Categories
அரசியல் மாநில செய்திகள்

சி ஏ ஏ-வுக்கு எதிராக மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் சென்னை கொண்டித்தோப்பு, மண்ணடி தப்பு செட்டி தெருவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள் நாட்டை பிளவுபடுத்தியவர்கள்’

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போரட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 70 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யு-வில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பேருந்துகளும் மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

 மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் சார்பிலும், இன்று பல்கலைக்கழக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மாணவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து DYFI அமைப்பினர் கண்டன பேரணி…!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அப்படி பேசாதீங்க…. ”வாபஸ் வாங்குங்க C.M”…. மம்தாவிடம் ஆளுநர் சரண்டர் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். அக்கருத்துக்கு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்துப் […]

Categories
தேசிய செய்திகள்

‘சி.ஏ.ஏ. நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதி’ – சந்திரசேகர ஆசாத்

நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் டெல்லி தாராகஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகக் கூறி காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பலமுறை சிறை சென்றாலும் அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் : மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டமான பதிலடி …!!

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் காட்டமான பதிலடி கொடுத்தார். சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதையடுத்து அதிமுக கழக உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து தி.மு.க. உறுப்பினர்களுக்கு காட்டமாக பதிலளித்தார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் உங்களின் எதிரி அல்ல ….. ஜன.25இல் முதல்வரின் முக்கிய சந்திப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை முதலமைச்சர் பழனிசாமி ஜன. 25ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதி போராட்டம்: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக ஜனவரி 30ஆம் தேதி மாபெரும் அமைதி போராட்டத்தை நடத்தவிருப்பதாக ஐக்கிய இஸ்லாமிய நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. ஐக்கிய இஸ்லாமிய நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் அகமத் கான், அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் தலைவரும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வரும் 30ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”திருப்பி அடிக்கும் பாஜக” முதல்வருக்கு எதிராக தீர்மானம்…. தேசிய அரசியலில் பரபரப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்ம ராவ் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய […]

Categories
சேலம் தர்மபுரி திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு” பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் …!!

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : மாணவர்களே…. ”பயப்படாமல் போராடுங்கள்”…. கவனத்தை ஈர்த்த முதல்வர் …!!

குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமை பதிவேட்டுக்கு எதிராக மாணவர்கள் பயமின்றி போராட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிராக நாடுமுறுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகம் , உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலத்தில் வன்முறை சம்பவமும் , அடக்குமுறையும் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் சார்பாக டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இணை ஆணையர் அலோக் குமார், “மத்திய ஆயுத காவல்படை வீரர்கள் வடகிழக்கு மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எந்த சூழ்நிலை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கு எங்களிடம் படை உள்ளது” என்றார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம்…!!

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில் பல்கலைகழகத்திற்கு டிசம்பர் 23-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டகளத்தில் குதித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் […]

Categories

Tech |