பாதுகாப்பிற்கு உட்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகள் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சித்து அதனையடுத்து பலரும் காவிரி டெல்டாபகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கைகளை ஏற்று இன்று சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக […]
Tag: cauvery
ஈஷாவின் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்திற்கு அதன் நிறுவனர் சத்குரு நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். தென்னிந்தியாவில் உயிர்நாடியான காவிரி நதியை மீட்டெடுப்பதற்கும் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. இதனை அந்த அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார். இதற்கு ஆதரவு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் விளம்பரம் அளித்து வந்த இவர், தற்போது திரை நட்சத்திரங்கள் மற்றும் […]
கடைமடை பகுதியில் நடைமுறைப்படுத்தவுள்ள கட்டுமான பணிக்கு தேவைப்படும் மணலை சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து அள்ளுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் மணலுக்கான தொகையை ஒப்பந்தப் புள்ளியில் உள்ள நிலையில்,ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல வேண்டும் என்பதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீடாமங்கலம் ஆதிச்சபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள் வாய்க்கால்களில் தடுப்புச்சுவர் கட்டுமான […]
ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து. தற்போது மழையின் அளவு குறைந்து விட்டதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் தொடர்ந்து 14-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் […]
புதுக்கோட்டை கடைமடை பகுதி வரை காவேரி நீரை கொண்டுவர தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,காவிரி கடைமடை பகுதிகளில் ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் கடைமடை பகுதி வரை காவிரி நீர் வந்து […]
கர்நாடகாவில் இருந்து காவேரிக்கு உறுதியாக தண்ணீர் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படுவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணிர் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார். மேலும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு என […]
தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, […]
ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .மேலும் காவிரி அணைக்கு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர் . ஒகேனக்கல்லில் மெயின் அருவி உட்பட 5 அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் […]
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இந்நிலையில் கடந்த 25_ஆம் தேதி டெல்லியில் உள்ள சேவா பவனில் […]
ஜூன் , ஜூலை காவேரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்க காவேரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இது குறித்து கர்நாடகா_விடம் […]
மக்களவையில் திருமாவளவனை கர்நாடக MP_க்கள் பேச விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. மக்களவையில் கூட்டத்தில் இன்று சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டுமென்று பேசினார். அப்போது அங்கிருந்த கர்நாடக MP_க்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். எங்களுக்கே தண்ணீர் இல்லை. வறட்சியில் இருக்கின்றோம் என்ற முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திருமாவளவன் பேச முயன்ற போது பேச விடாதவாறு கர்நாடக MP […]
காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் வால்விலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை அடுத்துள்ள காவனூர் எனும் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் காவிரி கூட்டுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் பல லட்சம் அளவிலான நீர் வெளியாவதாகவும் பலமுறை புகார் அளித்தும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்று நீர் நிரம்பி பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் வீணாவதாகவும். குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் வீணாகும் […]