தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மனித சங்கிலியின் ஒரு பகுதியாக சென்னையில் 40 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்மனித சங்கிலியில் தமிழகத்தின் […]
Tag: Citizenship Amendment
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் […]
ஷஹீன்பாக் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்த ஜேஎன்யுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹீன்பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் டெல்லி காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் […]
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) என்ற போர்வை மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) மத்திய அரசு செயல்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் எச்சரித்துள்ளார். குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த வேளையில், மற்றொரு விவகாரமும் பூதாகரமாக எழ தொடங்கியுள்ளது. அண்மையில் அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு (என்.ஆர்.சி.) விவகாரம்தான் அது. அசாமில் நடத்தப்பட்ட இந்தக் […]
குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய , இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போராட்டம் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல […]