Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிகாரிகள் ஆறுதல்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கத்தரிப்புலம் வரை மினி பேருந்து இயங்கி வந்துள்ளது. இந்த மினி பேருந்து வேதாரணத்தில் இருந்து 30-க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டு கத்தரிப்புலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது சந்தையடி பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு இருக்கும் வயலில் கவிழ்ந்துள்ளது. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் அனுசியா, சவுமியா, பிரியதர்ஷினி, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…‌. அச்சமடைந்த பயணிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

பேருந்து டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் என பலர் பயணம் செய்துள்ளனர். அதன்பின் வக்காரமாரி என்ற இடத்திற்கு அருகில் வந்த நிலையில் பேருந்தின் பின்பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான நிலையில் இருந்த பாலம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தனியார் பேருந்து பாலத்தின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த மண் சாலையில் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தில் இருபக்கமும் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாமல் ஆபத்தான நிலையில் இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் இரு பக்கமும் ஏற்படுத்தியுள்ள மண்ணரிப்பை சரிசெய்ய தற்காலிகமாக முரம்பு மண்ணை கொட்டி நிரப்பி போக்குவரத்து ஏற்பாடு செய்திருந்த நிலையில் தனியார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து…. படுகாயமடைந்த 23 பேர்…. சேலத்தில் கோர விபத்து…!!

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து 42 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவரும் கண்டக்டராக வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவரும் மாறி மாறி பேருந்தை ஓட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கிய கழிவுநீர்…. பள்ளத்தில் சிக்கிய பேருந்து…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

கழிவு நீர் தேங்கிய பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ரயில் நிலையம் அருகே இருக்கும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் காந்திபுரத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து கழிவுநீர் தேங்கி நின்ற பள்ளத்தில் சிக்கியது. நீண்டநேரமாக முயற்சி செய்தும் ஓட்டுநரால் பேருந்தை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பள்ளத்திலிருந்து பேருந்தை மீட்டனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. பயணிகளின் நிலைமை என்ன….? அரியலூரில் பரபரப்பு…!!

பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிகுதிச்சான் கிராமத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சரக்கு லாரி பேருந்தின் மீது மோதுவது போல தாறுமாறாக வந்துள்ளது. இதனால் பிரகாஷ் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குறுக்கே சென்ற மாடுகள்…. பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பிவிட்டனர். மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் இருபுறமும் மாடுகள் சென்று கொண்டிருந்ததால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் இறங்கி நின்றுவிட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய பேருந்து…. பயணிகளின் நிலைமை என்ன….? கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து 30 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்புறம் பயங்கரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தரைமட்டமான நீர்க்தேக்க தொட்டி…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது மோதிய விபத்தில்  பெண் பலியான நிலையில், 20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கூவக்காபட்டி ஆதிதிராவிடர் காலனி அருகில் இருக்கும் வளைவில் பேருந்து திரும்பியுள்ளது. அப்போது அழகாபுரி நோக்கி மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி பேருந்தின் பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த ஸ்டியரிங் ராடு…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த பேருந்து…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கோவிலுக்கு சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உலிமாவு கிராமத்தில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் என 20 பேர் மினி பேருந்தில் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்த பேருந்தை அப்சல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கொலப்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஸ்டியரிங் ராடு எதிர்பாராதவிதமாக துண்டானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி பேருந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. காயமடைந்த 12 பேர்…. பெரம்பலூரில் கோர விபத்து…!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருந்து அரசு பேருந்து தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பேருந்தின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் காயமின்றி பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டையில் இருந்து கரம்பக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து 25 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கொல்லம்பட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது பேருந்து பள்ளத்தில் இறங்கி விட்டது. இதனால் பேருந்து இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதிரே வந்த தம்பதியினர்…. பள்ளத்திற்குள் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

பேருந்து பள்ளத்திற்குள் இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்திற்கும் விருதாச்சலத்திற்கும் இடையே அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வளைவில்,  அரசு பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது எதிரே இருசக்கர வாகனத்தில்  ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுனர், அந்த தம்பதியினர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை சற்றுத் திருப்பியுள்ளார். ஆனால் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலை ஓரம் இருந்த  பள்ளத்தில் இறங்கி விட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இழுத்து செல்லப்பட்ட பைக்குகள்…. ஓட்டுநரின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

ஆம்னி பேருந்து ஓட்டுனரின் அலட்சிய போக்கால் நால்வர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தனியார் ஆம்னிபேருந்து ஈ.வி. கே. எஸ். சாலை வழியாக வந்துள்ளது. அப்போது பேருந்தின் மேல்பகுதியில் கயிறு தொங்கியுள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் சென்னை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை பேருந்து நெருங்கிய சமயத்தில் கவனிக்கப்படாத கயிறு அருகில் சென்ற பைக் சக்கரத்தில் சிக்கியதோடு அதனை தாறுமாறாக இழுத்துச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்ற 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலைதடுமாறியதால்…. காயமடைந்த பயணிகள்…. சென்னையில் பரபரப்பு….!!

அரசு பேருந்து தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் ஓட்டி சென்ற பேருந்து மாதவரம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தடுப்பு சுவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் பேருந்தில் இருந்த நாகராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 8 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“நான் தான் முதல்ல போவேன்” மோதிக்கொண்ட பேருந்துகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

தனியார் நிறுவன பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு பேருந்துகள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேருந்துகளில் 40 பெண் ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இரண்டு பேருந்துகளின் டிரைவர்களும் ஒருவரை ஒருவர் முந்துவதற்காக வேகமாக சென்றுள்ளனர். இதனால் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சாலையோரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவங்க அதை செய்யல… முதல் நாளே விபத்துக்குள்ளான பேருந்து… சென்னையில் பரபரப்பு…!!

பேருந்து இயக்கப்பட்ட முதல் நாளே விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற நான்கு மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநின்றவூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதனையடுத்து பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய பேருந்து… வடமாநில தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆம்னி பேருந்தில் 35 தொழிலாளர்கள் வேலைக்காக அசாம் மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரெட்டி அல்லி பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விட்டது. இதனால் அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி… பள்ளத்தினுள் சென்ற பேருந்து… திருச்சியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்கம் பட்டியில் இருந்து மணப்பாறை நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று உள்ளது. இந்த பேருந்தை கரட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை டிரைவர் இறக்கிவிட்டு கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்து கொண்டிருந்த லாரி பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதி விட்டது. இதில் பேருந்து பள்ளத்திற்குள் சென்று அங்கிருந்த மின்கம்பத்தில் முட்டி நின்றுவிட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்தது… பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… சேலத்தில் பரபரப்பு…!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு தஞ்சாவூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சடையப்பன் என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் பகுதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகள்…!!

சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஹைதராபாத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலா பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள சாலையில் திரும்ப […]

Categories
உலக செய்திகள்

குப்புற கவிழ்ந்த பேருந்து… அலறி துடித்த பயணிகள்… பறிபோன 15 உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்திற்கு கராச்சிக்கு மாகாணத்தில் உள்ள பஞ்ச்குர் என்ற இடத்திலிருந்து பேருந்து ஒன்று சென்று உள்ளது. இந்த பேருந்தானது குவெட்டா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள், 5 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் என மொத்தம் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த கோர சம்பவம்… பறிபோன ஒரே குடும்ப உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபாப்பு…!!

அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டணம் என்ற பகுதியில் சாலையோரம் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்ற பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஆறு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவன சிதறலால் ஏற்பட்ட விளைவு…. ஓட்டுனருக்கு நேர்ந்த துயரம்… கைதான மற்றொரு ஓட்டுனர்…!!

பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லதா என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் அந்தியூர் கரட்டு பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்வதற்காக கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்து மோதி விவசாயி பலி

வள்ளியூரில் உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்தவர் பாலசிங். 75 வயதாகும் விவசாயியான பாலசிங் இன்று காலை அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த பாலசிங் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பணகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |