Categories
உலக செய்திகள்

”வேகமாக பரவும் வைரஸ்” சீனாவின் பல நகருக்கு சீல்…. முன்னெச்சரிக்கை தீவிரம் …!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தை தொடர்ந்து ஹியாங்ஹாங் மற்றும் இசோவ் நகரங்களுக்கும் மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வுஹான் நகரத்தில் மட்டும் நேற்று வரை கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 600 பேருக்கு  இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வுஹான் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட செவிலியருக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : இந்திய மாணவர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு, ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான், […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ்” ஓநாய் முதல் பல்லி வரை…. சீன மக்களின் தவறு….. காட்டு விலங்குகள் தான் காரணம்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

கொரோனா  வைரஸ் காரணமான சீனாவின் ஹூகான்  மாநகரின் ஓனான் கடலுணவு சந்தைக்கு அந்நாட்டு அரசு சீல் வைத்துள்ளது.   சீன நாட்டின் ஹூகான் மாநகரின் பிரபல கடலுணவு சந்தையில்  முதலைகள், ஆமைகள், பாம்புகள், எலி, எறும்பு திண்ணி, ஒட்டகம் சாலமாண்டர் எனப்படும் பிரம்மாண்டமான பள்ளி வகை என நீளும் பட்டியலில் மொத்தம் 121 காட்டு விலங்குகள் இடம் பெற்று உள்ளன. காட்டு விலங்குகளை உணவுக்காக கடத்துவது சீனாவில் தடை செய்யப்பட்டாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்த விலங்குகள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு பால்… இந்தியாவுக்கு சுண்ணாம்பு – பாகிஸ்தானின் இரட்டை வேடம்!

பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் நாட்டுக்கு சீனா உதவி செய்திருப்பதால், இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அமைதி காத்துவருகிறது. ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது, உய்குர் இஸ்லாமியர்களின் நிலை சீனாவில் மோசமாக இருந்தபோதும், அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு காரணம் என்ன? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளித்த இம்ரான் கான், “இந்தியாவில் நடைபெறுவதற்கும் சீனாவில் நடைபெறுவதற்கும் வேறுபாடு உண்டு. சீனா தங்களுடைய நெருங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் சோதனை..!!

இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் கூறும்போது, “இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 43 விமானங்களில் வந்த ஒன்பதாயிரத்து 156 பயணிகளுக்கு இதுவரை […]

Categories
உலக செய்திகள்

சீனாவை உலுக்கும் ”கரோனோ வைரஸ்” பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை …!!

சீனாவில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

9 பேர் மரணம்….. 6 நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ்….. உலகம் முழுவதும் பரவும் அபாயம்….!!

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா  வைரஸ் தொற்று பரவியது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க சீன அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து  வாஷிங்டனுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வாஷிங்டன்னின் தனியார் மருத்துவமனையில் தனியாக தங்க […]

Categories
உலக செய்திகள்

”சீனா TO அமெரிக்கா” பரவிய கொரோனா வைரஸ்..!

முதன்முதலாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவின் சியாட்டில் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சுமார் 300 பேரைத் தாக்கியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஊஹான் நகரிலிருந்து பரவியிருக்கும் இந்த வைரஸ் பெய்ஜிங், சியாட்டில் போன்ற சீனாவின் முக்கிய நகரங்களையும் பாதித்தது. ஒரு மனிதரிலிருந்து இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் ஊஹான் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபரைத் […]

Categories
உலக செய்திகள்

4 நாடுகள்… 280 பேர் பாதிப்பு… ”மரண பயம் காட்டும் கரோனா”… அலறும் உலக நாடுகள்..!!

கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ”கரோனா” … ”பீதியில் உலக நாடுகள்” …. உயிர்பலியை தடுக்க போராட்டம் ..!!

சீனாவில் பரவி வந்த சார்ஸ் வைரஸ் நோய் தற்போது அமெரிக்காவிலும் பரவி  வெளியாகியுள்ளது.. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் சார்ஸ் நோய்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

சீனாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடூரமான சார்ஸ் நோயானது சீனாவில் பரவிவரும் நிலையில் அந்நோயால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் இறந்துள்ளார். நிமோனியா நோய்க்குரிய அறிகுறிகள் காணப்படும் இந்நோய் காட்டு விலங்குகளிலிருந்து முதலில் பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் முக்கிய நகரான ஊஹான் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ்”…. மிரட்டுகிறதா…. சீனாவை…தமிழகத்திலும் பரவும் அபாயம் ..

சீனாவின் முக்கிய நகரங்களில் கொரோன வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. சீன  தலைநகரம் பெல்ஜியம் மற்றும்  வர்த்தக நகரமான ஷாங்காய்  உள்ளிட்ட இடங்களில் கொரோனோ  வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை  இந்த நோயால் 4 பேர்   உயிரிழந்து விட்டனர். மேலும் சுமார் 300  பேர் கொரோனா  வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனோ  வைரஸ் காய்ச்சல் பரவும் ஆபத்து  உள்ளததால்,  கண்காணிப்பு கேமரா  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

”நாடு விட்டு நாடு பரவும் சீன வைரஸ்” சர்வதேச விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை …!!

சீனாவில் மீண்டும் சார்ஸ் வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில், நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2003ஆம் ஆண்டு சீனாவை உலுக்கிய சார்ஸ் நோய் (Severe Acute Respiratory Syndrome – SARS), 17 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவை மீண்டும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவித கொடிய வைரஸால் இந்நோய் ஏற்படுகிறது. கொரோனா வைரஸானது மனிதர்களின் சுவாச உறுப்பான நுரையீரலை நேரடியாகத் தாக்குவதால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்நோய், 37 […]

Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..!!

சைனாவில் இருந்து புதியவகை வைரஸ் பரவி வருவதால் விஞ்சானிகள் கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் திணறி வருகின்றனர். நடுங்கவைக்கும் சைனாவின் புதிய வைரஸ் உயிர்பலி அதிகரிப்பு விஞ்சானிகள் திணறல் அழிக்க வழி தெரியாமல் பரிதவிப்பு மொத்த உயிர் பழி  3 பேர் இதுவரை பாதிப்பு 200க்கு மேல் சந்தேகம் 1700 பேர் அதி வேகமாக பரவி வருகிறது, நாடு விட்டு நாடு தாவி பரவி வருகின்றது. இதனால் தான் மக்கள் பயப்படுகின்றார்கள். பரவிய நாடுகள் :  சீனாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஐஸ் திருவிழா” களைகட்டிய சீனா…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்…!!!

சீனாவில் ஐஸ் திருவிழா களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் வருவாய் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இரவை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள்  குளிர்  நிறம்பிய பனிப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள். வானில் இருந்து பூமியில் நடக்கும்  ஐஸ் திருவிழாவை படம்பிடிக்கும்  ரோன்கள், என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த  ஐஸ் திருவிழாவில்  பொம்மைகள் போன்று உடை அணிந்து, ஐஸ் கட்டிகள்  மீது,  வரிசையாக வந்து பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடியது, பார்வையாளர்களின் கண்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை..!… ”உயிர்கொல்லி நச்சு வைரஸ்” இந்தியாவுக்கு பரவும் அபாயம் …..!!

சீனாவில் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நச்சுக்கிருமி வேகமாக பரவி வருவதால் அங்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கொரேனோ எனப்படும் ஒரு வகை நச்சு வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்குள்ள மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 45 பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு வெற்றி – மண்ணைக் கவ்விய சீனா!

காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பியபோது, அப்பிரச்னையை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தீர்த்துக் கொள்ளும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மகமுது குரேஷி கடிதம் மூலம் சீனாவுக்கு தெரிவித்திருந்தார். இந்தக் கடிதத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்ப முயன்றது. ஆனால், கவுன்சிலின் மற்ற நாடுகள் தரப்பில், “காஷ்மீர் விவாகாரம் இருநாட்டுப் பிரச்னை; அதனை இந்தியா, […]

Categories
உலக செய்திகள்

“சுற்றுசூழலை பாதுகாக்க” 10 ஆண்டுகள் மீன் பிடிக்க தடை…… பரிதாபத்தில் 2,00,000 மீனவர்கள்….!!

சீன அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாங்ட்சீ  ஆற்றில் மீன்பிடிக்க தடை விதித்து உள்ளது. சீன நாட்டின் பெரிய ஆறாக கருதப்படும் யாங்ட்சீ  ஆற்றில் 1950களில் 4 லட்சத்து 20 ஆயிரம் டன் மீன்கள் அந்நாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில் பிடிக்கப்படுவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிக அதிகமான மீன் பிடித்ததால் சுற்றுச்சூழல் சீர்கேடு  ஏற்பட்டு யாங்ட்சீ ஆற்றின் தன்மை காலப்போக்கில் மாறியதால் மீன்களின் வரத்து […]

Categories
உலக செய்திகள்

தொடரும் குற்றச்சாட்டு… சீனாவில், 99,000 பேர் கைது…!!

சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தொலைதொடர்பு குற்றங்கள் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில், மேக வாள் (கிளவுட் ஸ்வாடு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 18 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டன. அந்த […]

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த தண்ணீர்… 80 மணி நேர போராட்டம்..!! 13 பேர் உயிருடன் மீட்பு…!!

சீனாவில் உள்ள சுரங்கத்தில் சிக்கியவர்களில் 13 பேர் 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புப்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர்.  சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் யிபின் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் இருக்கும் சான்மசு என்ற நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று வெள்ளநீர் புகுந்தது . இதன் காரணமாக 5 சுரங்க ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், மேலும் 30 ஊழியர்கள் காணாமல் போனார்கள்.   ஊழியர்களை மீட்கும் பணியில் 251 […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

பிரம்மிப்பை ஏற்படுத்திய சீன மாணவர்கள்… வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சீனாவில் கயிறு தாண்டும் போட்டியில் மாணவர்களின் முயற்சி நாட்டையே  பிரம்மிக்க வைத்துள்ளது.  சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஓன்று சேர்ந்து சீன கூடைப்பந்து மைதானம் ஒன்றில் 2 குழுக்களாக பிரிந்து எதிரெதிர் பக்கங்களில் வளைவாக நின்றனர். எதிரெதிரே உள்ளவர்கள் கையில் உள்ள கயிறுகளை ஒரே நேரத்தில்  சுழற்றினர். அதே நேரத்தில், நடுவில் இருக்கும் அந்த கயிற்றில் மாணவர் ஒருவர் கூட  சிக்காமல் சுலபமாக மேலே உயரமாய் குதித்து தப்பிக்கின்றார். மாணவர் ஒரே சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென திரண்ட 1,00,000 மக்கள்……. சீனாவுக்கு ஆதரவாக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்…….!!

ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதரவாகவும், வன்முறைகளை கண்டித்தும்  பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹாங்காங்கில் கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும்  கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் பல மாதங்களாக நடைபெறும் போராட்டம் பெரும்பாலான நேரங்களில் வன்முறைகளில் முடிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த வன்முறை போராட்டங்களை கண்டித்து ஹாங்காங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தாமார் பூங்காவில் கூடிய  மக்கள் காவல்துறைக்கு ஆதரவாக […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது ஒரே நேரத்தில் மூன்று சூரியனா…!!ஆச்சர்யத்தில் வாயைப்பிளந்த சீன மக்கள்…!!

சீனாவின் கோர்காஸ் நகரில் 3 சூரியன்கள்களை ஒரே நேரத்தில் பார்த்து ஆச்சர்யத்துடன் கூடிய சீன மக்கள். சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்களை பார்த்தனர் . முதலில் இரண்டு சூரியன்கள் இருப்பதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியன் தெரிந்ததால் ஆச்சரியத்தில் உறைந்தனர். சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள் வைரல்

“தாயை இடித்து கீழே தள்ளிய கார்”… கோபத்தில் காரை உதைத்து சண்டைக்கு சென்ற சிறுவன்… வைரலாகும் வீடியோ.!!

சாலையில் சென்ற தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் கோபத்துடன் காரை உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனாவில் சாலையில் சென்ற தனது தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் ஆக்ரோஷமாக காரை தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காணொலியில், சாலையில் தாய், மகன் இருவரும் நடந்த சென்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற கார், இருவரையும் இடித்து கீழே தள்ளியது. விபத்தில் தனது தாய் வலியில் […]

Categories
உலக செய்திகள்

இந்த காலத்தில் இப்படி ஒருவரா… சிறுநீரை வாயால் உறிஞ்சி உயிரை காப்பாற்றிய மருத்துவர்… குவியும் பாராட்டுக்கள்..!!

விமானத்தில் முதியவரின் உயிரைக் காப்பாற்றச் சற்றும் யோசிக்காமல், சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சீன நாட்டின் குவாங்சோ பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் சென்ற விமானத்தில், பயணம் செய்த முதியவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் ஆகியோர் அவரை பரிசோதனை செய்ததில், முதியவர் உடலில் ஒரு லிட்டர் சிறுநீரைக் கழிக்காமல் வைத்துள்ள காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது எனக் கண்டுபிடித்தனர். எனவே, உடனடியாக சிறுநீரை வெளியேற்றினால் […]

Categories
மற்றவை விளையாட்டு

மீண்டும் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் இளவேனில்!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இப்போட்டியில் இளவேனில் 250.8 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.250.7 புள்ளிகளை எடுத்த […]

Categories
உலக செய்திகள்

10 வருடங்களாக கடையின் மேற்பரப்பில் டேரா போட்ட 13 அடி நீள மலைப்பாம்பு..!!

சான்செங் பகுதியில் உள்ள ஸ்பா கடையின் மேற்பகுதியில் 10 வருடங்களாக மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சான்செங் பகுதியில் உள்ள பிரபல ஸ்பாவில் பாம்பு கடையின் மேற்பகுதியிலிருந்து கீழே விழுந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாம்பைப் பார்த்ததும் ஸ்பாவின் உரிமையாளர் ஒரு நிமிடம் உறைந்து போகியுள்ளார். ஏற்கெனவே, உரிமையாளரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு பாம்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை நம்ப வில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பாவை […]

Categories
உலக செய்திகள்

‘டைகர் ட்ரம்ப்’: சீனாவின் வெறுப்பும் இந்தியாவின் வளர்ச்சியும்..!!

சீனா மிகப்பெரிய நாடு என்றாலும் அது சிறிய கடற்கரையை கொண்டுள்ளது. இந்திய பெருங்கடல் மீது கண்வைக்கும் சீனாவுக்கு இந்தியாவின் வளர்ச்சி ஒரு தடையாக உள்ளது. அமெரிக்கா- இந்தியா ராணுவ கூட்டுப் பயிற்சியை (டைகர் ட்ரம்ப்) அந்நாடு விரும்பவில்லை. எனினும் இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.! பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிரபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டார். இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே..!.. நீங்களுமா ? ”ஆன்லைன் ஷாப்பிங் செய்த குரங்கு” சீனா_வில் வினோதம் …!!

வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார். பின்னர், […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பல் ”மூக்கில் வளரும் வினோதம்” மருத்துவர்கள் வியப்பு …!!

மூச்சுவிடமுடியவில்லை என்று மருத்துவமனையில் பரிசோதித்த நபருக்கு, நாசியில் பல் வளர்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் வசித்து வருபவர் ஜாங் பின்ஷெங் (Zhang Binsheng)(30). இவருக்குச் சமீப காலங்களாக மூச்சு விட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், மூக்குப் பகுதியில் அழுகிப் போன துர்நாற்றம் வருவதைக் கவனித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவரை அணுகிய ஜாங்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அங்குப் பல் வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் […]

Categories
உலக செய்திகள்

காதுக்குள் வேதனை …. ”குடும்பம் நடத்திய கரப்பான்” சீனாவில் வினோதம் …!!

மனிதனின் காதுக்குள் 10க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் குடும்பமாக வசித்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹுய்சோ(Huizhou) பகுதியில் வசித்து வருபவர் எல்வி (Lv). இவர் திடீரென்று காது வலியின் காரணமாகத் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது வீட்டில் வசிக்கும் நபர்களைக் காதில் டார்ச் லைட் அடித்துப் பார்க்கச் சொல்லிருக்கிறார். அப்போது எல்வியின் காதில் பெரிய கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளதைப் பார்த்து, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு எல்வியை அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம் வென்றார் மானு பாக்கர்….. முதல் நாளிலே 2 தங்கம் உட்பட 5 பதக்கம்……. இந்திய அணி சாதனை…!!

சீன நாட்டில் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சூடு போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானு பாக்கர் என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார். சீன நாடான புசௌவில் ஆசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட விபின்,மனிஷா கபூர் ஆகியோர் அடங்கிய ஜூனியர் டிராப் கலப்பு மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. குறிப்பாக மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244.3 புள்ளிகள் பெற்று இந்தியாவைச் சேர்ந்த மானு […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக ஒப்பந்தம்…. சீன அதிபருக்கு டிரம்ப் அழைப்பு..!!

அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன. இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்த ஆஷ்லி பார்ட்டி…!!

உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடருக்கு தகுதிபெற்றுள்ளார். டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவின் சென்ஷைன் நகரில் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா ஆடினார்.இதன் முதல் செட் ஆட்டத்தில் கரோலினா அதிரடியாக ஆட இதனை எதிர்பார்த்திராத ஆஷ்லி […]

Categories
டெக்னாலஜி

சீனாவில் 5G …. ”அரண்டு போன அமெரிக்கா”….. இந்தியாவில் எப்போது ?

உலகிலேயே முதன்  முதலாக சீனாவில் 5 தொலைத்தொடர்பு சேவையை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் அறிமுகமானது 5G : தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை அறிமுகம் படுத்தி வரும் சீனா தற்போது அதை நிரூபித்துக் காட்டும் வகையில் மற்றொரு இணைய புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக சீனா 5G தொலைத்தொடர்பு சேவையை தனது நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் இணைய பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உள்ள சீனா தொழில்நுட்பத்தில் முன்னேறிய […]

Categories
உலக செய்திகள்

”பாலத்திற்கு கீழ் சொருகிய விமானம்” வைரலாகும் வீடியோ ….!!

சீனா_வில் உள்ள பாலத்தின் கீழ் விமான சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் விமானத்தின் பாகத்தை பெரிய அளவிலான, நீளமான ட்ரக்கில் வைத்து எடுத்துச் செல்லும் பொது அந்த சாலையில் இருந்த பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்றுவிடலாம் என நினைத்த ட்ரக் ஓட்டுநர் பாலத்திற்கு கீழே செல்லும் வகையில் ட்ரக்கை இயக்கியுள்ளார். ஆனால் அந்த பாலம் எவ்வளவு பெரிய விமான பாகத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் பாலத்திற்கு நடுவே ட்ரக்  […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

27 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியில் சீனா…!!

சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி Q2 காலாண்டு முடிவில் 6.2 விழுக்காடாக இருந்ததில் இருந்து Q3 காலாண்டில் 6 விழுக்காடாக சரிந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா கடந்த 27 ஆண்டுகள் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே நீண்ட நாட்களாக நடந்த வர்த்தகப் போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரி உயர்வு செய்ததால் ஒப்பந்தம் செய்த […]

Categories
மாநில செய்திகள்

சீனத் தலைவர்களும்… சென்னை பயணங்களும்…!

நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

”குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாது” நீதிபதிக்கு கடிதம் எழுதிய காவல்துறை ….!!

சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!

சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும்  எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகம் வரும் சீன அதிபர்” 49 KM …… 49,000 பேர் …. 34 இடங்களில் வரவேற்பு ….!!

சென்னை வரும் சீன அதிபருக்கு 34  இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]

Categories
மாநில செய்திகள்

தலைவர்கள் வருகை : கப்பற்படை …. விமானப்படை ….. போர்க்கப்பல் ….. 15,000 போலீஸ் பாதுகாப்பு …!!

பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன  அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

சீன அதிபர் வருகை : தனியார் பள்ளிகளே முடிவு செய்யலாம்… பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சீன அதிபர் வருகையால்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி)  மற்றும் 13  ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம்  மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]

Categories
தேசிய செய்திகள்

90% பொருளாதாரா மந்த நிலை….. கடும் வீழ்ச்சி….. இந்தியாவுக்கு சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை….!!

இந்த ஆண்டில் 90 சதவிகித நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என கூறியுள்ள சர்வதேச பண நிதியம் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின்  வாஷிங்டன் அமைந்துள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குனரான கிறிஸ்டினா ஜியாஜீவா உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் உலக பொருளாதாரம்  ஒருங்கிணைந்த மந்த நிலையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போர் தான் இதற்கு காரணம் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

அலறும் போராளிகள் ”பிரதமர் மோடியின் அதிரடி” கலக்கத்தில் தமிழ்நாடு …..!!

சீனா பொருட்களால் இந்தியாவின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாப் பொருட்களுக்கு, குறிப்பாக சீனாப் பட்டாசுக்கு மோடி தடை விதிக்க உள்ளார். மேக் இன் இந்தியா பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது சீனா ஏஜெண்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை  சீனா தூண்டிவிடுவதாக பாஜக தலைவர்களும், ஒரு சில நடிகர்களும் கூறினார்கள். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் […]

Categories
மாநில செய்திகள்

”மோடி ஷி ஜின்பிங் சந்திப்பு” தயாராகும் தமிழகம் …..!!

தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கை வரவேற்க தயாராகி வருகிறது. வருகின்ற 11ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் சீன அதிபர் ஜிங்பிங்_கை  வரவேற்பதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வரக்கூடிய சீன அதிபர் 11 , 12, 13 ஆகிய மூன்று நாட்கள் இங்கேயே தங்கி இருக்கிறார். இந்திய சீன நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். 11-ஆம் தேதி சென்னை விமான நிலையம் வரக்கூடிய சீன […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 65 அடி நீளமுள்ள அனகோண்டா?… பதில் கிடைத்து விட்டது..!!

சீனாவில் ஆற்றில் இருந்தது அனகோண்டா என்று நினைத்த அனைவருக்கும் பதில் கிடைத்துள்ளது.   சீனாவில் உள்ள கார்ஜஸ் அணையில் 65 அடி நீளத்தில் மர்மமான ஒரு உயிரினம் ஊறிச் செல்வதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை  60,00,000 – த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனை கண்ட பலரும் இது என்ன உயிரினம் என்று வியப்பில் ஆழ்ந்தனர். சிலர் இது ஒரு மிகப்பெரிய அனகோண்டாவாகவோ அல்லது ராட்சத மீனாகவோ இருக்கலாம் என சந்தேகத்தின் படி தெரிவித்தனர். அதிலும் இந்த வீடியோ என்றைக்கு எடுக்கப்பட்டது என்றே […]

Categories
உலக செய்திகள்

100 நாளை எட்டிய “ஹாங்காங் போராட்டம்”… அக்-1க்குள் முடக்கனும்…. சீனா திட்டவட்டம்…!!

ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களை தேசிய நாளான அக்டோபர் 1-ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டுவர சீனா தீவிரமாக திட்டமிட்டுள்ளது.  ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவரை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சுமுகமாக சென்ற போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. போராட்டம் தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் போராட்டத்தின் கவலையினால் அதனை முடிவுக்கு கொண்டு வர சீனா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. […]

Categories

Tech |