Categories
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திடீர் விலகல்….!!!

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து க்ரிஷ் காக்ஸ் திடீரென விலகியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்கு வகித்தவர்  க்ரிஷ் காக்ஸ் இவர்  அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றை  கவனித்து வந்தார். இந்நிலையில் திடீரென பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேஸ் புக் உடனான 13 ஆண்டுகால பணியில் இருந்து விலகுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக க்ரிஷ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |