Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தது…. ராணுவ அதிகாரிகளின் உதவியோடு…. செயலிழக்க செய்த வெடிபொருட்கள்…!!

காவல்துறையினரின் பாதுகாப்புடன் ராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை வெடித்து செயலிழக்க செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈராக், ஈரான் போரின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் வெடி மருந்துகளுடன் கலந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெடி மருந்துகளுடன் கூடிய ராக்கெட் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி… மசூதியில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலி… பலர் படுகாயம்..!!

ஆப்கானிஸ்தான் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் நேற்று காலை திடீரென குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களில் வன்முறை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தமாத […]

Categories
தேசிய செய்திகள்

அஹ்மத்நகரில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி !

மகாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் அருகே கே.கே.ரேஞ்சு என்ற பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், அக்ஷய் நவ்நாத் கய்வாட், சந்தீப் பொவ் சாஹிப் திவாடடே உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories
தேசிய செய்திகள்

”விமான நிலையத்தில் வெடிகுண்டு” கர்நாடகாவில் பரபரப்பு …!!

 விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் அலுவலர்கள் அதனை வெடிக்க வைத்தனர். கர்நாடகாவில் மங்களூர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில், பை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக பையை சோதனை செய்த அலுவலர்கள், வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர், அந்த வெடிகுண்டை ஆய்வு செய்தனர். ஆனால், வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் …!!

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம். இங்கு வெடிக்குண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மோப்ப நாய், வெடிக்குண்டு நிபுணர்கள் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தி மொழியில் பேசிய அந்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைதறி கூடத்தில் வெடிகுண்டு வீச்சு….. விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெடிகுண்டு பதுக்கல்”முன் ஜாமீன் கிடையாது… வசமாக சிக்கிக்கொண்ட MLA ..!!

பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாட்டு வெடிகுண்டு”தயாரித்த இளைஞர் கைது… விருதுநகரில் பரபரப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த புதுப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராயிருப்பு காவல்துறையினர் வீட்டினுள் இருந்த தங்கேஸ்வரன் என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான  மூலப் பொருட்களையும் பறிமுதல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பில் “பெற்றோர்களை இழந்த 176 குழந்தைகள்”தேவாலயம் கார்டினல் தகவல் …!!

இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர  தொடர் குண்டுவெடிப்பு  தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் , இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித்  கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு…!!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து  வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நேற்று  முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்  290-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த குண்டு வெடிப்பினால்  இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.   இந்நிலையில் , வேதாரண்யம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி…!!

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கை. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை கேட்கும் பொது மிகவும் வேதனையாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் […]

Categories

Tech |