Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அது வேண்டாம்…. பூங்கா தான் வேணும்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது பிள்ளையார் நகர் பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு மைதானம், சிறுவர் பூங்கா அல்லது வழிபாட்டு தளம் அமைக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்ததால் அங்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாங்க சொல்லுறத செய்யுங்க… வசமாக சிக்கிய மர்ம நபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

வடமாநில வியாபாரிகளின் மிரட்டிய குற்றத்திற்காக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை கடைவீதியில் உள்ள வடமாநில வியாபாரிகள் கடையை மூடச் சொல்லி சிலர் மிரட்டி உள்ளனர். இது குறித்து அந்த வியாபாரிகள் கோட்டை போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி கே.கே. நகர் பகுதியில் வசிக்கும் ரியாஸ், பாலக்கரை பகுதியில் வசிக்கும் காஜா மொய்தீன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரம்தானே வெளிய போனேன்… அதுக்குள்ள இப்படியா… வீட்டிற்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பட்டபகலில் நடந்த அநியாயம்… வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை மிரட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாசன் நகர் 5 வது குறுக்குத் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊறுகாய், இட்லி பொடி, கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய தம்பியான வைத்தியநாதன் என்பவர் இவருக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் தனது வியாபாரத்திற்காக 25 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்மூடித்தனமான வெறிச்செயல்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் புது மாப்பிள்ளையை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ராமசாமி நகரில் மனோ கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை தளி ரோட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒன்னாத் கல்லூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மனோ கார்த்திக் இரவு பணி முடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திரவத்தை ஊற்றி திசை திருப்பியவர்கள்…பெண்ணிற்கு நடந்த செயல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பவுன் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செண்பக வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கமாக சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் தனது தோழியுடன் அந்த சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கத்தி கூச்சலிட்ட காவலாளி… அடித்து பிடித்து ஓடியவர்கள்…காவல்துறையின் தீவிர தேடல்…!!!!

ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுநகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள கிடங்கிலிருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி உள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அங்க யாரோ இருக்காங்க… இது எப்படி நடந்துருக்கும்… வாலிபருக்கு நேர்ந்த துயரம்…!!

சாலையில் உள்ள குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்-மஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரமாக ஒரு குட்டையில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இந்த குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் வாலிபர் இறந்து கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போங்க…. முதியவருக்கு நேர்ந்த சோகம்… சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நங்கநல்லூர் 4வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதனால் படுகாயம் அடைந்த சேவியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவோடு இரவாக….. மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் போலீசார்…!!

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க தெருவில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கீழ்தளத்தில் வந்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இவர் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டு மாடியின் கதவு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வெளிய சென்று வரேன்….. முதியவருக்கு நேர்ந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு…!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உத்திரமேரூர் சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் முதியவரின் மீது மோதி விட்டது. இச்சம்பவத்தை பார்த்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் அந்த முதியவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் நலன் கருதி… இயற்றப்பட்ட அவசர சட்டம்… ஒத்தி வைக்கப்பட்டுள்ள வழக்கு…!!

தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதற்கு தமிழக உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது ஐகோர்ட் மதுரை கிளையில் தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றியது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அளவில்லாத பாசம்… தாங்க முடியாத இழப்பு… தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் இறப்பு…!!

தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்காவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூரை என்ற பகுதியில் பெரியசாமி-பெரியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். பெரியம்மாளுக்கு செல்லமுத்து என்ற தம்பி உள்ளார். இவரது தம்பி கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் திருவாலந்துறையில் உயிரிழந்தார். இவருக்கு திருவாலந்துறையில் கடந்த 9ஆம் தேதி 90வது நாள் துவக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு பெரியம்மாள் தனது தம்பி இறந்த துக்கத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்து அழுதுள்ளார். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தப்பு பண்ணிட்டேன்”… மனைவியை கத்தியால் குத்திய கணவர்… மன உளைச்சலில் செய்த செயல்…!!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் மனமுடைந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் மகாகாளியம்மன் கோவில் வீதியில் கௌரிசங்கர் பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரியான கௌரிசங்கருக்கும், அவரது மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் இவர்களுக்கும் இடையேயான பிரச்சனை நீடித்துக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சொந்த வேலையாக வெளியில் சென்றவர்… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் மனைவி…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ராமசாமி என்பவர் தனது சொந்த வேலை காரணமாக மணப்பாறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் ராமசாமியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவ்வழியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற தந்தை… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மதுரையில் பரபரப்பு…!!.

கான்ட்ராக்டர் வீட்டில் தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் என்ற தொகுதியில் ரமேஷ் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். அதன்பின் ரமேஷ் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கம்பத்தில் ஏறிய மாணவர்… திடீரென பாய்ந்த மின்சாரம்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!!

விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி மின்கம்பத்தில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேடு என்ற கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனார்த்தனன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் பல்ப் பொருத்துவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென இவரின் மீது மின்சாரம் பாய்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகமா இருக்கு…. மடக்கி பிடித்து விசாரணை… கைது செய்த காவல்துறை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழாயிரம்பண்ணை சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அன்பின் நகரம் பகுதியில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பதும், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் போலீசாருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு செலவு… தாயாருக்கு பயந்து எடுத்த முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்த கல்லூரி மாணவர் தாயாருக்கு பயந்து பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை மாவட்டத்திலுள்ள எம்ஜிஆர் தெருவில் சின்னத்தம்பி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வன் என்ற ஒரு மகன் உள்ளார்.இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் இவர் அருகில் உள்ள ஒரு தனியார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குட்டையில் குளியல்… நீரில் மூழ்கிய டிரைவர்… பின் நேர்ந்த சோகம்…!!

குளிப்பதற்காக சென்ற டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பத்திரக்கோட்டை பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் குளிப்பதற்காக குழந்தை குப்பம் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக ராஜ் நீரில் மூழ்கினார். இதனையடுத்து அவர் மூழ்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீருக்குள் குதித்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறுத்தாமல் சென்ற டெம்போ… விரட்டி பிடித்த அதிகாரிகள்… பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் அரிசி…!!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மைக்கேல் சுந்தர்ராஜ், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் போன்றோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐரேனிபுரம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவ்வழியில்  வேகமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினார். ஆனால் டெம்போ டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். எனவே அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் கூப்பிடுறாங்க… செல்போனால் வந்த வீபரீதம்…! சென்னையில் நடந்த உயிரிழப்பு …!!

மின்சார ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த 7ஆம் தேதி மின்சார ரயில் மோதி அங்கு இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை எழும்பூர் ரெயில்வே போலீசார் மீட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட சென்ற சண்முகையா…! சாலையில் நடந்த துயரம்… இறுதியில் நடந்த சோகம் …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் மீது கார் மோதியதி  உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகரத்தில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மணிமுத்தாறில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். சண்முகையா தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் சங்கரன்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது அழகியபாண்டியபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் சண்முகையா மற்றும் அவருடன் இருவர்  நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டுல விஷேசம்…! போயிட்டு வந்தோம், இப்படி ஆகிட்டு… காஞ்சியில் ஷாக் ஆன தம்பதிகள் ..!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் சத்திய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மனைவி மரிய பாஸ்டினா அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவர்கள்  இருவரும் சத்யா பிரசாத்தின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். அப்போது மரிய பாஸ்டினாவின் வீட்டிற்கு வந்த தாயார் ஆரோக்கியமேரி அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய முதியவர்…! கோவில் அருகே நடந்த பரபரப்பு…. போலீஸ் விசாரணை தீவிரம் …!!

கடலூரியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரை பார்வையிட்ட பின் அங்கிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அம்முதியவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசித்து வரும் நாகப்பன் என்பது போலீசாருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு பைக் வாங்கி கொடுங்க…! கெஞ்சி கூத்தாடிய மகன்.. இறுதியில் நடந்த விபரீதம்…!!

பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். இவர்  தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் பாலாஜியின் விருப்பத்தை அவரது பெற்றோர்கள் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி மதுவில் விஷத்தை கலந்து குடித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்தது…. நிறுத்த முயற்சித்த போது நிகழ்ந்த சம்பவம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெற்றிவேல் என்பவர் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு டாரஸ் லாரியில் புறப்பட்டார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எதிரே லாரி சென்று கொண்டிருக்கும் பொழுது, அதன் டயர் வெடித்து லாரி நிலைதடுமாறி ஓடியது. அச்சமயத்தில் டிரைவர் வெற்றிவேல் லாரியை சாலையோரத்தில் நிறுத்த முயற்சிக்கும் பொழுது, திருமங்கலத்திற்கு பிராய்லர் கோழிகளை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய் கரையோரம்… ரகசியமாக செய்த செயல்…. மடக்கி பிடித்த போலீசார்…!!

கண்மாய் கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் ஒன்று உள்ளது. அந்த கண்மாய் கரையோரம் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார்  அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணத்தை வைத்து விளையாடியவர்களை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது… பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… வலைவீசி தேடும் போலீசார்…!!

பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடமிருந்து  5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் சேலம் பைபாஸ் ரோடு பகுதியில் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பாத்தி திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, திடீரென 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கரூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அந்த பழக்கம் வேண்டாம்…! உடனே நிறுத்து…. எச்சரித்த உறவினர்… பிறகு நடந்த சோகம் ..!!

குடிப்பழக்கத்தை விடுமாறு கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐயனார் நகரில் ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்துவந்த விஸ்வராஜ் என்பவரை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஸ்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஸ்வராஜ் பிளேடால் தனது கையை அறுத்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை போட்ட கணவர்…! முடிவெடுத்த மனைவி…. அனாதையான குழந்தைகள் …!!

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். மாரிமுத்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் அதிரடி வேட்டை ..! சோதனையில் இறங்கிய போலிஸ்… வசமாக சிக்கிய 11பேர்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றதிற்காக போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், தாந்தோனிமலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

லூடோ விளையாட்டில் CHEATING…… “அப்பா மீது வழக்கு” நீதிமன்றத்தில் சர்ச்சையை கிளப்பிய மகள்…..!!

போபால் அருகே லூடோ  விளையாட்டில் ஏமாற்றிய தந்தை மீது மகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இன்றைய தலைமுறையினர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதால் சில சமயம் வாழ்க்கை விளையாட்டை போல் அவர்களுக்கு கேலியாக அமைந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள்  பப்ஜி, free fire உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக இருப்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பெண்கள் லூடோ உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். அந்த வகையில், லூடோ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

கீழக்கரை அருகே காசு வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிந்தகல் புதூரில் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து சென்ற கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த முகைதீன் அடிமை, செல்வக்குமார், ராஜா, காஜா, ஆரிப், நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“டிக்டாக்கில் ஆசையாக பேசியதால் மயங்கிய இளைஞர்”… 97,000 ரூபாயை சுருட்டிய இளம்பெண்..!!

டிக்டாக் மூலம் பேசி பழகி இளைஞரை மயக்கி 97,000 ரூபாய் மோசடிசெய்த இளம் பெண்ணை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). இவர் ஒரு காலேஜில் பயின்று வருகிறார். இவருக்கு டிக்டாக் மூலமாக திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் கடந்த ஓராண்டாகப் ஆசையாக பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் பொய் காரணங்களை கூறி சுசி, ராமச்சந்திரனிடமிருந்து சுமார் ரூ 97 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு – 4.27 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,42,618 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8,36,77,004 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,638 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகம்….. வேகத்தடையில் வண்டியை பறக்கவிட்ட வாலிபர் மரணம்….. திருப்பூர் அருகே சோகம்….!!

திருப்பூர்  அருகே வேகத்தடையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இவரது நண்பருமான மணி ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நடுவுசேரியில் இருக்கும் பால் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு நடுவு சேரியிலிருந்து   அவிநாசி நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் வேகத்தடை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எத்தனை முறை சொல்லிருப்போம் கேட்டியா….? சிறை கைதிக்கு புதிய வழக்கு இனாம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

விழுப்புரம் அருகே சாராயம் விற்ற வழக்கில் ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதி மேல் கூடுதலாக மற்றொரு வழக்கை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியையடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சில மாதங்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலடைக்கப்பட்ட பின்பு இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், இவர் மீது கோட்டகுப்பம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளே உஷார்….. இனி டெய்லி ரைடு….. 2 மணி நேரத்தில்…. 1,810 பேர் மீது வழக்கு….!!

வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின்  எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : சீமான் மீது வழக்கு பதிவு..!

சென்னை காமராஜர் நினைவு மண்டபத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அரசுக்கு எதிராகவும், வன்முறையயை தூண்டும் விதமாக பேசியதாகவும் சீமான்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கலகம் செய்வதற்காக பிறரை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோட்டூர்புரம்  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

விஸ்வரூபம் எடுத்துவரும் குரூப் -4 முறைகேடு..

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்… குரூப் 4 தேர்வு முறைகேடு  நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பணம் கொடுத்து தேர்வு எழுதிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் .கடந்த செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 பதவிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியாகி உள்ளது . இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளளது  […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு .. உச்சநீதி மனறத்தில் புதிய மனு..!!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

”தேர் திருவிழா நடைமுறை” அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

தேர் திருவிழாக்களின் போது உயிரிழப்புகள்  ஏற்படுவதை  தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  திருவிழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து 2012 ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அவை முறையாக கடைபிடிக்கபடாததால் நாமக்கல் மற்றும்  எடப்பாடியில் தேர் திருவிழாக்களின் போது மரணங்கள்  நடந்ததாகவும், எனவே இந்த விதிகளை முறையாக அமல்படுத்தக் […]

Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

ராமர் பாலம்… வரலாற்று சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு….மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

இந்தியா, இலங்கை  இடையே அமைந்துள்ள ராமர் பாலம்,  பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பாக, நிலைப்பாட்டை தெளிவு படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் சேது சமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின்  அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விரட்டி விரட்டி வெளுக்கும் வழக்குகள்” வீராப்பு பேசி இருக்க கூடாது…. புலம்பும் ரஜினி …!!

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிமுக மகளிரணிச் செயலராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்… திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு..!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க வழக்கு…!!

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் எனக் கண்டறிந்து, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர், தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதிதிராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பேனர்: திமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு…..!!

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு இல்ல நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. பின்பு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு…..!!

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிலிப்பிட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது விவசாய கழிவுப் பொருட்களை தெருக்களில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சுமார் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பில்சந்தா, நேரியா, அமரியா, புரன்பூர், சேரமாவூ, மதோடண்டா, ஜகனபாத், பிசால்பூர் மற்றும் கஜ்ராவூலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.விவசாயிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருடன் ஹெல்மெட் இல்லாமல் ரைடு…. அத்துமீறிய போலீஸ் மகன், மன்னித்துவிட்ட காவல்துறை…. ஆவேசத்தில் பொதுமக்கள்…!!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் காவல்துறையை  ஆபாசமாக பேசிய நிலையிலும் அவனை மட்டும் மன்னித்துவிட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் 3 பேரை அமர வைத்து ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்ய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது தனது பெயர் சுதாகர் என்றும் முன்னாள் எஸ்ஐ அன்புவின் மகன் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தையில் […]

Categories

Tech |