Categories
சினிமா

அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்: ட்விட்டரில் அபிஷேக் பச்சன் தகவல்

கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நடிகர் அபிசேக் கூறியுள்ளார். பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் அபிஷேக்கின்  குடும்பத்தினர் அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கடந்த மாதம் கொரோனாவில் இருந்து மீண்டு அனைவரும் வீடு திரும்பினார்கள். தற்போது அபிஷேக் பச்சன் படபிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்: […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த கண்ண பார்த்தாக்கா…. நாயும் ரசிக்கும் அனிருத் இசை….. பிரபல நடிகை ட்விட்….!!

மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும், அந்த கண்ண பார்த்தாகா  பாடல் காதலர்களுக்கு  மிகவும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. பலரது செல்போன்களில் காலர் டியூன், ரிங்டோனாக  இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், நாய் ஒன்று அந்த பாடலை  பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு நாயும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எண்டெர்டெயின்மெண்ட் ரெடி….. BIGBOSS – 4 தொடங்கும் தேதி…? வைரலாக பரவும் தகவல்….!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.  கடந்த வாரம்  ஆகஸ்ட் 27ல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள்  என அனைவரும் குஷி ஆகிவிட்டனர். மிகவும் சலிப்பாக  செல்லும் இந்த லாக் டவுன் காலகட்டத்தில் சிறப்பான என்டர்டைன்மென்ட் வந்துவிட்டது என அந்த ப்ரோமோவை  நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் நான்காம் தேதி தொடங்கும் என்றும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT-யில் மாஸ்டர்….. ரசிகர்கள் செய்த காரியம்….. மதுரை சிட்டிக்குள் பரபரப்பு போஸ்டர்….!!

மாஸ்டர் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகக் கூடாது என்பதற்காக மதுரையில் ரசிகர்கள் செய்த செயல் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறப்பதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் பல திரை பிரபலங்களின் படங்கள் திரைக்கு வராமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளன. இதைத்தொடர்ந்து, OTT தளங்களில் திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

விவாகரத்து முடிவா…? இந்த படத்தை பாருங்க….. எண்ணம் மாறிடும்…. வாழ்க்கை ஜொலிச்சிடும்….!!

இன்றைய சமூகத்தில் காதல் என்பது உணர்ச்சியைத் தாண்டி பொழுதுபோக்கான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு விட்டது. நடப்பு வாழ்க்கையில் சந்தோஷத்தை அளிக்க கூடிய காதல், பிற்காலத்தில் அதாவது திருமண வாழ்க்கைக்கு பின் கசப்பான நிகழ்வாக மாறி விடுகிறது. அதற்கான காரணம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒருவித ஈர்ப்பின் காரணமாக நேசித்து விட்டு, பிறகு ஒத்துப் போகாமல் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். நீதிமன்றங்களில் வரக்கூடிய சாதாரண வழக்குகளை விட, […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பலரது வாழ்வாதாரம் பாதிப்பு…. தியேட்டரை திறக்க யோசிங்க…. பிரபல இயக்குனர் வேண்டுகோள்…..!!

இது திரையரங்குகளை திறப்பதற்கான நேரம் என பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை விரட்ட…. நான் இதை தான் செய்தேன்….. ஜெனிலியா ஓபன் ட்விட்….!!

நடிகை ஜெனிலியா தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது இந்தியாவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ்  சாதாரண அப்பாவி ஏழை மக்கள், பணக்காரர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து வகையினரையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் மறைவு – திரையுலகினர் அதிர்ச்சி..!!

பிரபல இயக்குனர் ஏபி ராஜ் காலமானதால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல இயக்குனரும், நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையுமான ஏபி ராஜ் வயது முதிர்வினால் இன்று காலமானார். 95 வயதுடைய இவர் இதுவரை 65 மலையாள படங்களை இயக்கியுள்ளார்.. அதுமட்டுமில்லாமல் நாகேஷ் நடித்த கைநிறைய காசு, துள்ளி ஓடும் புள்ளி மான் ஆகிய தமிழ்ப் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் bridge of river kwai என்ற ஆங்கில படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.. இவரது மரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆகஸ்ட் 22” என்ன நண்பா ரெடியா….? வெய்ட்டிங்கில் விஜய் ரசிகர்கள்….!!

விஜய் 65 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு  தொடர்ந்து அமலில் இருப்பதால், பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் தற்போது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல துறைகள் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கி உள்ளன. அதில், சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு முடிந்தவுடன் பல கட்ட படப்பிடிப்பு பணிகளை விரைவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாப் 20யில்….. 4ஆம் இடம்…. “அனைவருக்கும் நன்றி” விஜய் சேதுபதி ட்விட்….!!

மிர்ச்சியில் டாப் 20யில் நான்காம் இடத்தை துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்த சேதி  பாடல் பிடித்துள்ளது.  சில மாதங்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் அண்ணாத்த சேதி என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மிர்ச்சியில் டாப் 20 பாடல்களில் இப்படத்தின் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்களுக்கு இதுதான் வேணும்…. “இயக்குனர் அடம்” 12 இடங்களில் ஆடியோ மியூட்….!!

சூரரைப்போற்று படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.  நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு மிக விரைவில் வரவுள்ள சூரரைப்போற்று படத்திற்கான சென்சார் போர்டு 12 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் தரக்குறைவான வார்த்தைகளும், வசனங்களும் வருவதால் இந்த திரைப் படத்திற்கு யு சான்றிதழ் வழங்க முடியாது என சென்சார் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இயக்குனர் சுதாவிடம் சென்சார் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதில், இயக்குனர் தங்களுக்கு யு சான்றிதழ் வேண்டும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கலங்கிய திரையுலகம்” ப்ளீஸ் PRAY பண்ணுங்க…. நடிகர் தனுஷ் வேண்டுகோள்….!!

பிரபல பாடகர் எஸ்பிபி கொரோனவிலிருந்து மீண்டுவர, ஆண்டவனை வேண்டிக் கொள்ளுமாறு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் விரைவில் மீண்டு வர […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சுஷாந்த் மரணம்” ஆலியாபட் படத்திற்கு குவியும் வெறுப்பு…. பாலிவுட்டில் அதிர்ச்சி…!!

ஆலியா பட் நடிப்பில் வெளியாக இருக்கும் சதக் 2 படத்திற்கு 22 மணிநேரத்தில் 4.5 மில்லியன் கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாலிவுட்டில் ஆலியா பட் நடிப்பில் வெளியாகியிருக்கும் சதக்2 படத்தின் ட்ரெய்லர் வெளியான 22 மணி நேரத்தில் 4.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர்க்கான டிஸ்லைக் இன்னும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இது ஆலியா பட் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி மக்களிடையே இந்த ட்ரெய்லர் வெறுப்பை சம்பாதித்ததற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாகிட்ட பக்குவம் இருக்கு….. “பதற்றம் இல்லை” வைரமுத்து புகழாரம்….!!

தனக்கு எதிராக பேசுவோர் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என சூர்யா கூறிய கருத்தை பாராட்டி வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக விளங்கி வருகிறார் மீரா மிதுன். நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தினர் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார். இதனால் டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. இந்நிலையில் இதற்கு நடிகர் சூர்யா, தன்னை விமர்சிப்பவர்களுக்கு  எதிராக எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரம் நட கத்துக்கோங்க…. விஜயை சீண்டும் மீராமிதுன்…. கொந்தளிப்பில் ரசிகர்கள்…!!

நடிகர் விஜயை மீண்டும் சீண்டும் விதமாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலமான மீராமிதுன் சமீப நாட்களாக நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை தாக்கிப் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது குறித்த பல கேள்விகளை பல பிரபலங்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல் நடிகர் சூர்யாவும் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நானும் மனுஷன் தான்….. 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் TREND… அதிரும் ட்விட்டர்….!!

இணையதளத்தில் ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விஜய் அளித்த பதில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.  பிரபல நடிகரும் மக்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணங்களில் ஒன்று, நடிகர் விஜய் எதிரியையும் நேசிக்கக் கூடிய ஒருவர். நம்மை யார் வெறுத்தாலும் ,அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை எனில் அவர்களை விட்டு சற்று விலகி இருப்போம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாகும் போஸ்டர்….. ஆகஸ்ட் 14இல் ரிலீசாகும் மாஸ்டர்…? வெளியான விளக்கம்…!!

ஆகஸ்ட் 14-ல் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து வைரலாகும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சூர்யாவின் சூரரைப்போற்று, நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம், இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பைபோலார் டிஸ்ஆர்டர்….. வலியில்லா மரணம்…. சுஷாந்த் மரணத்தில் வெளியான முக்கிய தகவல்….!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி நிமிடங்கள் குறித்து மும்பை காவல்துறை பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரை அவர் குறித்த எந்த செய்தியை கேட்கும் போதிலும், அவர் குறித்த வீடியோக்களை பார்க்கும் போதிலும் மக்கள் மத்தியில் சோகம் நீங்காமல் நிற்பதை உணர முடியும். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கற்பழிப்பு மிரட்டல்….. எனக்கு ஏதாச்சும் ஆனா சூர்யா தான் பொறுப்பு…. மீரா மிதுன் சர்ச்சை கருத்து…!!

எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சூர்யா தான் காரணம் என மீராமிதுன் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலம் என அழைக்கப்படும் மீரா மிதுன் பிக்பாஸில் இருக்கும்போதே பல சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வைரலானவர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்பும் பல சர்ச்சை செயல்களில் ஈடுபடுவதாக சமூக வலைதள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் வீடியோக்களை பதிவிடுவார். அதில் ஏதேனும் ஒரு சர்ச்சை கருத்துக்களை அவரை பாலோ  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி.!!

பிரபல சின்னத்திரை நடிகையான நவ்யா சுவாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.. கொரோனா  தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றது. இதற்கிடையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்காமல் தொற்றி கொண்டு வருகிறது.. அந்த வகையில், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் தொடர் மூலம் பிரபலமான, சின்னத்திரை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இணையத்தை கலக்கிய டான்ஸ்… அசத்திய நடிகை வேதிகா… வைரலாகும் வீடியோ..!!

நடிகை வேதிகா  டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் மதராசி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து முனி, காளை, சக்கர கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் இவர் நடித்த பரதேசி மற்றும் காவியத்தலைவன் போன்ற படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. கடைசியாக இவர் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவானார் பிக் பாஸ் டேனியல்… குவியும் வாழ்த்துக்கள்…!!

நடிகர் டேனியல் தனக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் டேனியல்.. இந்த படத்தைத் தொடர்ந்து மரகத நாணயம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்துள்ள டேனியல் பிக் பாஸ் 2ஆவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது காதலியான டெனிசா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லவ் பண்ணி தான் கல்யாணம் செய்வேன் – பிரபல நடிகை ரீது வர்மா..!!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரீது வர்மா காதலித்து திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரீது வர்மா.. குறிப்பாக தமிழில் கடைசியாக இவர் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் செம ஹிட் ஆனது.. இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் உருவானார்கள்.. தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் ரீது வர்மா சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகளை தொட முடியல… கட்டிப்பிடிக்க முடியல… அறையில் தவிக்கும் நடிகை…!!

தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தன்னுடைய மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை அஞ்சலி நாயர் கூறியிருக்கிறார். ஆடுஜீவிதம் பட ஷூட்டிங்குக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது தனிமைப்படுத்தல் காலம் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்து பார்த்த போது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை சந்தித்து மகிழ்ந்தார். அதேபோல போல் வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

ஜி.வி.பிரகாஷ்குமார் பற்றி அறியாத சில தகவல்கள்…!!

ஜிவி பிரகாஷ் ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987இல் சென்னையில் பிறந்தவர் இவருக்கு பிடித்தமான நடிகர் தல அஜித்குமார் ஜிவி பிரகாஷ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ,மராத்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் முதல் முதலாக சினிமா துறையில்  அடி எடுத்து வைத்த திரைப்படம் ஜென்டில்மேன். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலில் அறிமுகமாகி இருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும், இயக்குநராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருபவர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்றே கணித்த சூர்யா… வலைத்தளத்தில் வைரலாகும் டிக் டிக் தகவல்..!!

கொரோனா ஊரடங்கால் தற்போது உலக மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களது தனிமையை போக்க சமூக வலைதளங்களே ஒரே வடிகாலாக உள்ளது.  இதனால் மீம் கிரியேட்டர்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் நெட்டிசன்களை கவர மிம் மீம் கிரியேட்டர்கள்  திரை பிரபலங்களை வைத்து பல மிம்களை உருவாக்கி உலவ விட்டு வருகின்றனர். நடிகர் சமுத்திரகனி தமிழ் கன்னட ரீமேக் படங்கள் என  பல விஷயங்கள் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டன்டுகளாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை விட(விஜய்)…. விஷால் தான் சரியாக இருப்பார்…. தளபதி குறித்து இயக்குனர் ஓபன் டால்க்…!!

சண்டைக்கோழி படத்தை நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், ராஜ்கிரன் உள்ளிட்டோரின் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சரித்திர வெற்றியை கொடுத்த திரைப்படம் சண்டைக்கோழி. விஷாலின் சினிமா வெற்றிப் பயணத்திற்கு இந்த திரைப்படம் தான் மையப்புள்ளியாக இருந்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யா அல்லது விஜய் இருவரில் ஒருவரை வைத்து இயக்கலாம் என நினைத்து இருவரிடமும் கதையை கொண்டு சேர்க்க நினைத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் சில காரணங்களால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ்கின் இயக்காத படத்தை வாங்கமாட்டோம்…. திரையரங்கு உரிமையாளர்கள் பதிலால் ஷாக்கான விஷால்…!!

மிஸ்கின்இயக்காத விஷாலின் படத்தை வாங்க மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  சமீபத்தில் விஷாலின் மார்க்கெட்டை சரமாரியாக ஏற்றிய படம் என்றால் அது துப்பரிவாளன் தான். இந்த படத்திற்கு நிகராக விஷாலின் எந்த படமும் வெற்றி பெறவும் இல்லை. வரவேற்பு பெறவுமில்லை. இதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் இரும்பு திரை படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தற்போது இதே போன்று மறுபடியும் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் பேச்சு வேண்டாம்…. தளபதியை மறைமுகமாக கண்டித்த பிரபல தயாரிப்பாளர்…!!

அரசியல் பேசுவது சரியான வழிமுறையல்ல என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்>  தமிழ் சினிமாவில் அதிகம் மார்க்கெட் கொண்ட நடிகராக தற்போது தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் திகழ்ந்து வருகிறார். இவருக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு என சில வட்டாரங்கள் தெரிவித்து வந்த போதிலும், அதனை விஜய் நேரடியாக இதுவரை கூறியதில்லை. அவர் சமீபகாலமாக ஆடியோ விழாக்களில் அரசியல் பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும்  தெரிவித்து வரும் சூழ்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான்60” PART-2வின் அசால்ட் சேதுவா விக்ரம்….? இயக்குனர் பதிலுக்காக ரசிகர்கள் WAITING…!!

சியான் 60 திரைப்படம் ஜிகர்தண்டாவின் part 2 ஆகா இருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது ட்விட்டரில் சியான் 60 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்து ள்ளனர். இந்த படத்தை விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நிறுவனமான செவன்  ஸ்க்ரீன் தயாரிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலையில் படுதோல்வி….. மாலையில் சூப்பர் ஹிட்….. பிரபல இயக்குனரின் வாழ்க்கையை மாற்றிய படம்….!!

பிரபல இயக்குனரின் வாழ்க்கையை மாற்றிய படம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் படங்கள் மற்ற இயக்குனர்கள் படங்களை விட பெரிதளவில் வித்தியாசமாகவே இருக்கும். அதற்கு உதாரணமாக புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை கூறலாம். ஆயிரத்தில் ஒருவன் சோழர் காலத்து கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.  ஆரம்பத்தில் அந்த படம் பெரிதாக தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை  என்றாலும், தற்போது அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

12 ஆண்டுகள் கழித்து…. வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

12 ஆண்டுகள் கழித்து சாய்பல்லவி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக திகழ்ந்து வருபவர் சாய்பல்லவி.சமீபத்தில்,  தமிழில் மாரி 2 படத்தில் நடித்துள்ளார். மீண்டும் தமிழில் எப்போது நடிப்பார் என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகை சாய் பல்லவி குறித்து ஒரு செய்தியும், அவரது புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், ஜெயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்விட்டர் அப்புடினா என்ன….? பிரபல நடிகர் வீடியோவால்…. சமுகவளதளத்தில் சர்ச்சை….!!

சமீபத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் பெயரில் டுவிட்டர் பக்கம் ஒன்று ஓபன் செய்யப்பட்டு வைரலாகி வரும் சூழ்நிலையில், டுவிட்டர் என்றால் என்னவென்றே  எனக்குத் தெரியாது என அவர் கருத்து தெரிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடைபெற்று  வரக்கூடிய கோளாறு என்னவென்றால், பிரபலங்கள் நிறைய பேர் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி இருக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கும் நபர்களின் பெயர் பட்டியல்களை கண்டறிந்து அதிக followersகளை  பெற […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“நான் அவன் இல்லை” கோதுமை மூட்டைக்குள்….. ரூ15,000….. அமீர்கான் விளக்கம்…!!

கட்டுக்கதைகளை நம்பி ஏமாற வேண்டாமென பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் அன்றாட வாழ்க்கையை வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தியவர்கள் அனைவரும் ஒருவேளை உணவுக்காக கூட கஷ்டப்படும் சூழல் என்பது ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

படமே ரிலீஸ் ஆகல…… எனக்கு எதுக்கு சம்பளம்…… 25% விட்டுக்கொடுத்த நடிகர்…. குவியும் பாராட்டு….!!

2020 இல் ரிலீஸ் ஆக விஜய்  ஆண்டனியின் திரைப்படங்கள் வெளியாகததால்  அவர் தனது 25% சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு சிலதளர்வுகளை கணக்கில் கொண்டு ஆங்காங்கே கடைகள் திறக்கப்படும். இந்நிலையில் திரையரங்கம், திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு  அதிகக் கூட்டம் கூடும் சூழல் உள்ளது என்பதால்,  அவற்றுக்கு மூன்று மாத காலத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பேட்டிங்ல மட்டும் கில்லாடி இல்ல”… ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு மனைவியுடன் டான்ஸ் அடி அசத்திய வார்னர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன், ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் தான் ‘அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள  இப்படத்தில்  தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

ஜோ கருத்தில் உறுதியாக இருக்கின்றோம் – தூள் கிளப்பிய சிங்கம் சூர்யா …!!

நடிகை ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது.இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். சுமார் இருபது நாட்களுக்கு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சேமிப்பு இல்லை” ஊரடங்குக்கு பின் கடைகளை திறக்க வேண்டாம்….. யோகி பாபு கருத்து….!!

மூடிய மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆகவே ஊரடங்கு முடிந்தபின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சொன்ன பூரண மதுவிலக்கை கருத்தில் கொண்டு, மதுபான கடைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோவம் இருந்தா…. என்ன மட்டும் திட்டுங்க….. தமிழ் மக்களுக்கு துல்கர் சல்மான் ட்விட்….!!

வரனே அவஸ்யமுண்ட்  என்ற திரைப்படத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக தமிழக மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார். துல்கர் சல்மான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடித்து வெளியான வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தின் தலைப்பு கேப்டன் பிரபாகரனை  இழிவுபடுத்துவது  போல் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.  துல்கர் சல்மானுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் திட்டமிட்டு தலைப்பை வைக்கவில்லை.தவறாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவை தொடர்ந்து…. மகனுக்கும் வில்லனாகும்….. விஜய் சேதுபதி….!!

நடிகர் விஜய்சேதுபதி இளைய தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவரது மகனுக்கும் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. தெலுங்கு நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது இதனுடைய புதிய அப்டேட்டாக இந்த படத்தில் கதாநாயகனாக இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாகவும், இதிலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டில் முடங்கிய நிலையில்… நடிகை திரிஷா செய்வதை நீங்களே பாருங்க… வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை திரிஷா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்பு உட்பட அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது என தினமும் எதையாவது செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சொன்ன பதில்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறீங்களோ அவங்க என்னிடம் சொல்லலாம் என்று பிரபல சீரியல் நடிகை சித்ரா தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.. விஜே வாக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கிய சித்ரா தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார். நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர் மற்றும் மாடலிங் என பன்முகத்திறமை கொண்ட சித்ரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகத்தில் விஜய்…… கால் செய்து ஆறுதல் கூறிய தல…. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜயின் மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதை அறிந்த அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவரது மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன்படி பார்க்கையில், கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்துள்ளார். படிப்பதற்காக கனடா சென்ற சஞ்சய் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனியாக இருக்கும் உங்கள் வீட்டில்… இது எப்படி வந்தது?…. கூர்ந்து பார்த்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் புகழ்  நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி கிடக்கும் சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது என எதையாவது செய்து தங்களது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கில் முத்தம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்… யாருக்கு தெரியுமா?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சார்மிக்கு முத்தம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். படையப்பா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன், பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ராஜ மாதாவாக நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… உயிரிழந்த உறவினர்…. உருக்கமாக பதிவிட்ட இலியானா!

நடிகை இலியானா தனது உறவினர் உயிரிழந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்தவர் இலியானா. அதை தொடர்ந்து ’கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யுடன் ’நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந்நிலையில் இலியானாவின் மாமா சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் அதிகமான படங்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ரெடி… ஓகே சொன்ன நடிகை இவர்தான்!

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் ‘அருவா’ படத்தில் இளம் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதையடுத்து அவர் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள  ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் யாரையெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த காலத்தில் நான் அங்கு போயிருக்க கூடாது… தவறு செய்து விட்டேன்…. அனுபவத்தை பகிர்ந்த டாப்சி!

நடிகை டாப்சி முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர். ஓய்வில்லாமல் எப்போதும் கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், தற்போது வீட்டில் முடங்கியுள்ளதால் ஏதாவது செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

ரஜினி…. அமிதாப்…. நமக்கு பொறுப்பு இருக்கிறது…. சுகாதாரதுறை வேண்டுகோள்….!!

கொரோனா குறித்து பேசும் முன் நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதார அமைப்புகள் நட்சத்திரங்களுக்கு வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவோர் மீது சுகாதார அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல நட்சத்திரங்களும் கொரோனா குறித்து அவ்வப்போது தவறான செய்திகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட ரஜினி, அமிதாப் ஆகியோர் கொரோனா குறித்து பேசியது தவறான செய்தி என்பதால் அதனை […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

மீனவர்களுக்கு உதவியது எனக்கு மகிழ்ச்சி… தமிழக முதல்வருக்கு நன்றி – பவன் கல்யாண்!

ஆந்திராவைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு தகுந்த உதவிகள் செய்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க […]

Categories

Tech |