Categories
மாநில செய்திகள்

அறைநிலைத்துறை கூடுதல் ஆணையர் சஸ்பெண்ட்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!

அறைநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதானசஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சோமாஸ்கந்தர் சிலை மோசடி வழக்கில் அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கில் அவர் கைதும் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கவிதா  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில்  தன்னுடைய சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து கவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது ,  கவிதா மீதான […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி_யில் புலியை அடித்துக் கொன்ற 43 பேர் மீது வழக்கு பதிவு ….!!

உத்தரப் பிரதேசத்தில் பெண் புலியை அடித்து கொன்றதாக 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பனிபட் மாவட்டத்தில் உள்ள மதானி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை காலை ஊருக்குள் புகுந்த பெண்புலி  ஒன்று பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கம்பிகளால் அந்த புலியை தாக்கியுள்ளனர். புலி தாக்க படுவதை வீடியோ எடுத்த ஒரு சிலர் அதனை உடனே  சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த வனத்துறையினர் புலிகளை கொடூரமாக தாக்குவதை […]

Categories
தேசிய செய்திகள்

பா.க் ஆக்கிரமிப்பு காஷ்மீர் “தனி தொகுதி வழக்கு” தள்ளுபடி செய்து , அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்…!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்க கோரிய மணவை தள்ளுபடி செய்து ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ராம் குமார் யாதவ் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியை இந்தியாவின் இருநாடாளுமன்ற தொகுதிகளாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ,  இது ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு..!!

கிரிக்கெட் வீரர் சச்சின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது ராயல்டி வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பார்டன் சர்வதேச விளையாட்டு நிறுவனத்திடம் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளார். அந்த ஒப்பந்தம் என்னவென்றால் அந்த நிறுவனத்தின் பொருள்களை விளம்பரம் செய்வதற்கு ஆண்டிற்கு ஆண்டிற்கு ஒருமில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்க வேண்டும் என்பதுதான். அதன் படி, சச்சின் படம், லோகோ போன்றவற்றை அந்நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திற்காக பயன்படுத்தும். ஆனால் ஒப்பந்தத்தின் […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜரானார் கமல் ..!!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார். இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மோடிக்கு பதில் சொல்ல தேவையில்லை” சரித்திரம் சொல்லும் – கமல்ஹாசன்.!!

பிரதமர் மோடிக்கு  நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை  சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள  காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார்.  கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“கமலுக்கெதிராக வழக்கு தள்ளுபடி” டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…!!

கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“முதல் தீவிரவாதி இந்து” கமல்ஹாசன் மீது இரண்டு பிரிவில் வழக்கு பதிவு…!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்துக்களுக்கு எதிரான பேச்சு” யெச்சூரி மீது வழக்கு பதிவு….!!

வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசியதாக CPIM பொது செயலாளர்  சீதாராம் யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் , இந்துக்கள் யாரும் வன்முறையில்  ஈடுபடமாட்டார்கள் பேசினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் ,   ‘‘இந்து […]

Categories

Tech |