ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மைசூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு சென்ற பொறியாளர்கள் கோளாறை சரிசெய்தனர். 42 பயணிகள் கொண்ட விமானத்தில் பயணம்செய்ய நடிகர் ரஜினிகாந்தும் காத்துக் கொண்டிருந்தார். பின்னர், இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் இயக்கப்பட்டு சென்னைக்குச் சென்றடைந்தது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். […]
Tag: cinema
நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது […]
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘FIR’ திரைப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் ஆகியோர் நடிக்கும் படம் ‘FIR’. இத்திரைப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் முக்கியக் கதாபாத்தரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். கௌதம் மேனன் இதுவரை பல படங்களிலும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் மிக […]
2009இல் வெளியாகி ட்ரெண்ட் செட்டராக மாறிய ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்ட நிலையில், தற்போது புரட்சிகர காட்சிகளுடன் கூடிய அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி – சசிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிக்குமார், பரணி, நமோ நாரயணா உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி, […]
’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியில் முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த ரன்வீர் சிங், நடிகர் ஜீவாவுடன் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் வெளிப்படுத்தினார். உலகநாயகன் கமலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது ஃபேவரிட் நடன அசைவுகளை நடிகர் ஜீவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து ஆடியுள்ளனர். ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்திருந்தனர். 1983ஆம் […]
ரசிகர்களின் நிலையான அன்பை பெற்றிருக்கும் நான் ட்விட்டரில் எதிர்காலத்தில் அவர்களிடம் உரையாடுவேன் என்று ‘ட்விட்டர் ஸ்டார்’ விருது பெற்ற பின் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார். டோலிவுட்டின் ‘ட்விட்டர் ஸ்டார்’ என்ற விருது ’ஸீ திரை விருதுகள்’ நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. ’ஸீ திரை விருதுகள் தெலுங்கு 2020’ நிகழ்ச்சியில் டோலிவுட் சினிமா என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாக்களில் ஜொலித்த […]
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசிப் பெற்றார். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. அனிமேஷன் துறையில் ஆர்வமுள்ள இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் படத்தையும், தனுஷ் ஹீரோவாக நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கினார். பின்னர் நடிகரும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். அப்போது அவர் திருமண கோலத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளிட்டு […]
தமிழில் வெண்ணிலா கபடிக்குழு நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனுக்கு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். அதை தொடர்ந்து அவர் இயக்கிய பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தன. கடைசியாக சுசீந்திரன் சாம்பியன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தநிலையில் இயக்குனர் சுசீந்தரன் விபத்தில் காயமடைந்துள்ளார். நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது […]
நடிகர் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியாகவில்லை. இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘மாஃபியா: சாப்டர் 1’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா […]
குழந்தைகள் தவறான பாதையில் செல்வதற்கு இணையதளமும் ஒரு காரணம். அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு தேவை என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியிருக்கிறார். ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பெற்றோர்கள் தங்களது குழந்தைளோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான நடிகர் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து சேரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் அனைத்து பெற்றோர்களும் பயந்து கொண்டிருக்கும் விஷயம் குறித்த படமாக ‘ராஜாவுக்கு செக்’ அமைந்துள்ளது. நம் […]
ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இறுதியில் […]
சைக்கோ திரைப்படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சைக்கோ படம் நேற்று வெளியானதையடுத்து அப்படத்தில் நடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பிரசாத் லேப்பில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சைக்கோ படத்தின் முதல் காட்சிக்கு மக்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்தது. இதுக்கு காரணம் இயக்குநர் மிஷ்கின்தான். ரசிகர்களுடன் சேர்ந்து நான் படம் பார்த்தேன். நான் நினைக்காத […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் தீம் சாங்கான ‘மாறா’ வெளியாகியுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், […]
கிரிக்கெட் வீரர் விராத் கோலி போல் ஆக்ரோஷ தன்மைக்காக பல்வேறு விமர்சனங்களை தான் சந்தித்திருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கும் தனக்கும் இடையே பொதுவான தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “எனக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவரும் நானும் வெவ்வேறு பின்புலத்தில் உள்ளோம். தனது தனித்துவத்தால் அவர் பெயர் […]
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் பதிவான வாக்குகளை எண்ண கூடாது […]
ரஜினிகாந்தை பெறுத்தவரை யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. அவரை திட்டுபவர்களைக் கூடபதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர் என ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதளத்தில் கூறியுள்ளார். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல அரசியல் கட்சியின் தவைவர்கள் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவுத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று […]
தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா, கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பரபரப்பான நடிகையாக இருக்கிறார். ஒல்லியான வாட்டசாட்டமான தேகம் என தனது வளைவு நெழிவுகளால் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் அம்மணி. தெலுங்கில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீசாகிறது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் […]
ஜேம்ஸ் பாண்ட் பட படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது. ஜேமஸ் பாண்ட் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயத்துக்கு உரிய இழப்பீடு தர படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 2015இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜேமஸ் பாண்ட் சீரிஸ் படம் ‘ஸ்பெக்ட்ரே’. இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் டெர்ரி மேடன். ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஸ்பெக்டரே படத்துக்கான அதிரடி சண்டைக் காட்சி […]
தயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் என அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். டபுள் […]
நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார். ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை […]
பெரியார் ஒரு சாதிக்கு மட்டும் தான் எதிரானவர் என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் […]
தாராள பிரபு படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படம் தாராள பிரபு. ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்க்காக இப்படம் உருவாகியுள்ளது. விந்து தானம் மற்றும் குழந்தையின்மை அகியவற்றை அடிப்படையாக வைத்து உருவாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தை தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வருகிறார். இந்த நிலையில் இப்படத்திற்காக மொத்தம் 8 இசைமைப்பாளர்கள் தேர்வு […]
ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்ற நடிகர் சைஃப் அலி கானின் கருத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்று நடிகர் சைஃப் அலி கான் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் அவரைக் கடுமையாக சாடி கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சைஃப் அலி கான் போன்றவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு, குறுகிய கண்ணோட்டத்துடன் இதுபோன்ற […]
இந்திய திரைத்துறையில் வழங்கப்படும் முக்கிய விருதான தாதா சாஹேப் பால்கே இன்டர்நேஷனல் விருதை நடிகர் கிச்சா சுதீப் பெற இருக்கிறார். தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ , ‘ரத்த சரித்தரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சுதீப். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்தியத் திரைத்துறையில் […]
பெரியார் குறித்த பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுப்பதால் அவரது வீட்டிற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் ஒருபோதும் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேனென கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டை […]
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார். பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்று உறுதியாக சொல்ல முடியும். இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலாபால் , விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் ‘ஆடை’ […]
நடிகர் ரஜினிகாந்த் விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் என்று நக்கல் செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
1971ல் நடந்த பேரணி குறித்து இல்லாத ஒன்றை பேசவில்லை என்றும், பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினி முற்றிலும் […]
லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகிள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சரவணன் அருளின் படம் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் பாடல்களை கவிஞர் பா. விஜய் எழுதுவதாக படக்குழு அறிவித்தது. பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் இணைந்தது குறித்து பா. விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்தார். அதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷனில் பணிபுரிய தான் […]
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘பிகில்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, சஞ்சீவ் என்று இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் ஷிமோகா போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது […]
பிரேம்ஜி இசையமைக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் குரல் தமிழில் இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படத்தில் ஒலித்தது. ‘லம்போதரா’ என்ற கன்னடப் படத்திலும் ‘கேடி’ என்ற பாடலை அவர் பாடியிருந்தார். இந்த நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி இசையமைக்கும் புதிய படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பிரேம்ஜி தற்போது வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படத்திலும், […]
தனது இல்லீகல் வெப்பன் 2.0 (Illegal Weapon 2.0) பாடலின் வெற்றியை முன்னிட்டு அப்பாடலின் காட்சி ஒன்றை நடிகை ஸ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதகளம் செய்தது. இதற்கு முன்பாக ஸ்ரத்தா கபூர் நடித்த ‘ஏபிசிடி- 2’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமான ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ படத்திற்கும் […]
‘என்னை ஒரு ஹீரோவாக வைத்து அழகு பார்க்கும் இந்த சமூகத்திற்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்துக்கொண்டே இருக்கும்’ என்று விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் விஷால் சினிமாவில் நடித்துக்கொண்டே தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத ஏழை, எளிய மாணவ, […]
அஜய் தேவ்கான் நடிக்கும் ‘மைதான்’ திரைப்படத்தில் நடிக்க புதிதாக நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க ஒப்பமாகியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக பிரியாமணி நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி, இந்தி இணையத் தொடரான ‘த ஃபேமிலி மேன்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘மைதான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பிரியாமணி. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து […]
‘அதோ அந்த பறவை’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகை அமலா பால் பேசியபோது, ‘கிராமகா’ என்ற தற்காப்புக் கலை கற்றுக்கொண்டது தொடர்பாக தனது மனம் திறந்த கருத்தைப் பதிவிட்டுள்ளது பெண்கள் மத்தியில் ஒருவித உத்வேகத்தை உண்டாக்கியுள்ளது. நடிகை அமலா பால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமான ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் இயக்குநர் கே.ஆர். வினோத், தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகர் எஸ்.வி. […]
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எடுக்கப்படும் ‘த மாயன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டனர். ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ், ஜி. வி. கே. எம் எலிபண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘த மாயன்’. இந்தப் படத்தை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஷாலை வைத்து இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் ஆதிக் […]
பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே […]
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் புதிய படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ‘பாகுபலி’, ‘சாஹோ’ படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ஜில்’ பட இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கோபி கிருஷ்ணா மூவிஸ் யூவி கிரேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மேலும் மற்ற மொழிகளிலும் இந்த […]
ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ’பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு வடிவேலுவின் பிரபல டயலாக்கான ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்பதை தலைப்பாக வைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பயண கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். […]
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா வருமானத்திற்குப் புறம்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் காம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கேவரு’, அல்லு அர்ஜுனுடன் ‘அல்லு வைகுந்தபுரமுலு’ படத்திலும் நடித்திருந்த இவர் […]
ரஜினியின் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரூ 150 கோடியை கடந்து ஒடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தை ஏ .ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார் .இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த […]
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் ‘டாணா’. இதில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா, ஹரிஷ் பெரேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டாணா’ என்பதற்கு போலீஸ் என்று பொருள். போலீஸ்காரர்களை டாணாக்காரார்கள் என அழைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பாரம்பரிய போலீஸ் […]
85 வயது பாட்டி வேடத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் தோன்றவுள்ளாராம் நடிகை காஜல் அகர்வால். ‘இந்தியன் 2’ படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். மும்பையில் நடைபெற்ற சர்வதேச புகழ் சுப்பிரமணியன் கோபால்சாமி, ஞானதீக பொன்னுசாமி ஆகியோரின் ஓவியக் கண்காட்சிக்கு வருகைதந்தார் நடிகை காஜல் அகர்வால். அப்போது பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அப்போது ‘இந்தியன் 2’ படத்தில் 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக உலாவரும் தகவல்களுக்கு அவர் […]
முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார். முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சிறந்து வேகப்பந்துவீச்சாளருமான ஜுலன் கோஸ்வாமி 2008-2011 காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தியுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளையும் ஜுலன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை […]
குரங்கிடம் கடி வாங்கி கடுமையாக காயம்பட்டாலும், தைரியமாக மீண்டும் படப்பிடிப்பில் நடித்த சுவாரஸ்யக் கதை பற்றி கூறியுள்ளார், நடிகை சல்மா ஹயேக். குரங்கிடம் கடிவாங்கி காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார், ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக். அமெரிக்காவில் பிரபல பத்திரிகையான வோக், 53 வயதாகும் சல்மா ஹயேக்கின் மிகவும் சிறப்பான ஃபேஷன் தருணங்களைக் குறிப்பிடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் 1996ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனது 13 வித்தியாசமான தோற்றங்கள் குறித்து […]
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; […]
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தர்பார் படம் இன்று வெளியானதையொட்டி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், ‘தர்பார்‘ படம் வெளியானது. பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியான ‘தர்பார்’ படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நட்பு பாராட்டினார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தனாஜி தி அன்சங் வாரியர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார். இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, ‘கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் […]
லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தர்பார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் வெளியிட […]