அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் இருந்து பெரும்பாறை, கே.சி.பட்டி வழியாக பன்றிமலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றதால் […]
Tag: bus repair
பழுதடைந்த அரசு பேருந்தின் முன்புற சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து மெட்டுவாவி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். அதன்பின் பழுதடைந்த பேருந்து பணிமனை நோக்கி இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்றாம்பாளையம் பிரிவில் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று ஓடியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் […]
அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலாஸ், காட்டேரி வழியாக உட்லண்ட்ஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் குன்னூரில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் வழக்கத்தைவிட அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். இந்த பேருந்து லெவல் கிராசிங் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து அடிப்பகுதியின் பாகம் உடைந்து பழுதாகிவிட்டது. […]
பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் பழுதடைந்த பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் பேருந்துக்குள் குடை பிடித்த படி பயணம் செய்கின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று கூடலூரில் இருந்து தேவன் பகுதிக்கு சென்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் கூடலூருக்கு புறப்படுவதற்காக ஓட்டுநர் […]