மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்பு உடையவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து செவித்திறன் பாதிப்புடைய 50 பேருக்கு மாற்றுத்திறன் நல அலுவலர் வசந்தகுமார் என்பவர் செல்போன் வழங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கூடிய விரைவில் செல்போன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tag: #Cellphone
செல்போன் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்க வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பண மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாமல், அதற்கான தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் உள்ள குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக சமீபத்திய […]
பொது கழிவறை மூலம் பால்வினை நோய் பரவுமா என்ற கேள்விக்கு ஆய்வு முடிவுகள் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பலரிடையே பால்வினை நோய் குறித்த சந்தேகங்கள் ஏராளம் உள்ளன. பொதுவாக பால்வினை நோய்கள் ஒருவர் நம்மை தொடுவதன் மூலமும், அல்லது அவருடன் நெருங்கி பழகுவதன் மூலமும் நம்மை பாதித்து விடும் என்று பலர் அசட்டுத் தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை தற்போது உருவாகி அது கேள்வியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொது […]
இடைவிடாமல் டி.வி, பார்த்தாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், […]
சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரானா தொற்று உள்ளவர்கள் தும்மும் போதோ […]
வாலாஜாவில் செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வாலாஜா நேதாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். 32 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை நேரத்தில் வெங்கடேசன் வீட்டில் இருந்தபோது, அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் கால் வந்துள்ளது. அதனை எடுத்து பேச வெங்கடேசன் முயன்றபோது போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அவரின் தலை, […]
புறநகர் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டுச் சென்ற பாண்டி, இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 3 செல்போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல்துறையினர், […]
புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலைய நடைமேடையில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்த நபர் தண்டவாளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மக்களுக்கு உபயோகமான செல்போன் எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் மக்கள் தெரிந்திருக்க வேண்டும். சாலை அல்லது ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், பல விபத்துகளைத் தவிர்க்க நேரிடும். அதற்கு எடுத்துக்காட்டாகத் தான், அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு, ரயில் நிலையத்தின் நடைமேடையில் […]
விவசாயிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்கள் சிலர் தொடர்ந்து செல்ஃபோன் பயன்படுத்தியதால் விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மாதந்தோறும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடைக்கானல் சார்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், கொடைக்கானலில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]
வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார். பின்னர், […]
கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது. அண்மையில் செல் போன் சேவைக்குகளை […]
பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார் ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
சென்னை குரோம்பேட்டையில் டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இருந்த செல்போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பக்தி பரவசத்துடன் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளார். இதையடுத்து கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக சுற்றி வந்த அந்த இளைஞர் திடீரென குனிந்து கொண்டே மேல்தளத்தில் இருக்கக்கூடிய […]
உத்திர பிரதேச மாநிலத்தில் செல்போனில் பேசியபடியே பெண் ஒருவர் பாம்புகள் மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரியானவ் கிராமத்தை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா என்பவர் தாய்லாந்தில் இருக்கும் தன்னுடைய கணவன் ஜெய்சிங்கிடம் அடிக்கடி போனில் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்கள் பேச ஆரம்பித்து விட்டாலே மணிக்கணக்கில் பேசுவார்கள். அதேபோல நேற்றும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த கீதா பேச்சு சுவாரஸ்யத்தில் அப்படியே […]
சென்னை ராயபுரத்தில் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணுரை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து எண்ணுறை நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை ஸ்ரீனிவாசன் கவனித்ததால் அவரது கையை அந்த இளைஞர் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி, ஆட்டோவில் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். இதற்கிடையே ராயபுரம் மேம்பாலம் அருகே […]
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிமுகவினருக்கு செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தோல்வியுற்ற அதிமுக அதிஷ்டவசமாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அதிமுகவில் தலைமை குறித்து பல்வேறு நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள். அதிமுகவிற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக MLA தொலைக்காட்சியில் பேட்டி முதற்கொண்டு அளிக்க தொடங்கினார்கள். இதனால் அதிமுகவில் சலசலப்பு […]
நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில் ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் […]