தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று அதிமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்களும் மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் […]
Tag: #Cabinetmeeting
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சென்னை காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து […]
மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது. இதில் 22 அமைச்சர்கள் […]
பதவியேற்ற புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் […]
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 24 […]