கிறிஸ்துமஸ் நள்ளிரவு வழிபாட்டிற்க்கு பொதுமக்கள் பேஷண்ட் நகர் தேவாலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அன்னை வேளாங்கண்ணி பேஷண்ட் நகர் திருத்தல அதிபரும் பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பொதுமக்கள் வழக்கமாக பேஷண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திரு தளத்திலே கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருவது வழக்கம். தயவு செய்து அவற்றை தவிர்த்து உங்களது இல்லங்களிலேயே இந்த வழிபாடுகள், இரவு நள்ளிரவு வழிபாடு, தொலைக்காட்சி சேனல்கள் வழியாக, யூ ட்யூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. […]
Tag: Christmas
கிறிஸ்துமஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர், மக்கள் என அனைவரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வகையில், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ”அனைவரிடத்திலும் அன்பு, பகைவரிடத்திலும் பரிவு, சகோதரத்துவம் உள்ளிட்ட வாழ்க்கை நெறிகளை வழங்கிய இயேசு காட்டிய […]
வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தை மக்கள் மிக விமர்சையாக கொண்டாடி வரும் சூழ்நிலையில் தமிழகத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு நடனமாடியும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். ஜிங்கிள் பெல்ஸ் என்ற பாடலுக்கு குழந்தைகள் நடனமாடியது பெற்றோர்களை […]
காலம்தான் மிகச் சிறந்த பரிசு என்று கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு விடுத்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பின்லாந்து நாடு லாவாந்து பகுதியில் சாண்டா கிளாஸ் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் குடும்பத்தினருடன் பெற்றோருடன் சக குழந்தைகளுடன் நண்பர்களுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள் என்றும் அதுதான் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசு என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் பேசும் பொழுது பணிவான அன்பு நிறைந்த வார்த்தைகளை பேசுங்கள் என்றும் அடுத்தவரின் சிந்தனைகளை படிப்பதும் அடுத்தவரின் உணர்வுகளை உணர்வதும் மிகச் […]
காருண்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 33 அடி உயரம்கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காருண்யா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 33 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த மரத்தை உருவாக்கியுள்ளனர். வண்ண விளக்குகளாலும் வண்ண வண்ண காகிதங்கள் கொண்டும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.மேலும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தைச் […]
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள 20 அடி உயரம் கொண்ட ஐரோப்பிய ஜிஞ்சர் பிரட்கேக் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கொடைக்கானல் வன்னமட்டுவப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஐரோப்பியர்களால் விரும்பி சுவைக்கப்படும் 20 அடி உயர ஜிஞ்சர் பிரட்கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஜேர்மன் சர்ச் சிலை முன்னோட்டமாக கொண்டு இந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் […]
பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள 230 அடி கிறிஸ்துமஸ் மரம் அந்தரத்தில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. பிரேசில் நாட்டில் அமைந்துள்ள ரியொடி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற சுற்றுலா பகுதியில் உலோகங்களை பயன்படுத்தி 230 உயரத்தில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரம் நீருக்கயடியிலிருந்து 11 தளங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 230 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில் 9 லட்ச எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு 8 […]
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பளிப்பாக சாண்டா கிளாஸிடம், 26 வகையான பொருட்களை கேட்ட 10 சிறுமியின் கடிதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த மாதம் வெகுவிமர்சையாகக் கொண்டாட பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருமாதம் பண்டிகைக்கான நேரம் இருக்கும் நிலையில், 10 வயது சிறுமி தனக்கு தேவையான 26 பொருட்களின் பட்டியலை கடிதமாக எழுதி சாண்டா கிளாஸிடம் கேட்டுள்ளார். அந்த கடிதம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கிறிஸ்துமஸ் லிஸ்ட் என்று தொடங்கும் […]
நடிகர் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் இவ்வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சூர்யா ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் ‘சூரரை போற்று’ படத்தினை இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இரும்புத்திரை’ […]