பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அளிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதுதான் செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும். ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. சமீபத்தில் சார்ஸ், எபோலோ நோய்களுக்கும் இந்த […]
Tag: china virus
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா […]
உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், காலை 7-9 காலை உணவு விற்கலாம். மதியம் 12 – […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன் படி அத்தியாவசிய தேவையில்லாமல் பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையில்லாமல் சிலர் வீட்டை விட்டு வெளியே வருதால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழக […]
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றாலும், அந்த பரவல் தடுக்கப்பட சில நாட்கள் ஆகும். குறைந்த பட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகும் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கொரோனா உறுதியானதால் அமெரிக்காவில் மொத்தம் 68,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள […]