மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் காங்கோ நாட்டில் ஒரு பகுதியில் அமைந்துள்ள நதியை கடப்பதற்காக கட்டப்பட்ட பாலம் அவ்வப்போது வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் புதிய பாலம் அமைத்துள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி அந்தப் பாலத்தை திறந்ததும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதனால் அதிகாரிகள் அனைவரும் நிலை தடுமாறி உள்ளனர். உடைந்த பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. This is the moment a bridge collapsed whilst […]
Tag: bridge
சீனாவின் சுகாய் நகரத்தையும், ஹாங்காங் நகரத்தையும் இணைப்பதற்கு கட்டப்பட்டிருக்கும் பாலமே உலகின் மிக நீளமான பாலம் என்று பெயரை பெற்றுள்ளது. கிரேட்டர் வளைகுடா திட்டத்தின் முக்கிய அம்சமாக இந்த திட்டம் பார்க்கப்படுகின்றது. சீனா மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 9 ஆண்டுகால கடின உழைப்பால் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]
பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை சுங்கத்திலிருந்து காக்காகொத்தி பாறை, வெப்பரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக பொதுமக்கள் செல்கின்றனர். இந்த பாலத்தின் கரையோரம் குடிநீர் குழாய்கள் மற்றும் தனியார் தோட்டங்களுக்கு செல்லும் குழாய்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். […]
காவல்துறையினரின் முயற்சியால் ரயில்வே மேம்பாலம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இருக்கும் சுற்றுச்சுவர் பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பொலிவிழந்து காணப்பட்ட மேம்பாலத்தை மாற்றுவதற்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி மேம்பால சுவர்களில் பல்வேறு வண்ணங்களை பூசி, மனதை கவரும் வகையில் வாசகங்களை எழுதி அழகு படுத்தியுள்ளனர். இதனால் ரயில்வே மேம்பாலம் புதுப்பொலிவுடன் […]
பாலத்திற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், கணியூர், மடத்துக்குளம் போன்ற பகுதிகளுக்கு கோவை- திண்டுக்கல் சாலையில் இருந்து மைவாடி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் அங்கு செல்லும் ஓடைக்கு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் தடுப்புகளோ, பக்கவாட்டு சுவரோ எதுவுமில்லை. மேலும் பாலத்தின் ஓரத்தில் உள்ள சாலைப்பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக […]
நெல்லையில் முழுமையாக கட்டாத மேம்பாலத்தை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அதன் முதல் பகுதியாக சென்னை முதல் மதுரை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு பின் அங்கிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் பணி தொடங்கப்படும் […]
இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் சவோனா கடற்கரை நகர் அடுத்த லிகுரியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர அதிர்வால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சிக்கியிருக்கலாம் என லிகுரியா தலைவர் ஜியோவானி டோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அந்தப் பாலத்தை பராமரித்து வந்த […]
மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும் ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]