ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது பிராமண சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. ட்விட்டர் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் டோர்சி பணியாற்றி வருகிறார். 44 வயதான இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது பல்வேறு புகைப்படங்களை […]
Tag: #casefiled
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று சென்னை ஆலந்தூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பேரணியில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து […]
நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாக்கு செல்வதாக போவதாக குடியுரிமை சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது சீமான் அறிவித்துள்ளார். நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாவில் குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீமான் என்னுடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டால் நான் நித்தி அமைத்துள்ள கனவு தீவான கைலாச நாட்டிற்கு சென்று விடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் கூறுகையில், நித்தி தன்னுடைய அரும் பெரும் செயல்களால் பலரை தன் வசப்படுத்தியுள்ளார். […]
கைலாசா அமைத்தே தீருவேன், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். தலைமறைவாகவுள்ள நித்யானந்தாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நித்யானந்தா ரொம்ப கூலாக தனது தொலைக்காட்சிக்கு பிரசங்கம் செய்யும் வீடியோவை தினந்தோறும் வெளியிட்டு, காவல் துறையினரை குழப்பி வருகிறார். நாளொரு வண்ணம் புது புது கெட்டப்பில் வந்து தற்போது உலகம் முழுக்க தெரிந்த நபராகவும் மாறியுள்ளார் நித்தி. உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு அதிக கெட்டப்களில் […]
கோவை அருகே 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியர் 3 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மேகநாதன் ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி அருணா மீது வழக்குப்பதிவு போக்ஸோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]
பாலியல் மற்றும் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் நித்யானாந்தாவை விசாரிக்க குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா […]
சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு […]
மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடலும், நடிகையுமான மீரா மிதுன் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், சில சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர், எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிரடியாக பேசினார். இந்தப் பேட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை […]
மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]
தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணமடைந்ததையடுத்து சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அங்குள்ள அரசு பங்களா பிரகதி பவனில் வசித்து வருகிறார். இந்த பவனில் 11 நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஹஸ்கி வகையை சேர்ந்த 11 மாதமான அந்த நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனுடைய உடல் கடுமையாக கொதித்தது. அந்த நாய் அப்போதும் சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ள நிலையில் அதனால் பால் […]