சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிக்கையில் “மொத்தம் 5,805 கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருந்தன. இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான வரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது”. அதையடுத்து இரண்டாம் இடத்தை பெங்களூரு ஐஐஎஸ்சி பெற்றுள்ளது. மேலும் மூன்றாம் இடத்தை டெல்லி ஐஐடி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tag: chennai IIT
கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி குழுவினர் வடிவமைத்துள்ளனர். கை கடிகாரம் போல உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக இந்த கருவி தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் […]
ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி குழு ஆய்வு செய்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே 17ம் தேதிக்கு முன்பு ஊரடங்கு […]
சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து மாணவிகளை படம்பிடித்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின் உதவி பேராசிரியராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து உள்ளார். ஏரோஸ்பேஸ் பிஎச்டி மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் கழிப்பறையயைப் பயன்படுத்தி விட்டு சென்ற போது […]