Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!

இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய- சீன எல்லை தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு!

லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்த பிரச்சனை… ஹூபே மாகாணத்தில் இருந்து கூட்டாக வெளியேற முயற்சி… வெடிக்கும் கலவரம்!

ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின்  வூஹான் நகரில் தொடங்கியது தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸை அந்நாடு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது. ஆனால் சீனாவை தவிர மற்ற நாடுகளை கொரோனா தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன நாளுக்குநாள் இந்த நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ஈரானுடனான எல்லையை மூடிய ஈராக்.!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி : சீன எல்லையை மூடிய ரஷ்யா..!

கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு சீன எல்லையை ரஷ்யா தற்காலிகமாக மூடியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : கொரோனா வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை …!!

கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக  பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை  உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும்  கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடும் ரஷியா

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு: ஐம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஐம்மு – காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான ராஜோரி செக்டாரில் உள்ள சுந்தர்பானி பகுதிகளில் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. மாலை 4.15 மணியிலிருந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்கிறது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் நுழைந்த ரஷ்ய விமானம்….. 360 முறை சுட்டு எச்சரித்த தென்கொரியா…!!

தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யா போர் விமானத்தை 360 முறை சுட்டு தென்கொரியா எச்சரிக்கை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய நாட்டின் வான் எல்லை பரப்பில் பறந்த ரஷ்ய நாட்டின் போர் விமானங்களை மறித்து 360 முறை துப்பாக்கியால் சுட்டு தென்கொரிய விமானப்படை விமானங்கள் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்ய நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான குண்டு வீசும் 2 போர் விமானங்கள் 2 சீன போர் விமானங்களுடன் தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் : அதிக நிதி கேட்ட டிரம்ப்….. கொடுக்க மறுத்த ஜனநாயகக் கட்சி…!!

மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதற்கான  வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சமூக விரோதிகள், அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு   சுவர் எழுப்புவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக ஜனநாயக  கட்சியினரிடம் வற்புறுத்தி வருகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், இத்திட்டத்திற்காக அதிபர் டிரம்ப் கேட்ட நிதியை தங்களால் ஒதுக்க முடியாது என ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பையடுத்து  நாட்டின் தெற்குப் […]

Categories

Tech |