கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடம் உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் […]
Tag: ChennaiCorporation
சென்னையில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த மண்டல அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தெருவோர வியாபாரிகள் எண்ணிக்கையை கணக்கிடுவது, அதன் அடிப்படையில் விற்பனை மண்டலங்கள் அமைப்பது தொடர்பாகவும், தெருவோர வியாபாரிகள் இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தெருவோர விற்பனை மண்டலங்களை கண்டறிந்து தெருவோர வியாபாரிகளுக்கு […]
சென்னையில் உள்ள சுவர்களில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் . நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்ற தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்துது அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலில் உள்ளது . இதையடுத்து தமிழகம முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் […]