய தாவூத் இப்ராகிம், ஹாஜி மஸ்தான் போன்ற டான்களின் வரிசையில் பெண் மாஃபியா ராணியாக வலம் வந்தவர் கங்குபாய் கேதேவாலி. பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் மாஃபியா கும்பலின் தலைவியாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர். […]
பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]
இயேசுவை வணங்கும்போது உச்சரிக்கும் அல்லேலூயா சொல்லை பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தியதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக நடிகை ரவீனா டண்டன் விளக்கமளித்துள்ளார். கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியதாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாக விடியோவை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரவீனா டண்டன். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயேசு குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக நடிகை ரவீனா டண்டன், பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான், நகைச்சுவை பிரபலம் பாரதி சிங் ஆகியோர் மீது பஞ்சாப் […]
பாலிவுட் இயக்குநர் லவ் ரஞ்சனின் புதிய படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பியார் கா பஞ்ச்நாமா, லைஃப் சஹி ஹை உள்ளிட்ட படங்களை இயக்கிய லவ் ரஞ்சன் தற்போது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கவிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லவ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் அங்கூர் கர்க் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 2021 மார்ச் 26ஆம் […]
ஹைதராபாத்தில் பெண்மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கானும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் […]
முதலில் மிஸ் இந்தியா, அப்புறம் மிஸ் வேர்ல்டு. தற்போது மிகப் பெரிய வரலாற்று படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் உலக அழகி மனுஷி சில்லார். பயமறியா மன்னனாகத் திகழ்ந்த பிருத்விராஜ் செளகான் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரை தலைநகராக கொண்டு ஹரியானா, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளை ஆண்ட […]
சுஷ்மா சுவராஜ் அனைவராலும் ஒருமனதாக போற்றப்பட்டு மதிக்கப்பட்டவர் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் (67 வயது) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள் மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட […]
தமன்னா நடிப்பில் தேவி 2 விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாரர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. இது ஒரு ஹாரர் காமெடி படமாகும். இந்த படத்தில் டாப்சி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக்காக தயாரிப்பதற்கு நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அனந்தோ பிரம்மா படத்தை தமிழில் ரீமேக்காக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் டாப்சி நடித்த […]
சல்மான்கான் தற்போது நடித்துள்ள படம் ‘பாரத்’ இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். இந்தி சினிமா துறையில் பிரபலமான நடிகர் சல்மான்கான் இவர் ஒரு படம் நடிப்பதட்க்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிவருகிறார். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வெளிவருகின்றன. இந்நிலையில் சல்மான்கான் இந்தியில் ‘பாரத்’ என்ற படம் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் […]