வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு நோய்த்தொற்றிற்கான அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருவோருக்குநோய்த்தொற்றிற்கான அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தபடுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் மட்டும் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தொழில் நிறுவனஊழியர்களுக்கும் நாளை முதல் கொரோனா நோய் தொற்றுக்கான […]
Tag: Chennai Corporation
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,212, கோடம்பாக்கம் – 2,094, திரு.வி.க நகரில் – 1,656, அண்ணா நகர் – 2,946, தேனாம்பேட்டை – 2,363, தண்டையார் பேட்டை – […]
சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை என அவர் […]
சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனிடையே அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கட்டுள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனா […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 783 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வகையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 455ஆக இருந்த நிலையில் தற்போது 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் 101 தெருக்கள், கோடம்பாக்கம் 22 தெருக்கள், திருவிக 94 தெருக்கள், […]
சென்னை மருத்துவமனையில் படுக்கைகள்தால் நிரம்பியதால் கொரோனா தொற்று இருப்பவர்களை கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய எண்ணிக்கையை விட இன்று அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்த சூழலில் மருத்துவமனைகளில் படுக்கைகள் […]
சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை […]
சென்னையில் கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் ஏன் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு இயங்கும் அலுவலகங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்களை அந்தந்த நிறுவனங்கள் […]
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த முழு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னை – 52 , கோவை – 7, மதுரை – 4 , ராமநாதபுரம் – 2 , திருவள்ளுர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த […]
சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் அடுத்த 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஓரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி […]
கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை […]
கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலில் இருந்து எந்த நோய்த்தொற்றும் பரவாது என்பதால் மக்கள் […]
மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த நிலையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை […]
சென்னையில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தால் அபராதம் விதிப்பதோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று […]