Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல்….. ஒரே நாடு…. ஒரே ரேஷன் அமுல்….. உணவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்துள்ளது. ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலிகள் நாட்டின் எந்த இடத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் இந்த திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை… மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில்  30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட  திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, இந்தியாவில் மட்டும்தான் எளிமையான முறையில் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும் என்றும், ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுனருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயமின்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார்.மேலும்  100 ரூபாய் அபராதம்   குறித்து யாரும்  கவலைப்படுவதில்லை என்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் “21 பேர் மீது கிரிமினல் வழக்கு” தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்..!!

மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய  அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான  இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது. இதில் 22 அமைச்சர்கள்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…!!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்  நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள்  நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க […]

Categories

Tech |