Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எலி தயாரிப்பாளருக்கு பூனையாய் மாறிப்போன வடிவேலு..!!

நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 2015ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து ‘எலி’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தின் மூலம் சதீஷ்குமாருக்கு ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன், தயாரிப்பாளர் சதீஷ்குமாரின் அலுவலகத்திற்குச் சென்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் சொல்லிய ரஜினிகாந்த்..!!

ஹைதராபாத்திலிருந்து படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பொங்கல் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்புக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திற்குச் சென்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் அவர் இன்று சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ”அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ்பொங்கல் நல்வாழ்த்துகள் “ என்றார். தர்பார் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் மலேசியாவில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பாப் டைலன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சுவார்த்தை.!

இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கப்படும் படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கும் இத்திரைப்படம், பாப் டைலன் எப்படி ஒரு சாதாரண இசைக்கலைஞராக இருந்து மிகப் பெரிய நாட்டுப்புற இசைக்கலைஞனானார் என்பதை குறித்து இருக்கும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பயமின்றி துணிந்து செல்லும் சிங்கப்பெண்’…. செம அழகான லேட்டஸ்ட் போட்டோஸ்.!!

‘படைவீரன்’, ‘காளி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை அம்ரிதாவுக்கு சமீபத்தில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது ‘பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட கேப்டனாக வந்த தென்றல் கதாபாத்திரம்தான். அதைத்தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ… சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே சும்மா ஒரு கேஷுவல் லுக் சிங்கப்பெண்ணாக இருந்தாலும் நான் சிங்கிள் பெண் தான் கிளாமரும் நமக்கு வரும் பாஸ் சிங்கப்பெண்ணின் அன்பான பார்வை ஒரு புல்சைஸ் போட்டோ ஆவாம் அரியாசனத்தில் அம்ரிதா அடுத்து […]

Categories
Uncategorized

’96’ தெலுங்கு ரீமேக் பெயரை வெளியிட்ட படக்குழு

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ’96’ திரைப்படம். இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும் கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கிலும் ’96’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு’ – ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியீடு.!

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீஸரை படக்குழு இன்று வெளியிட்டது. ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மன்ட் சார்பில் தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரானது இந்த புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்திற்கு ஹைப் அதிகரித்திருக்கும் வேளையில், படத்தின் டீஸரை வெங்கடேஷ் தகுபதி, நடிகர் பிரபாஸ், நடிகை சம்ந்தா ஆகியோர் வெளியிடப்போவதாக படக்குழு ட்விட்டர் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கடைசிப் படத்திலிருந்து எமோஷனலாக விடைபெற்ற ஜேம்ஸ்பாண்ட்!

பாண்ட் படங்களுக்கு பிரியா விடை கொடுத்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது என்று ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ்: ‘நோ டை டூ டை’ படத்தின் கடைசி காட்சி படமாக்கப்பட்ட பிறகு எமோஷனலாக விடைபெற்றார் தற்போதைய பாண்ட் நடிகர் டேனியல் கிரேக். உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாக ‘நோ டைம் டூ டை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக வலம் வரும் டேனியல் கிரேக், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் இணைந்த பாலிவுட் பிரபலங்கள்.!!

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நமக்கு எது நல்லதுன்னு இந்த மண்ணுக்குத் தெரியும்’ – தனுஷ் வெடிக்கும் ‘பட்டாஸ்’.!

தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி திரைக்குவரவுள்ள ‘பட்டாஸ்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கொடி’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் ‘பட்டாஸ்’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடித்துள்ளார். சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பொது இடத்தில் முத்த மழையால் அன்பை வெளிப்படுத்தும் பிரியங்கா – நிக் ஜோனஸ்

ஹாட் தம்பதிகள் என உசுப்பேற்றியவர்கள் முன்னிலையில் லிப்கிஸ் செய்து தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர். வாஷிங்டன்: கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகைதந்த பிரியங்கா – ஜோனஸ் தம்பதியினர், பேட்டியின்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர். ஹாலிவுட் ஹாட் தம்பதிகளாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் – அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸும் வலம்வருகின்றனர். இதில் பிரியங்காவைவிட ஜோனஸ் 10 வயது குறைந்தவராக இருந்தாலும், இருவருக்குள்ளான […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சிங்கத்தோட பசியா; மானோட பயமா? – ‘காட்ஃபாதர்’ டிரெய்லர் வெளியீடு..!!

நடிகர் நட்டி, மலையாள நடிகர் லால் நடிப்பில் திரைக்குவரவுள்ள ‘காட்ஃபாதர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் நட்டி, லால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘காட்ஃபாதர்’. அறிமுக இயக்குநர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் அனன்யா, ஜி. மாரிமுத்து, சூப்பர் டீலக்ஸ் குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் அஷோக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன்-திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. என். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வரும் இளையராஜா …!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வருகிறார் இளையராஜா. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு நடந்து வருகிறது. இதுவரை இளையராஜா ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை தீவிரமாகக் காதலித்தார் ஷாருக்கான் – சல்மான் கூறிய கதை!

25 ஆண்டுகள் கடந்த பிறகு தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை ஷாருக் தீவிரமாகக் காதலித்ததாக மிகவும் சுவாரஸ்யமாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சல்மான்கான்.  எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணின் பெயரை, தனது ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த கதையை நினைவுபடுத்தினார் நடிகர் சல்மான்கான். பாலிவுட் டாப் நடிகரான சல்மான்கான், இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னா ஆட்டம்… திருமண நிகழ்ச்சியில் மேடை ஏறி கலக்கிய கத்ரீனா!!

நண்பரின் திருமண நிகழ்வுக்கு சென்ற கத்ரீனா கைஃப், அவருடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  நண்பரும் முக அழகியல் (மேக்கப்) கலைஞருமான டேனியல் பவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், திடீரென நடனமாடி அங்கு வந்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். 2015இல் கத்ரீனா நடிப்பில் வெளியான ‘பேன்தோம்’ படத்தில் இடம்பெறும் ‘ஆஃப்கான் ஜிலேபி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ஆடியிருந்த கத்ரீனாவின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனாருடன் சேர்ந்து இறங்கும் தனுஷ்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ ஆகிய இரு படங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்கவுள்ளது.     பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பை அணியப்போகும் நவாசுதீன்..!!

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ரா. பார்த்திபன் கடந்த ஆண்டு இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று இயக்குநர் பாரதிராஜா புகழ்ந்தார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்காக பல விருதுகளையும் குவித்தார் ரா. பார்த்திபன். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தர்பார்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு.!

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேரளாவுக்கு செல்ல இருக்கும் ‘வி1 மர்டர் கேஸ்’..!!

கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம் கேரளாவிலும், கர்நாடகாவிலும் வெளியாகவுள்ளது. பவெல் நவகீதன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக சென்ற மாதம் வெளியானது ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம். ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், காயத்ரி, மைம் கோபி நடித்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இரண்டாவது வாரம் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்தத் திரைப்படம் பல திரையங்குகளில் கூடுதலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“”சப்பக்” டைட்டில் ட்ராக்கை கேட்டு கண்கலங்கிய லஷ்மி: ஆறுதல் கூறிய தீபிகா.!

தீபிகா படுகோன் நடிப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் என்னும் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சப்பக் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய லஷ்மிக்கு தீபிகா ஆறுதல் கூறிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்த பெண்ணான லஷ்மி அகர்வாலின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் சப்பக். லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லஷ்மி அகர்வால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்வாசம் ஸ்டைலில் தலைவர் 168 பட பாடல் …!!!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறார்கள். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் பாண்டியராஜ் கூட்டணி …!!!

இயக்குநர் பாண்டியராஜ் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க தயாராகி கொண்டிருக்கிறார் . பாண்டியராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன் .அதன் பிறகு அவரது இயக்கத்தில் கேடிபில்லா கில்லாடி ரங்கா ,நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன் .இந்த மூன்று படங்களும் அவருக்கு வெற்றியாகவே அமைந்தது . இந்தநிலையில் ,மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் பாண்டிய ராஜ் .இந்த படத்தையும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை தயாரித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தப் படத்திற்கு மாஸ் கூட்டணியுடன் வரும் வெற்றிமாறன்!

பல வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி, நடிகர் சூர்யாவுடன் அடுத்தப் படத்திற்கு ஆயத்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தனது அசுரன் படத்தின் மூலமாக பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன். அதன் பின்பு வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றப்போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா விளையாட்டு

‘என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ – கோலியை புகழ்ந்த அனுஷ்கா!

தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்துள்ளதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரும் விராட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘எனக்கு என்ன உண்ணப் பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு என்னை சிரிக்கவைக்கும் என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ என்று பதிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலுக்கு வயது ஒரு தடையா, பிரியங்காவுக்கு பின் மாட்டிக்கொண்ட மலைக்கா!

இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் கபூருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மலைக்கா அரோராவை வயது வித்தியாசம் காரணமாக நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். சினிமாத்துறையில் பெரிய வயது வித்தியாசத்தில் காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் நடிகர்களை ரசிகர்கள் கேலி செய்யும் அவலம் நீண்ட நாள்களாகவே நடக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ், தமிழில் ஆர்யா – சையிஷா போன்ற நடிகர்களுக்கிடையே வெகு நாள்களாக காதலித்துவரும் மலைக்கா – அர்ஜுன் கபூர் ஜோடியும் மாட்டிக்கொண்டது. சமீபத்தில் தாங்கள் காதலிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் மீண்டும் இணைந்த ஜி வி பிரகாஷ் ….ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!!

சூரரைப்போற்று படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சூர்யா நடிப்பில் சமீபத்தில்  சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 40வது படமாகும். இதற்கான அறிவிப்பு தற்போது  வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

வாடகை வீட்டில் வசிக்கும் தீபிகா படுகோன் …!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன்.இவர் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர்

‘சத்தம் போட்டாலே நாங்க கொல்லுவோம்’ – ‘எ குவய்ட் ப்லேஸ் – 2’ ட்ரெய்லர் வெளியீடு!

ஹாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டராக அவதரித்த ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ படத்தின் இரண்டாம் பாக ட்ரெய்லர் வெளியானது. பாரமவுன்ட் பிக்சர்ஸ் சார்பில் ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ (Quiet Place: Part II) படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த ‘எ குவய்ட் ப்லேஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இப்படம் முழு நீள திகில் படமாக வெளியாகவுள்ளது. இயக்குநர் ஜான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! – அசரவைக்கும் பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்தான தகவலை வெளியிட்டார். அந்தப் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7′ திரைப்படத்தை இயக்கி நடித்த இயக்குநர் பார்த்திபன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.எப்போதும் புதிய முயற்சியில் ஈடுபடும் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.’இரவின் நிழல்’ என பெயரிடப்பட்ட அந்த படத்தை பார்த்திபன் ஒரே ஷாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரனின் செகண்ட் லுக் போஸ்டா் ரிலீஸ்.!!

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தினை ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், புத்தாண்டு ட்ரீட்டாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘சூரரைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் மாநாடு படக்குழு …!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பற்றிய முக்கிய அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார். சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

‘சப்பாக்’ படத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான் – மனம் திறந்த தீபிகா படுகோன்!

‘சப்பாக்’ திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மனம் திறந்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சப்பாக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீபிகா ஆசிட் வீச்சில் பாதிப்படைந்ததுபோல் தனது முகத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்புரவுத் தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி.!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகை கௌதமி துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்து பரிசுப்பொருள்களை வழங்கி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ் திரையுலகில் 1980களின் இறுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துள்ளார். திரைப்பயணம் தவிர்த்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையமான ‘லைஃப் அகைன்’ என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்திவருகிறார். படத்தின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, […]

Categories
இந்திய சினிமா சினிமா

வயது முதிர்ந்த தோற்றத்தில் திலீப் எடுக்கும் புதிய அவதாரம்..!!

மலையாள ஜனப்பிரிய நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம்வரும் நடிகர் திலீப் நடிக்கும் ‘கேஷு ஈ வீடின்டே நாதன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப், எந்த ஒரு காதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வல்லமை படைத்தவர். தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் மலையாளத் திரையுலகில் தனித்து நிற்கும் திலீப், வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள மை சான்டா திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புலி வேட்டைக்குத் தயாராகிய ‘ரேஞ்சர்’ சிபிராஜ்

சிபிராஜ் நடிப்பில் தரணிதரன் இயக்கும் ‘ரேஞ்சர்’ திரைப்படம் பற்றிய புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிபிராஜ் நடிப்பில், ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி படங்களின் இயக்குநர் தரணிதரனின் இயக்கத்தில், உருவாகிவரும் படம் ‘ரேஞ்சர்’. மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் மனிதர்களைக் கொன்று தின்று மாமிச வேட்டையாடிவந்த அவ்னி எனும் புலி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவத்தை கதைக்களமாகக்கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. இதில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கியக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரக்கார்’ அவதாரம் – ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு..!!

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லால் – இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்ட பொருள்செலவில் உருவாகிவரும் திரைப்படம் ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜாமோரின் கடற்படைத் தலைவரான குஞ்ஞாலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்டார் நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சுசீந்திரன்.!!

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்களது ரசிகர்களுக்குப் புத்தாண்டு ஏற்படும் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுவரை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் புத்தாண்டிலாவது யாரும் விபத்தினால் மரணம் அடையக்கூடாது என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த த்ரில்லர் ரெடி.!!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிவரும் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக தனது தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தை இயக்கிவருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, ஊட்டியில் பனிசூழ்ந்த சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கிடையே 30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்தான லுக்… புத்தாண்டில் மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்… கொண்டாடும் ரசிகர்கள்.!

லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தளபதி 64’. படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவித்தவுடனே படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. படத்தின் தலைப்பு இன்னும் வைக்கப்படாமல் இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் போஸ்டரை படத்தின் தயாரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் இணைகிறாரா நடிகர் அஜித் …???

நடிகர் அஜித்குமார் டுவிட்டரில் இணைய வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யும், அஜித்குமாரும் டுவிட்டரில் இல்லை. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரை தெறிக்க விடுகின்றனர். விஜய், அஜித் நடிக்கும் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை…? – வைரமுத்து நன்றி!

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் சாதனைகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.அந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருந்தார். இதனிடையே, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்ததை அடுத்து திடீரென கவுரவ டாக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொம்மையுடன் ரொமான்ஸ் செய்யும் எஸ். ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த ஆண்டு வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் மக்களிடையே எஸ்.ஜே. சூர்யா நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான தனது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டிற்காக எஸ்.ஜே. சூர்யா காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆண்டின் இறுதியில் மக்களுக்கு இன்னொரு ஸ்பெஷலான செய்தியையும் அவர் வழங்கியிருக்கிறார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் பொம்மை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

சீக்கிரம் சொல்லுங்க… ரசிகர் தற்கொலை மிரட்டல் – ட்ரெண்டான #WeWantAnnouncementSRK.!!

#WeWantAnnouncementSRK: ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலங்கானா சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘வன்முறை’..!

தெலங்கானா பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் பின்னணியில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வன்முறை’. இப்படம் குறித்த இயக்குநரின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ… ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அர்ஷிதா ஸ்ரீதர், வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் என பலரும் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர்..!!

விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறந்தாங்கியில் எண்ட்ரி கொடுத்த குட்டி நிஷா..!!

சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பிரபல சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே நிஷாவுக்கும் அவரது கணவர் ரியாஸ் அலிக்கும் பள்ளி செல்லும் மகன் இருக்கிறார். சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சி, திரைப்படங்கள் என பிஸியாகவே இருந்த நிஷா, ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது சொந்த ஊரான அரந்தாங்கியில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நிஷாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!

திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜில் ஜில்.. கூல் கூல்..! ‘இருட்டு’ பட நாயகியின் அட்டகாசமான படங்கள்.!!

சுந்தர். சி நடிப்பில் வி.இசட்.துரை இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இருட்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்தவர் சாக்‌ஷி சௌத்ரி. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த இவர், தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருட்டு படத்தில் நடித்ததன் மூலம் அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் :   சிறுத்தை தோல் போர்த்திய கவர்ச்சிக் கன்னி […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாஃபியா குயின் கங்குபாய்ஆக வேட்டையை தொடங்கிய ஆலியா..!!

கேங்ஸ்டர்கள் வரிசையில் மாஃபியா ராணியாக வலம் வந்த கங்குபாயாக மேக்கப்போட்டு நடிக்க தொடங்கியுள்ளார் ஆலியா பட். ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படத்தின் ஷுட்டிங்கை தொடங்கியுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மும்பையைக் கலக்கய தாவூத் இப்ராகிம், ஹாஜி மஸ்தான் போன்ற டான்களின் வரிசையில் பெண் மாஃபியா ராணியாக வலம் வந்தவர் கங்குபாய் கேதேவாலி. பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் மாஃபியா கும்பலின் தலைவியாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…!!!

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்திருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தற்போது தொடங்கிய இதன் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனரான […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பொதுமக்களிடம் நாடகமாடிய நடிகை திஷா சவுத்ரி வழக்கின் கிளைமக்ஸ்…!!

பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]

Categories

Tech |