ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எஸ்பி இவ்வாறு தெரிவித்தார், பணத்தை இரட்டிப்பாக்கி தரும் ரேடியோ ஆக்டிவ் […]
Tag: #cheating
தயா இன்ஜினீயரிங் கல்லூரிக்காக கோயில் இடங்களை ஆக்கிரமித்த வழக்கின் விசாரணைக்காக மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜரானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமாகிய மு.க.அழகிரி அவரது மகன் துரை தயாநிதி பெயரில் தயா இன்ஜினீரிங் கல்லூரியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தயா இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமித்ததாக அழகிரி மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் […]
அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை, வட்டாட்சியர் ரவி தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புடன் அளவீடு செய்து மீட்டனர். சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம் பள்ளப்பட்டி, பெரிய ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, சட்ட விரோதமாக போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.தகவலறிந்த திருக்கோயில் தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூற, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
கல்லூரி மாணவனுக்கு சினிமா ஆசை காட்டி ரூ1,20,000 பணத்தை தந்தை , மகன் இருவரும் சேர்ந்து சுவாகா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ் எஸ் கண்ணன். இவர் சென்ற வருடம் நம்ம கதை என்ற தலைப்பில் தனது மகன் கவித்திறன், நிகாவித்திறன் ஆகியோரை வைத்து படம் ஒன்றை தயாரித்தார். அந்தப்படம் திரையரங்கில் ஓரிரு நாட்களே ஓடிய நிலையில் ரூட் பொருள் போன்ற அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாகவும் […]
சேலத்தில் கூலி தொழிலாளி ஒருவரிடம் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க அவரது ஏடிஎம் கார்டு பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு பணம் […]
சென்னை வேப்பேரியை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியில் ஒப்பனை மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகமது என்பவர் நேரில் சந்தித்து தமக்கு தெரிந்தவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 100 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை 500 மட்டும் 2,000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். கூடுதல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தினேஷும் 80 லட்சம் […]
கோயம்பத்தூரில் நிதிநிறுவனம் ஒன்று அடமானம் வைத்த வீட்டுப்பத்திரத்தை மறு அடமானம் வைத்து ரூ70 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் களப்பட்டி லட்சுமி நகர் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருடைய மகள் தனது அம்மாவுடன் நேற்றையதினம் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்துள்ளார். அதில் ஐயா நான் மேல் படிப்புக்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூபாய் 14 லட்சம் கடன் வாங்கினேன். படித்து முடித்ததும் என்னால் அந்தப் […]
சென்னையில் மோசடி கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள் ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]
திண்டிவனத்தில் போக்குவரத்து துறை அதிகாரி என கூறி இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் புதன்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் அவரை வழிமறித்த ஒரு நபர் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டவாறு அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி […]
அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக […]
ஈரோட்டில் 15கோடி வரை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் […]
மதுரையில் பார் நடத்த அனுமதி வழங்கியதில் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வணிக வளாக உரிமை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் என்ற வணிக வளாகத்தில் பார் நடத்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகரன் முன்பணமாக 68 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வணிக வளாகத்தில் பார் நடத்தி வந்த சந்திரசேகருக்கு நஷ்டம் […]
ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் 102 நாட்கள் தங்கியுள்ளார். ரூம் வாடகை ரூபாய் 25.96 லட்சம் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டியுள்ளார். மேலும் மீதி பணத்தை சிறிது நாள் கழித்து தருவதாக கூறியுள்ளார். ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். ஓட்டல் நிர்வாகம் சங்கர் […]
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் […]