Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் தயாரிப்பு பணி தள்ளிவைப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி தள்ளிவைப்பப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த […]

Categories
அரசியல்

“மாஸ்டர்” போலி செய்தி….. வி.சி.க சேனல் தான் அது…… காயத்ரி ரகுராம் ட்விட்….!!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறான செய்தியை பரப்பியது விசிக சேனல்தான் என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகுவிமர்சையாக  நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க  வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிய பின் மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என்று தெரிவித்ததாக சில செய்திகள் வைரலாகி வந்தது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு முக்கிய ஆலோசனை!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் – முதல்வர் கேஜ்ரிவால் அதிரடி!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் (சிஏஏ) திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் இஸ்லாமியர்கள், இலங்கை மக்களுக்கான குடியுரிமை சம்பந்தமாக அவர்களை சேர்க்காமல் விலக்களிக்கப்பட்டது இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக தமிழக அரசு நாளை ஆலோசனை கூட்டம் – இஸ்லாமிய பிரதிநிதிகளுக்கு அழைப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாளை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் […]

Categories
தேசிய செய்திகள்

வன்முறையை தூண்டிய தம்பதியர்… ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு… அதிரடியாக கைது செய்த போலீசார்!

சிஏஏ போராட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களிடையே பயங்கரவாதத்தை தூண்டியதாக கூறி ஐ.எஸ்ஐ.எஸ்  இயக்கத்துடன் தொடர்புடைய தம்பதியினரை போலீசார் அதிரடியாக  கைது செய்துள்ளனர். காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீ நகரைச் சேர்ந்த தம்பதிகள் ஜகன்ஜிப் சமி  (Jahanjeb Sami ) மற்றும் ஹினா பசீர் பேக் (Hina Bashir Beg) ஆகியோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அம்பேத்கர் பேரன் தலைமையில் சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை மற்றும் கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக UN மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பும் ஏற்படாது: அமித்ஷா உறுதி!

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பலத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளது . குறிப்பாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

முதலில் களமிறங்கி துணை நிற்போம் – பிரேமலதா

இஸ்லாமிய மக்களுக்கு ஆபத்து என்றால் முதலில் களமிறங்குவது தேமுதிக தான் இருக்கும் தெரிவித்துள்ளார் பொருளாளர் பிரேமலதா திருச்சியில் நிருபர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கூறியிருப்பதாவது “தேமுதிகவிற்கு மாநிலவை எம்பி பதவி கொடுக்குமாறு அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அதற்கு அதிமுக மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர்.  ஒரு மாநில அவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போது நாங்கள் பேசியிருந்தோம் அதன்படி வழங்குவார்கள் என நம்புகிறோம். […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39ஆக உயர்வு!

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்தால் ரூ 10 லட்சம்….. வீடுகளை இழந்தால் ரூ 5 லட்சம்…. இலவச சிகிச்சை …. கெஜ்ரிவால் அறிவிப்பு …!!

டெல்லி வன்முறையில் உயிரிழந்த , வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு!

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அசிங்கமான, நாகரிகமற்ற அரசியல் செய்கிறார் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து பேசிய சோனியா காந்தி, டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உயிரிழந்த காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்த காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி – ஜே.பி.நட்டா!

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கீரிப்பிள்ளையின் வாயில் கோழியாக அதிமுக – தமிமுன் அன்சாரி

கீரிப்பிள்ளையின் வாயில் கோழி சிக்கியது போல் அதிமுகவினர் சிக்கியுள்ளனர் என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தெரிவித்துள்ளார் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் கீரிப்பிள்ளை வாயில் சிக்கிக்கொண்ட கோழியைப் போல அதிமுக அரசு உள்ளது என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “இந்த சட்டங்கள் CAA , NRC குறித்து அதிமுக தலைவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவே அதிமுகவினர் அரசியல் நெருக்கடியால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லியில் சட்டம் – ஒழுங்கு சரியாகி வருகிறது – அஜித் தோவல்

டெல்லியில் சட்டம் – ஒழுங்கு சரியாகி வருகின்றது என  தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஷாஹீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை எனக் கூறியதும் மூடப்பட்ட சாலைகளை திறந்துவிடும் வகையில் போராடுபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என கூறியது. மேலும் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தகவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காவல்துறையின் மெத்தனமே காரணம் : உச்சநீதிமன்றம்

டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டமசோதாவுக்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிராகவும் , டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் குறித்த வழக்கில் போராட்டக்காரர்களை இடமாற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் போலீசுக்கு உத்தரவிட்டு மார்ச் 23ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். மேலும் வன்முறையில் தலைமை காவலர் பலி, உயர் அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். இதையடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரித்தால் அது தொடரட்டும் என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் தேவை – கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

போர்க்களமான டெல்லி… வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் மெட்ரோ பகுதியில் ஏராளமான பெண்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடஇந்தியாவில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராட்டம்… ரூ 64,00, 000 செலுத்துங்க… 28 பேருக்கு அதிரடி உத்தரவு..!!

லக்னோவில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதபடுத்தியதற்காக ரூ 64,00, 000 பணத்தை செலுத்த 28 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசு பேருந்து மற்றும் போலீசாரின் பைக்குகள்  உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதாப் ஜாபர் உள்ளிட்ட […]

Categories
Uncategorized

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதியை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை!

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : இஸ்லாமியர்கள் முற்றுகை…. சென்னையில் போக்குவத்து மாற்றம் …!!

மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!

சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

சட்டமன்றத்தை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிமுன் அன்சாரி அறிவித்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என் தாயை நானறிவேன்.. தாயும் என்னை அறிவாள்… இடையில் நீங்கள் யார்” குடியுரிமை திருத்த சட்டம் – மனித சங்கிலி போராட்டம்

  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்பை வட்டார மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக இஸ்லாமிய மக்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மனித சங்கிலி போராட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர். இந்த மனிதச்சங்கிலி போராட்டமானது சேரன்மகாதேவி ஜும்மா பள்ளிவாசலில் தொடங்கி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து போராட்டம் நடத்த உள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் காந்தி தேசம் இது காவியமயம் ஆக்க விடமாட்டோம் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இஸ்லாமியர் மட்டுமின்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது – இரங்கற் குறிப்பு வாசிப்பு …!!

முன்னாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாவித்திரி அம்மாள் , ராஜேந்திர பிரசாத் , குருதி மாவள்ளல்கோன் , பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

’காவல்துறை மீது கல் வீசியது ஆர்எஸ்எஸ்காரர்கள்’ – இஸ்லாமிய அமைப்புகள் டிஜிபியிடம் புகார்..!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டையில் நடந்தப் போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தடியடிக்கு உரிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், போராட்டம் செய்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் காவல்துறை இயக்குநர் திரிபாதியை சந்தித்து இஸ்லாமிய அமைப்புகள் புகாரளித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், இந்திய தேசிய லீக், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அரசியலமைப்பைப் போராடி மீட்க வேண்டும்’ – இயக்குநர் அனுராக் காஷ்யப்..!

அரசியலமைப்பையும் நாட்டையும் போராடி மீட்க வேண்டும் என இயக்கநர் அனுராக் காஷ்யப் ஜாமியா மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதையடுத்து, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், “மாணவர்கள் நடத்திவரும் நீண்ட கால போராட்டத்திற்கு என்னுடன் சேர்த்து பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் முதல்முறையாக இங்கு வந்துள்ளேன். 3 மாதத்திற்கு முன்பு போராட்டம் முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், போராட்டம் உயிர்ப்புடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

CAA-க்கு எதிராக ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தில் காந்தி சிலை முன்பு இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, ஒற்றைக் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீக்கும் – சிதம்பரம் நம்பிக்கை..!!

நாட்டின் கருத்தாக்கத்தின் மேல் குடியுரிமை திருத்தச் சட்டம் தாக்குதல் நடத்துவதாகவும் எனவே உச்ச நீதிமன்றம் அதனை நீக்கும் எனவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அஸ்ஸாமில் நடைபெறும் வன்முறைக்குக் காரணமே குடியுரிமை திருத்தச் சட்டம்தான். இந்தியாவின் அடிப்படை கொள்கைகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டில் பிறக்கும் 40 விழுக்காட்டினர் குறித்து பதிவு செய்யப்படுவதில்லை. சட்டத்தில் சில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவில் சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு..சமூக வலைத்தளங்களில் வைரல்..!!

கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு  எதிராக மணமக்களுடன் உறவினர்கள் பதாகைகளை ஏந்திய படி எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. புளியமுத்தூரில் இஸ்லாமியர் வீட்டு  திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் முகம்மதுகனி மற்றும் அபிரினா அவர்களின் குடியுரிமை கருத்து சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து பதாகைகளை ஏந்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதேபோல தேசிய மக்கள் பதிவுவேடு  சட்டங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கேரளாவில் கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கையெழுத்து இயக்கம்… மணமேடையில் கையெழுத்திட்ட புதுமண தம்பதி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் மனமேடையிலையே கையெழுத்திட்டுள்ளனர் புதுமண தம்பதியினர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவரணியின் அமைப்பாளர் சபீர் அன்சில் மற்றும் சஜிதா பர்வீன் என்பவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமேடையில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், இஸ்லாமிய மத குருமார்கள் போராட்டங்களை தூண்டி விடுவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் பெரியகுளம் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏவிற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நேற்று இந்திய தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டம் நடத்தினர். பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CAA -வை எதிர்த்து மணமக்களிடம் கையெழுத்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரஜினிக்கு அரசியல் புரியவில்லை – உதயநிதி ஸ்டாலின்.!

ரஜினிகாந்த் நடிகர் என்பதால் அரசியல் சரியாக புரியாமல் பேசி வருகிறார் என திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை லயோலா கல்லூரி வாயிலில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து பெற்றார். […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: பொதுமக்களுடன் நேரில் சந்திப்பு..!!

திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர். இந்த கையெழுத்து இயக்கம் வருகின்ற 8ஆம் தேதி வரை தொடரும் என்றும், […]

Categories
அரசியல் கடலூர் திருவாரூர் மாவட்ட செய்திகள்

கையெழுத்து இயக்கம் நடத்தினால் வழக்கு….

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. கடலூர்  தலைமை தபால் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் பன்னீர்செல்வம் உட்பட  300 பேர் மீது கடலூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சி.ஏ.ஏ.வை எதிர்த்தால் அதிமுக சிறைக்குச் செல்ல வேண்டும்’ – திமுக தலைவர் ஸ்டாலின்

 அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மத்திய அரசின் கைகளில் உள்ளது, அவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்தியா குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் – ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவிகளை ஈடுபடுத்திய தனியார் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, சி.பி.எம், காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட்ஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் – டிஆர் பாலு

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நடைபெறும் விவாதத்தில் சிஏஏ-தொடர்பாக திமுக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமைக்கு மத சான்றிதழ் அவசியம்

இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிப்போர் தாங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பான ஆணை விரைவில் வெளியிடப்படும்என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். குடியுரிமை சட்டம் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 முன்னர் இந்தியாவிற்கு வந்த ஆறு மதத்தவர்கள் சட்டவிரோதம் கூடியவர்களாக கருதப்பட […]

Categories
தேசிய செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ – மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா […]

Categories

Tech |