மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு திமுக எதிர்ப்பும், அதிமுக ஆதரவும் தெரிவித்து வாக்களித்தன. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழ் அகதிகளையும் வஞ்சிக்கும் இம்மசோதாவைக் கொண்டுவந்ததாக மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த தமிழக அரசையும் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாபேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் […]
Tag: #CABProtests
மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில், அம்மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையின் தர்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவை […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாமில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மூவர் உயிரிழந்தனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவோடு டிசம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவளிக்க 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் […]