Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ….. ஊரடங்கு முடியட்டும்….. தயார் நிலையில் ரசாயனத்துறை….!!

வருங்காலத்தில் தொழில் துறையில் கொடிகட்டி பறக்கும் துறையாக ரசாயனத் துறை இருக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொரோனோ வைரஸ் இன்று நம் வாழ்வியல் முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் பலர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பல வதந்திகள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இதற்கெல்லாம் மாறாக வேலை இழப்புகள் ஒருபுறம் ஏற்பட்டாலும், பல்வேறு துறைகளில் புதிய புதிய வாய்ப்புகளை தந்திருக்கிறது. அந்த வகையில், ரசாயனத் துறையில் அதீத […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் கலந்த விஷவாயு….. காலியான 5 கிராமம்….. 1000 பேர் பாதிப்பு….. 3 பேர் மரணம்…..!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி குழந்தை உட்பட 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் என்னும் கிராமத்தில் LG POLYMER என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, இதுவரை ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென கிராமத்தை சூழ்ந்த புகை மூட்டத்தால் ஏற்பட்ட கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை அறிந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழைப்பழத்தில் ரசாயன திரவியம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது. வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஓஎன்ஜிசி அட்டூழியம்” கருப்பு நிறத்தில் குடிநீர்….. நாகை மக்கள் வேதனை…!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய்  எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும்  வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி […]

Categories
உலக செய்திகள்

இனி இத வாங்காதீங்க… பிரபல சாம்பார் மசாலாவில் விஷம்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH  சாம்பார் மசாலாவில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் சல்மோனல்ல பாக்டீரியா இருப்பதாக  கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் R-PURE என்ற நிறுவனம் MDH என்ற பெயரில் மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு அந்நிறுவனம் உள்நாட்டு வர்த்தகம் மூலம் சாம்பார் மசாலா சப்ளை செய்து வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது. கடந்த வாரம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த […]

Categories

Tech |